ஸ்ரீ:
இது இணையத்தில் பல தளங்களில் நிறைய உலா வருகிறது.
பொருத்தமாக இருப்பதுபோல் தோன்றும்
பல உதாரணங்களில் இதுவும் ஒன்று.

பகுத்தறிவுவாதிகள் கூறுவார்கள்
ப்ராம்மணன் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது
மற்றவர்கள் உடம்பிலும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது
அப்டியிருக்க ப்ராம்மணன் மட்டும் எப்படி உயர்ந்தவன் ஆவான் என்று.

மேலோட்டமாகக் கேட்கும்போது - ஆமாம் சரிதானே என்று தோன்றும்
ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால்
ஒருவனின் மேன்மையும், தாழ்மையும் ரத்தத்தின் நிறத்தாலா ஒப்புமை
செய்து பார்த்து முடிவுசெய்ய இயலும் என்று?

அதுபோல,

இந்த உதாரணத்தில் அறிவுடன் கூடிய மனிதனின்
செயல்களுக்கு அவன் எந்த விதத்திலும் பொறுப்பாகமாட்டான் என்றால்
அவன் தலையில் பாப புண்ணியங்களைச் சுமத்துவது
மிகப்பெரிய குற்றம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஇதுபோன்ற தோஷங்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்தான்
எத்தனை காலங்கள் ஆனாலும், நேற்றுவரை இருந்த முன்னோர்கள்
தமக்கு எவ்வளவு அற்புதமான உதாரணம் புதிதாகத் தோன்றினாலும்
புதிது புதிதாக உதாரணங்களை மாற்றாமல், தொன்றுதொட்டு
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரே உதாரணத்தை - மஹனீயர்களால்
- ஆசார்ய புருஷர்களால் வழங்கப்பட்டுவந்த உதாரணத்தை விடுத்து
தாமாக ஒரு புதிய உதாரணத்தைத் தெரிவிக்கமாட்டார்கள்.

ஆனால் தற்போது, புதிது புதிதாக இதுபோல தங்களது மேதாவிலாசத்தைத்
தெரிவிக்க வழங்கப்படும் புதிய உதாரணங்கள் மலிந்துவிட்டால்
பின்வரும் சந்ததியினருக்குச் சரியான விஷயங்கள் சென்றடைவது
மிகவும் துர்லபம் ஆகிவிடும்.