Announcement

Collapse
No announcement yet.

loan to men-3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • loan to men-3

    மனம் தான் பந்தத்திற்கும் மோக்ஷதிற்கும் காராணம். மனம் ஆசைகள் நிறைந்தது இந்த மனமே உடல் முழுவதும் நிறைந்து அதற்கு உயிரை கொடுத்து இயக்கவும் செய்கிறது.

    ஆசைகள் அதிகரிப்பதால் தேவைகள் அதிகமாகிறது. இதனால் மனக்கஷ்டம். தேவைகளை குறைத்துக்க்கொண்டால் மனம் நிம்மதி யாகிறது.ஆசைகளை அடக்கினால் மனம் அடங்கும்.


    மனதின் நாட்டம் உலக பொருட்களில் குறைய குறைய மனதின் நாட்டம் ஆத்மனில் அதிக மாகிறது .மனம் ஒருமுக படும்போது ஆன்மீக பயிற்சிகள் வலுவடைகிறது/..


    உயிருக்கு உரம் கொடுப்பது உண்மை என்றால் என்றும் நிலைத்திருக்கும் தன்மை , இதுவே சத் எனப்படும். மண் பாண்டங்கள் வெவ்வேறாக இருந்தாலும் களிமண் ஒன்றே . நகைகள் பல விதம் ஆனால் தங்கம் ஒன்றே.


    இந்த ஜட தேகத்தால் மனதை அறிய முடியாது. மனதை மனதால் அறிய முடியும்.. . வ்யஷ்டி மனம் தான் ஜீவ ராசிகள். சமஷ்டி மனம் விரா என்றும், வைஸ்மாநரன் என்றும் சொல்வார்கள்.


    வெளி விஷயங்களிலிருந்து மனதை அடக்குவது “”சமம்”. அதே விஷயங்களிலிருந்து கண், காது முதலிய புலன்களை “தமம்” அடக்கப்பட்டு புலன்களை மறுபடியும் விஷயங்களில் செல்லாதப்படி தடுத்து நிறுத்துவது “உபாதி” இயற்கையாக ஏற்படும் குளிர், வெப்பம் முதலியவைகளால் ஏற்படும் இன்ப துன்பம் இவைகளை சகித்து கொள்வது “திதிக்ஷை” எனப்பெயர்.


    அறிவு மூளையை சேர்ந்தது அன்பும் அருளும் மனதை சேர்ந்த்து உலகில் பல இயக்கமுண்டு…இந்த இயக்கம் கடிகார பென்டுலம் போன்றது. நாடு, இனம், ஜாதி, சமயம்,. மொழி, நாகரீகம்,நிறம், கலை ,யாவும் கடிகாரத்தின் எண்கள்.


    அன்பும் அருளுமே சுழலும் இருமுள்கள். .


    மனம் என்ற விசையால் இயக்கம் என்ற பெண்டுலம் மிதமாக ஆட வேன்டும்.


    மணி ஓசையினால் இன்ப துன்பமுண்டு. பள்ளிக்கூட/ ஆலை ///மாணவர்கள்/ தொழிலாளிகளுக்கு துவக்க மணி துன்பம்/ வீடு செல்ல அடிக்கும் மணி இன்பம். ஒரே மணி, ஒரே ஓசை..ஆனால் அதை நோக்குவதில் மாறுதல்.


    மனது எந்தெந்த விஷயங்களில் செல்கிறதோ அந்த விஷயங்கள் நிரந்தர சுகத்தை கொடுக்காது. என்ற ஞானத்தாலும் அது துக்கமானது என்ற வைராக்யத்தாலும் அங்கிருந்து மனதை அகற்றி ஒரு நிலை படுத்தவேண்டும்.


    இது சிரமமான காரியம் தான்.முடியாததல்ல எப்போதும் மனதை அடக்கி ஆத்மாவிடம் நிலைக்கும் படி செய்யவேன்டும். இந்திரியம், மனது இவைகளை அடக்கி த்யானத்திலிருக்கும் போது மனம் அசையாது இருக்கும்.


    விஷய ஆசையை விட்டால் ரஜோ குணம் ஒழியும். ஆத்மாவிடம் மனதை செலுத்துவதால் ஜீவன் ப்ருஹ்ம ஸ்வரூபம் ஆகிறது. அப்போது பேரின்பம் தோன்றும்.


    தியானத்தில் மனதை நிலை நிறுத்தி , தன்னிடமுள்ள ஆத்மாவே ஸகல ப்ராணிகளிடத்திலும் இருக்கி என்று எண்ணுபவன் “சமதர்ஸி”. பகவான் கீதையில் எல்லா ப்ராணிகளிடமுள்ள என்னை யார் உபாகிக்றானோ , அவன் த்யானம் செய்தாலும் செய்யாமல் வேறு காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும் அவன் என்னிடமே இருப்பவன் ஆகிறான் என்கிறார்.


