பெரியவா சரணம் !!
""ஸர்வ வ்யாபியான பெரியவாளுக்குத் தெரியாமல் எதுவும் நடக்குமா என்ன? ""ஸ்வதர்மத்தை விட்டு, என்ன செய்தும் பலன் இல்லை !!
ஒரு பக்தரின் குடும்பத்தில் தொடர்ந்து புதுஸு புதுஸாக கஷ்டங்கள். ஒன்று போனால் உடனே அடுத்தது! பொறுக்கமாட்டாமல் ஒரு ஜோஸ்யரிடம் தன் ஜாதகத்தை கொடுத்து விடிவுகாலம் எப்போது? என்று கேட்டார்.
வேறென்ன? எக்கச்சக்கமான க்ரஹதோஷம்...."
"என்னதான் பண்றது?"
"நவக்ரஹ ஹோமம் ஒண்ணு பண்ணுங்கோ! எதுலயும் குறை வெக்காம நன்னாப் பண்ணுங்கோ!"
எத்தனை பெரிய கஷ்டங்கள் வந்தாலும், அல்லது வெறும் கஷ்டங்கள் மட்டுமே வந்தாலும் ........ "பெரியவா இருக்கா! பாத்துப்பா!" என்ற த்ருட விஸ்வாசம் நமக்கு இருந்துவிட்டால், நம்முடைய கஷ்டத்துக்கு கஷ்டம் வந்துவிடும்.
ஜோஸ்யர் சொன்னதை பெரியவாளிடம் சொல்லி, நவக்ரஹ ஹோமம் செய்வதற்கு பெரியவாளின் அனுமதியை பெறுவதற்காக வந்தார்.
ஆத்துல ஒண்ணு மாத்தி ஒண்ணு ரொம்ப படுத்தறது. ஜோஸ்யர் நவக்ரஹ ஹோமம் பண்ணினா சரியாயிடுன்னு சொல்றார்......"
" ஜோஸ்யர் சொல்றாரா......நவக்ரஹ ஹோமம் பண்ணினா, நல்லது நடக்கறதோ இல்லியோ, நிச்சயம் கெடுதல் வராது" .....என்று பட்டும்படாமலும் ஆனால்,சிந்தனைக்குரிய ஒரு பதிலை கூறி விட்டார். நமஸ்காரம் பண்ணிவிட்டு இந்தப்பக்கம் வந்தவுடன், பக்தருக்கு குழப்பம்....
"ஹோமம் பண்ணறதா? வேண்டாமா?"
பெரியவாளையே மறுபடி கேட்கலாம் என்றால், இவருக்கு பதில் சொன்னவுடனே சடக்கென்று அந்த இடத்திலிருந்து எழுந்து உள்ளே போய் விட்டார். அங்கிருந்த பாரிஷதரிடம், "பெரியவா எதுவும் சரியான முடிவா சொல்லலியே?" என்று புலம்பினார். அவருடைய தொல்லை தாங்காமல் அந்த ஸிஷ்யர் பெரியவாளிடம் போய் பக்தரின் ஆதங்கத்தை தெரிவித்தார்.


பெரியவா சொன்ன பதில்..........
"எல்லார்க்கும் அவாவாளுக்கான கடமைகள் உண்டு. இவன் ஆத்துல, வயஸான தாத்தா, பாட்டி இருக்கா. இவனுக்கும், இவனோட பொண்டாட்டி புள்ளேளுக்காக இன்னும் ஒழைச்சிண்டு இருக்கற அப்பா,அம்மா இருக்கா. அவாளை ஸரிவர கவனிச்சு போஷிக்கணும். அது ரொம்ப முக்யமான தர்மம்;
வீட்டு வாசல்ல வந்து பிச்சை கேக்கறவாளுக்கு கூடுமானவரைல தர்மம் பண்ணணும்;
தாஹத்தோட வர்றவாளுக்கு ஜலம் குடுக்கணும்;
ஏழைகள், ஸமையல்காரா, வீட்டு வேலை செய்யறவா இவாள நிந்தனை பண்ணக் கூடாது; ப்ரியமாக நடத்தணும்....இதெல்லாம் பண்ணினாலே பகவான் நம்ம கஷ்டங்களை நிவ்ருத்தி பண்ணி வெப்பான்....." என்றார்.
இதிலிருந்து அந்த குடும்ப தலைவர் இந்த நற்செயல்களை செய்யவில்லை என்பதை ஊஹித்து அறிய முடிந்தது.
அந்த ஸிஷ்யர் பக்தரிடம் போய் " பெரியவா சொல்றா...ஒங்களோட கடமைகளை தவறாம பண்ணிண்டு வந்தாலே போறும், ஒங்க குடும்ப கஷ்டமெல்லாம் போய்டுமாம். எந்த ஹோமமும் செய்ய வேண்டிய அவஸ்யமே இருக்காதாம்" என்று பக்குவமாக சொன்னார்.
பக்தருக்கு நெஞ்சில் 'சுருக்"கென்று குத்திற்று.
பெரியவா முன்னால் சென்று நமஸ்காரம் பண்ணினார்.
"பெரியவா என்னை மன்னிக்கணும்...பெரியவா சொன்னது வாஸ்தவந்தான்! என்னோட துஷ்டத்தனம் சொல்லிக்கவே வெக்கமா இருக்கு... பரம்பரையாக வந்தது..பெரியவா அனுக்ரஹத்தால நல்ல வழிக்கு திரும்பணும் ....ஶரணாகதி பண்றேன்"
பெரியவா மனஸ் உருகி போய்விட்டது.
"க்ஷேமமா இரு" ஆஸிர்வதித்தார்.
அது சரி, அந்த குடும்பத்தின் பரம்பரை இழிகுணங்கள் பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தாத்தாவும், அப்பாவும் இவரைப்போலவே இருந்ததால், இவரிடம் அவஸ்தைப் பட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஸர்வ வ்யாபியான பெரியவாளுக்குத் தெரியாமல் எதுவும் நடக்குமா என்ன?
ஸ்வதர்மத்தை விட்டு, என்ன செய்தும் பலன் இல்லை !!

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
दैवयेषु माता ! मन्त्रेषु गायत्री !! பெரியவர்களை போஷிக்காமல் என்ன செய்து, என்ன பலன் ! மிகவும் அருமை !! மகாபெரியவா திருவடிவகளுக்கு சரணம் !!
பெரியவாவின் அனுக்ரஹம் இருப்பின் யாதொரு பயமும் இல்லை. தாயாய் வந்தீர் ஆதிசிவ சங்கரா! தவமாய் நின்றீர் பரம சிவ சங்கரா! சங்கரா சிவசங்கரா!சங்கரா சந்த்ர சேகரா!
காலடி சங்கர, காமகோடி சங்கர.
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !
அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்