தம்பிரான் என்பதற்கு கடவுள், ஞாநி, தனக்குதானே தலைவன், நம்பவர்களுக்குகெல்லாம் தலைவன், கட்டளைப்படி நடப்பவன் என்ற பொருள்கள் உண்டு
சுருக்க உரை
உண்மை நிலையுடன் உன்னைத் தியானித்தும், உன்னை நினைத்து உருகியும், உன்னை வாழ்த்தியும், கண்களில் நீர் நிறைந்து வழிய அன்பு பெருகவும், உன்னைத் தவிர வேறு எதையும் நினைக்காமல், கடப்ப மாலையை அணியும் குமரனே. முருகனே. ஆறு எழுத்து அண்ணலே. சரவண பவனே. கார்த்திகை மாதர்களின் முலைப் பாலைப் பருகியவனே, என்று பாடி, மொழிகள் குழற, ஓயாமல் அழுது, நான் உனக்கு ஆளாக,எல்லாம் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தந்தருளுக.
எனக்கு மோட்ச வீட்டைக் காட்டிய விரகனே, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த சிவபெருமான் போற்றித் துதித்த பார்வதி ஈன்ற முருகனே, கடல் எரிபடவும், ஏழு கிரிகள் கூச்சலிடவும், தேவர்களைப் பொன்னுலகத்தில் குடியேற்றிய தம்பிரானே, எழுகரை நாடு என்னும் தலத்தவர் தம்பிரானே, எனக்கு மூலப் பொருளைத் தந்திடாயோ?
இப்படிக்கு, பொங்கி!
வள்ளியம்மையை 'பொங்கி என்று பெயரிட்டு வணங்கி வந்தார் வள்ளிமலை சுவாமிகள். ஒருமுறை, வள்ளிமலை சுவாமிகள் சென்னை தங்கசாலைத் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அவரை வழிமறித்து, ''சுவாமி! ஒரு திருப்புகழ் பாடுங்கள்'' என்று கேட்டாள். சுவாமிகளும் அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, திருப்புகழ் பாடலைப் பாடினார். உடனே அந்த சிறுமி, ''நானும் ஒரு பாட்டுப் பாடுகிறேன், கேளுங்கள்'' என்று சொல்லிவிட்டு, ''விரகற நோக்கியும்'' எனத் தொடங்கும் திருப்புகழை மோகன ராகத்தில் அதி அற்புதமாகப் பாடினாள்.
பிறகு, ''சுவாமி! உங்கள் வெற்றிலை பாக்குப் பையைக் கொடுங்கள்'' என்று கேட்டு வாங்கிய அவள், ஓடிச்சென்று மறைந்தாள். அந்தச் சிறுமி போன பிறகுதான் வெற்றிலை பாக்குக் பையில் ஐந்து ரூபாய் நோட்டு வைத்திருந்தது அவருக்கு ஞாபகம் வந்தது.
இரு நாட்களுக்குப் பிறகு, வள்ளிமலைக்கு வந்த சுவாமிகள், சிறுமி எடுத்துச்சென்ற தனது பாக்குப்பை அங்கே இருப்பதைக் கண்டு ஆச்சரியமானார். பையினுள் அவர் வைத்திருந்த 5 ரூபாய் நோட்டும் அப்படியே இருந்தது. அதிசயமாக ரூபாய் நோட்டுடன் சீட்டு ஒன்று இருக்கக் கண்டார். அந்தச் சீட்டில் ''உன் ரூபாய் பத்திரமாக இருக்கிறது; பார்த்துக் கொள்! இப்படிக்கு, பொங்கி' என்று கையெழுத்திடப்பட்டு இருந்தது. தான் வணங்கும் வள்ளியம்மையே சிறுமியாக வந்துபோனதை எண்ணி மகிழ்ந்தார் வள்ளிமலை சுவாமிகள்.
- வள்ளிமலை சுவாமிகள் 100-வது ஜயந்தி மலரில், தணிகைமணி டாக்டர் வ.சு.செங்கல்வராயப் பிள்ளை எழுதிய 'திருப்புகழடியார் திருவடிச் சென்னியர் கட்டுரையில் இருந்து...
Bookmarks