    அந்தகரணம் என்றால் என்ன. அந்தர்=உள்ளே கரணம்=பொறி அறியும் கருவி.
    அறியும் சக்தி அறிவுக்கன்றி வேறு ஒன்றுக்கும் இல்லை. அறியும் அறிவுக்கு ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் என்று சொல்லப்படும்.


    புறக்கருவிகள் பத்து இருப்பதால் அவையன்றி அவைகளுக்கெல்லாம் காரணமாகி அவன் எல்லாவற்றின் சக்தியும் தன்னில் அமைய பெற்றதாய்
    உள் முகத்தில் அறிய தக்க கருவி அந்தஹ்கரணம். வராஹ உபனிஷத் இது இந்திரியங்களுக்கு ராஜா என்கிறது.


    இந்த பத்து இந்திரியங்களையும் மனதையும் சேர்த்து சமஷ்டி பாவத்தில் “ஏகாதச ருத்திரர்
    என்பர். ருத்திரன் இங்கு காரணப்பெயர். இது ரோதனம், திராவனம் என்ற இரு சம்ஸ்க்ருத பதங்களின் அர்த்தத்தை சேர்த்து உணர்த்தும் வார்த்தை.. ரோதனம்= அழுதல்;; திராவனம்= ஓடுதல்.


    இது எப்போதும் நாம ரூபங்களை நாடி அழுது கொண்டே இருக்கும். மனிதனால் இந்த அழுகையையோ ஒட்டத்தையோ கட்டுபடுத்த முடியாது .ஓட விட்டே பிடிக்க வேண்டும் அழ விட்டே த்ருப்தி செய்ய வேண்டும்..


    சங்கற்ப விகற்பமான இந்த மனதிற்கு எதையும் பற்றவும் ,விடவும், பற்றி விடவும், விட்டு பிடிக்கவும் ,விட்டும் விடாது பற்றவும் விடாது விட்டு நிற்கவும் சக்தி உண்டு..


    இந்த சக்தி அதன் காரணமான ரஜோ, தமோ குணங்களினால் அதற்கு இயல்பாக அமைந்துள்ளது. இப்படி எல்லவற்றையும் பற்றி விடும் மனதை விடாது பற்றி நிற்பது. ஆதி எனப்படும் அந்தஹ்கரண வாசனை. இந்த வாசனை தான் ருத்திரன்.


    பிறந்ததும் அவனை அழுது கொண்டு ஓடும் படி செய்கிறது இந்த வாசனை பெருகும், மெலியும். .இது மனதுள்ள வரை யில் அதை பற்றாது விடுவதில்லை. மனதிற்கு பூ இடமாக இருப்பது போல் அந்தஅந்தகரண வாசனைக்கு அம்மனம் இருப்பிடம்..


    இந்த வாசனை மனது உதிக்கும் போது உதித்து அது லயிக்கும் போது தானும் லயித்து மறுபடியும் உதிக்கும் போது தானும் உதித்து அதை அழுது கொண்டே ஓடச்செய்யும். அது நுகர்வது எல்லாம். சிற்றின்பம்.


    பெருங்காய டப்பியில் பெருங்காயம் இல்லா விட்டாலும் அதன் வாசனை இருப்பது போல் மனம் செய்யும் கர்மம் அழிந்தும் அத்ன் வித்து வாசனை மாத்திரமாக இருந்து ,செய்த கர்மத்திற்கு தக்கபடி ஆதி என்கிற அந்த கரண வாசனை கால தேசத்திற்கு உட்பட்டு அந்தகரணத்தை செலுத்தும்..


    மனதை பற்றிய வாசனை எதுவோ அதற்கு மாயை என்றும், அவித்தை என்றும் சொல்வர்.


    இந்த மனத்தையும், அந்தகரணத்தையும் வென்றவர்கள் மகான்கள். என்பர்.
    மஹான்கள் செய்வது பற்றுதல் இல்லாமல் உலக உபகாரத்திற்காக இருக்கும்.


    செய்கையில் செய்கையின்மையும் செய்கையின்மையில் செய்கையும் கான்பவன் உத்தமன் என்கிறார் கிருஷ்ணர். சும்மா இருப்பதே சுகம் என்றும் இதை சொல்கிறார்கள் இதுவே நிஷ்டை,; சமாதி நிலை.


    புளியம்பழம் தான் ஓட்டில் ஒட்டிக்கொள்ளமல் அதனுள்ளே தனித்து நிற்பது போல் ஞானிகளுக்கு சரீர அபிமானம் இல்லாமல் சரீரத்துடன் இருப்பார்கள்.




