Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 02 / 29

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 02 / 29

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 02 / 29

    .


    கோதையின் குணங்களைத் துதிக்கத் , தூண்டுதல்

    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    वैदेशिक: , श्रुति - गिराम् , अपि , भूयसीनाम् ,

    वर्णेषु , माति , महिमा , न हि , माध्रुशाम् , ते |

    इत्थम् , विदन्तम् अपि , माम् , सहसा - एव , गोदे !

    मौन - द्रुर्हो , मुखरयन्ति ! गुणा: , त्वदीया: ||

    .



    வைதேசிக: , ச்ருதி - கிராம் , அபி , பூயஸீநாம் ,

    வர்ணேஷு , மாதி , மஹிமா , ந ஹி , மாத்ருசாம் , தே |


    இத்தம் , விதந்தம் அபி , மாம் , ஸஹஸா - ஏவ , கோதே !


    மௌந - த்ருஹோ , முகரயந்தி , குணா: , த்வதீயா: ||

    .

    .
    गोदे .................. கோதைப் பிராட்டியே !

    भूयसीनाम् .............. .மிக அதிகமான ,

    श्रुति - गिराम् , अपि ... வேத வாக்குகளுக்கும்

    वैदेशिक: ................ எட்டாத ,

    ते महिमा ...... ..........உன் பெருமை ,

    माध्रुशाम् ............... என்னைப் போன்றவர்களின் ,

    वर्णेषु ................... துதிகளில்

    न हि माति .............. அடங்குவதில்லை !

    इत्थम् .................. இவ்வாறு ,

    विदन्तम् अपि .......... அறியும் போதும் ,

    माम् .................... என்னை ,

    त्वदीया: ................ உன்னுடைய ,

    गुणा: ................... குணங்கள் ,

    मौनद्र्हो ................. மௌனத்தைத் , தகர்த்து ,

    सहसा - एव ............ வலிமையாகவே ,

    मुखरयन्ति .............. பேச வைக்கின்றன !


    .


    ஶ்ரீ உப வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * கோதைப் பிராட்டியே ! உன் பெருமைக்கு எல்லையை இல்லை. எல்லை அற்ற வேதங்களும் , உன் பெருமையைப் பேசத் தொடங்கி , சிறிதும், வெற்றி பெறாமல் , கையற்று , நிற்கின்றன.


    * இத்தகைய உன் பெருமையை , என்னைப் போன்ற சிற்றறிவினர் , செய்யும் தோத்திரங்களுக்கு அடங்குமா ? இவ்விஷயத்தை , நான் நன்கு உணர்ந்திருக்கிறேன் .


    * ஆனால் , உன் குணங்கள் , இதைப் பொறுக்கவில்லை. அவை , பேசாமல் இருப்பவர்களின் , மௌனத்தைக் கலைத்துப் , பேச வைக்கும் ஆற்றல் படைத்தவை.


    * அக் குணங்கள் , ஓய்ந்து கிடக்கும் , என்னை , வலிமையாக இழுத்து , விரைவில் , பேசச் செய்கின்றன.


    * ஆதலில் இப்பொழுது , உன்னைத் துதிக்க முற்படுகிறேன்.






    .








    Last edited by bmbcAdmin; 15-01-18, 22:05.

  • #2
    Re: गोदा स्तुति: கோதா ஸ்துதி : 02 / 29

    Swamin after a very long time we all meet you through your timely post.I am glad that we are going to have your posts contineously

    Comment


    • #3
      Re: गोदा स्तुति: கோதா ஸ்துதி : 02 / 29

      Thank you for remembering me and encouraging the posts

      sridhar

      Comment

      Working...
      X