    மனம் ஒன்றே,. கெட்ட வாசனையில் நிற்கும் போது கெட்ட மனம். நல்ல வாசனையில் நிற்கும் போது நல்ல மனம். மந்திர ஜபம், கடவுள் த்யானம், ஆகார நியமம். ப்ராணாயாமம் ஆகியவைகள் மனதை அடக்க உதவியாக இருக்கும்.


    சதா சலித்துகொண்டிருக்கும் மனதினிடம் ரூபத்தையும், நாமத்தையும் கொடுத்து அதை பற்றி கொள்ள செய்ய வேண்டும்.


    அளவற்ற நினைவுகளால் மனம் விரிந்தால் மனம் பலவீனமாகிறது. நினைவுகள் அடங்க அடங்க மனம் ஒரு நிலை தன்மை பெற்று பலமடைகிறது .மனம் பலம் பெற்றால் ஆத்ம விசாரம் பலமாகும்.


    சட்டமுனி சித்தர் மந்திர ஜபத்தால் மனதுடன் சம்பந்தபட்ட நாடிகள் நம்
    வசமாகிவிடும். இதனால் மனம் கட்டுபடும் என்கிறார்.


    ஒவ்வொரு அக்ஷரமும் உச்சரிக்கும் போது நாடிகளுக்கு வேலை ஏற்படுகிறது. மனதிற்கும் நாடிக்கும் சம்பந்தம் உண்டு. எந்தெந்த அக்ஷரங்களை உச்சரித்தால் எந்தெந்த நாடிகள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.




    நம் குணங்களுக்கும் நாடி நரம்புகளுக்கும் சம்பந்தம் உண்டு. சில நாடி நரம்புகள் அசைந்தால் சாந்தி நிலை ஏற்படுகிறது.


    மனம் சுவாதீனப்பட பகிரங்க சாதனம்: சிரத்தையோடு தானம், தர்மம், பரோபகாரம் செய்தல்..


    மனம் சுவாதீனப்பட அந்தரங்க சாதனம்: : அஹிம்சை.; மனம் பழுத்தால் அது தானே விழுந்து விடும். இதுவே முக்தி. இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவே நிற்பது மனம். இந்த மனம் நான்கு நிலைகள் கொண்டது.


    .புற மனம், நடு மனம், அடிமனம், செயலற்றிருக்கும் மனம்.


    மனம் புறத்தே சென்று சிற்றின்பங்களை நாடுவது புற மன வ்ருத்தி; மனம் உள்ளொடுங்கி ஆன்மாவில் லயித்திருப்பது நடு மன வ்ருத்தி. மனம் ஆன்மாவில் லயமாவது யோகம். இது அடிமன வ்ருத்தி.


    அறிய முடியாததை அறிந்து கொள்ளும் திறமை ஒருமுக பட்ட மனதிற்கு வருகிறது. இதுவே மனோதத்துவ ரகசியம்..


    ஜீவனை இயக்குவது மனம். இந்த மனம் பண்பட்டால் தான் உய்வு. மனத்தின் மூலம் ஒன்றை தானாக அறிய முடியும். பிறரால் அறிவது வாக்கு களால்.
    இந்த மனத்தால் ப்ருமத்தை அறிய முடியாது. பிருமத்திற்கு இந்த மனம் சரீரம் போன்றது. ப்ரும்மம் மனதின் உள்ளே இருந்து கொண்டு ஆள்கிறது.


    ஊஞ்சல் ஒரு பக்கம் எவ்வளவு தூரம் செல்கிறதோ அதே தூரம் மறுபக்கமும் ஆடியே தீரும். ஒரு பொருளின் மீது அதிக விருப்பம் கொண்டால் அப்பொருளை விட்டு பிரியும் போது அதே அள்வு துக்கம் ஏற்பட்டே தீரும். .மனத்தை ஊஞ்சலுடன் ஒப்பிடுவார்கள்.


    திருமூலர் மனதை மனதிற்குள் செலுத்த வேன்டுமென்கிறார். நாவுக்கரசர் இறைவன் மனதில் இருக்கிறார் என்கிறார். திருமூலரும் மனிதனின் மனதில் கடவுள் இருப்பதாக கூறுகிறார்.சிவ வாக்கியர் இதையே தான் கூறுகிறார்.


    நம் மனதிற்குள் வேறு யாரும் வந்து பார்ர்க்க முடியாது. நாமே பார்த்து ஆனந்திக்கலாம். யோகம், சித்த விருத்தியை கட்டுபடுத்தி அடக்கி ஆளும். சக்தி. உபாசனையால் இதை வளர்க்க வேண்டும்.


    எடுத்த எண்ணங்களை ஓய்வு பெற வைத்தால் சுகமுண்டாகிறது. எண்ண தோற்றமே துக்கம். எண்ணங்களின் ஒடுக்கமே சுகம். எண்ணங்களே சுகத்தின் சத்ரு. எண்ணங்கள் ஓய்ந்தால் சுகம். தானே தான் சுகம் என்பதை மனம் உணர்ந்தால் மனம் அடங்கும்.


    நான் என்கிற எண்ணமே எல்லா எண்ணங்களுக்கும் ஆணி வேர். “நான்””: என்கிற இந்த எண்ணத்தை அழித்தால் எல்லா எண்ணங்களையும் அழித்துவிடலாம். எண்ணங்களே மனம் என்கிறார் ரமணர்.


    தற்காலிகமாக மனம் ஒடுங்கினால் மனோலயம் என்று பெயர்..மனம் நாசமாவதால் ஒடுங்கும் நிலைக்கு மனோ நாசம் என்று பெயர்.


    மனதை ஒரு நிலை படுத்த : குளித்த பின் அல்லது கை கால்களை அலம்பிய பின் தினமும் ஒரே இடத்தில் பதிணைந்து நிமிடங்கள் மனதில் சொல்லிக்கொண்டே, கவனத்தை எழுத்தில் வைத்துகொண்டு உடல் நிலை மாற்றிக்கொள்ளாமல் ,


    ஒரு நாள் கூட எழுதுவதை நிருத்தாமல் , பிறருடன் பேசிக்கொண்டோ , மனது வெளியே ஓடாமல் ஒரு கடவுள் பெயரை மட்டுமே வேறு கடவுள் பெயர் மாற்றி கொள்ளாமல் தினமும் எழுதிக் கொண்டுவந்தால் மனம் அடங்கும்.


    அறிய முடியாதது ஒன்று உண்டு என்பதை உணர்வதே அறியாமை கடந்த அறிவு. . விஞ்ஞானி ஆராய்ச்சி செய்து பார்த்து நம்புகிறான். ஞானத்திற்கு நம்பிக்கை ஆதாரம். வேதங்களே ப்ரமாணம்.


    பச்சிளம் குழந்தை தாய் முகம் பார்த்து சிரிப்பது உணர்வு. அறிவு இல்லை. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்பது அறிவு. உணர்வு இல்லை.


    அறிவும், உணர்வும் தனி தனி பண்புகள். அறிவை அடிபடையாக கொண்டது விஞ்ஞானம். உணர்வை அடிபடையாக கொண்டது ஆத்ம ஞானம்.


    புலன்கள் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது. அறிவும் ஒரு அளவுக்குள் செயல் படுகிறது.


    ஒன்றின் முழு தோற்றத்தையும் பார்த்து அதன் பூரண விஷயங்களை அறிவது ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலனாவதை பற்றி ஆராய்ச்சி செய்கிறது விஞ்ஞானம். ஐந்து பொறிகளுக்கும் புலப்படாத இறைமையை பற்றியது மெய்ஞானம்..


    ஆதி சங்கர்ர் சொல்கிறார்.: மரணம் வந்து உண்ணை அழைக்கும்போது அதற்கான மெய்ஞானத்தை இப்போது பெற வழியை பார். இப்போது உன்னிடமுள்ள வேறு எதுவும் உன்னை காப்பாற்றாது.. மெய் ஞானத்தால் தான் அறிய முடியும் என்கிறார் தாயுமானவரும்.


    ஞானத்தை பெற உதவுவது விஞ்ஞானம். நமக்கு ஞானமும் வேன்டும். விஞ்ஞான்மும் வேண்டும்.. இரண்டுக்கும் உறவு உண்டு என் அன்றே விவேகானந்தர் விளக்கி உள்ளார். ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல.


    நெருப்பு தொட்டால் சுடும். இது ஆராய்ச்சி அனுபவம். ஏன் சுடும் என்பதற்கு அறிவு பதில் சொல்ல முடியாது.. விஞ்ஞானி புறப்பொருளை துருவி பார்க்கிறான். மெய்ஞானி உட்பொருளை ஊடுருவி பார்க்கிறான்.


    முண்டகோபநிஷத் ஸத்ய மே வ ஜயதே எந்கிறது; இது உண்மை. விஞ்ஞாநமும் உண்மையை தாந் தேடுகிறது.


    ஆராய்வதர்குறிய விஷயம் அனுபவம் தான் , வேதாந்தமானாலும் விஞ்ஞானமானாலும்.. விஞ்ஞானம் புற பகுதியை ஆராய்கிறது.
    வேதாந்தம் அக பகுதியை ஆராய்கிறது .இந்த வேதாந்தமே ஞானம். . விசே.ஷ அறிவு என்பதே விஞ்ஞானம்.
Working...
X