Announcement

Collapse
No announcement yet.

காஞ்சிக்கு வந்த காமாக்ஷி - திருகள்வனூர் (108 &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காஞ்சிக்கு வந்த காமாக்ஷி - திருகள்வனூர் (108 &

    காஞ்சிபுரம் (திருகள்வனூர்) - 108 திவ்ய தேசம்


    காஞ்சிக்கு வந்த காமாக்ஷி சரித்திரம்.


    தக்ஷ மகாராஜனின் பெண்ணான "தாக்ஷாயினி" சிவபெருமானை மணந்து கொண்டாள்.

    ஆனால், தக்ஷனுக்கு சிவனிடம் பக்தி இல்லை என்பதை விட, துவேஷமே இருந்தது.


    தான் செய்யும் யஃயத்தில் மாப்பிள்ளை என்று கூட நினைக்காவிட்டாலும், ஈஸ்வரன் என்ற மரியாதைக்கு கூட யாகத்திற்கு அழைக்கவில்லை.


    தாக்ஷாயினி மனம் வருந்தினாள்.
    இருந்தாலும், தன் தகப்பனார் செய்யும் யாகமாயிற்றே என்று பார்க்க வருகிறாள்.


    யாகத்தில் செய்யப்படும் வைதீக முறைகளே மாற்றப்பட்டு, தக்ஷன் யாகம் செய்து கொண்டிருந்தார்.


    ஒரே ஒரு தெய்வத்திடம் நமக்கு திடபக்தி இருக்கலாம். ஆனால் வேதத்தில் சொன்ன பிற தேவதைகளை அவமானம் செய்ய கூடாது.
    வேதத்தில் பல தேவதைகள் பெயரை சொல்லி, அந்த தேவதைகள் யாவும், அந்த விராட் புருஷனின் அங்கங்கள் என்று சொல்கிறது.
    அனைத்து தேவதைகளுக்கும் வேதம் எந்த இடத்தில் மரியாதை செய்கிறதோ, அந்த இடத்தில் யாராக இருந்தாலும் மரியாதை செய்து தான் ஆக வேண்டும்.


    வைதீக கிரியைகளை தன் இஷ்டத்திற்கு மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. தனக்கு பிடிக்காத தெய்வம் என்று காழ்ப்புணர்ச்சி கொண்டு, வேதத்தில் சொல்லப்படும் தேவதைகளை அவமானம் செய்ய கூடாது.


    யாகத்தில், ருத்ராய ஸ்வாஹா என்று இருந்தால், விஷ்ணுவை வழிபடுபவனாக இருந்தாலும், சூரியனை வழிபடுபவனாக இருந்தாலும், உள்ளது உள்ளபடி தான் சொல்ல வேண்டும்.


    தக்ஷன் தான் செய்யும் யாகத்தில், எந்த எந்த இடத்தில் எல்லாம் ருத்திரனை வழிபடும் மந்திரங்கள் வருகிறதோ அதை எல்லாம் சொல்லாமல், யாகத்தின் முறையையே தன் சிவ த்வேஷத்தின் காரணமாக மாற்றி இருந்தான். இப்படி வேதம் சொன்னதையும் மீறி செய்யும் யாகத்தில் தனக்கு கொடுக்கப்படும் ஹவிர் பாகத்தை பெற ப்ரம்மா உட்பட (விஷ்ணு தவிர) அனைத்து தேவர்களும் வந்திருந்தனர். தக்ஷன் செய்வது தவறு என்று ஒருவர் சொல்லவில்லை.


    தன் தகப்பனாரின் சிவ த்வேஷத்தை கண்டு, தாக்ஷாயினிக்கு கோபம் வந்தது. இவருக்கு பெண்ணாக பிறந்தோமே என்று வருந்தினாள்.

    இனி தக்ஷனுக்கு புத்ரி என்ற பெயருடன் வாழ கூடாது என்று, தன் சரீரத்தை யோகாக்னியால் பஸ்பமாக்கி கொண்டு விட்டாள் தாக்ஷாயினி.
    யாகத்தை ருத்திரனாக சிவன் அழித்து விட்டார். இந்த சம்பவத்தில் தக்ஷன் தலை போனது. சூரியன் பல் போனது (அதனால் தான் சக்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு பூஜை செய்கிறோம்). இப்படி ஒவ்வொரு தேவனுக்கும் ஒரு அடி விழுந்தது.


    சிவபெருமானின் பத்னியான இவள், ஹிமவான் என்ற இமாலய பர்வதனை தன் தகப்பனாக ஏற்று, அவனுக்கு புத்ரியாக, "பார்வதி" என்று தோன்றி விட்டாள்.


    பிறந்தது முதலே இவள் சிவனிடம் பக்தி செய்தாள். சிவனையே மாலை இடவும் ஆசை கொண்டாள்.


    சிவபக்தி செய்யும் தன் பெண்ணை, சிவனுக்கு ஆராதனை செய்ய கைலாயத்துக்கு கொண்டு வந்து விட்டார், பர்வத ராஜன்.
    அங்கேயே இருந்து கொண்டு, கைலாய நாதனுக்கு பூஜை செய்து கொண்டு வந்தாள், பார்வதி தேவி.


    ஒரு சமயம், தாரகாசுரன் என்ற அசுரனுடன், தேவர்களுக்கு போர் ஸம்பவித்து விட்டது.
    மகா பலம் பொருந்திய தாரகாசுரனையும், அசுரர படையையும் சமாளிக்க, படை தளபதி தேவர்களுக்கு தேவைப்பட்டது.


    சிவ சக்தி ஐக்கிய ரூபமான ஒரு தேவன் உருவாகினால் தான், அவர் இந்த தேவ சேனைக்கு படை தளபதியாக வந்தால் தான், வெற்றி கிடைக்கும் என்று உணர்ந்த தேவர்கள், சிவபத்னியான சக்தியே, பார்வதி தேவியாக பூமியில் அவதரித்து இருப்பதை கண்டு, அவளிடம் சிவபெருமானுக்கு ஆசை வர வேண்டும் என்று, கைலாயத்தில் உள்ள சிவபெருமானிடம் மன்மதனை அனுப்பினர் தேவர்கள்.


    தேவனான மன்மதன், சிவபெருமானும் சாமான்ய மனுஷன் என்பது போல, தன் கரும்பு வில்லினால், புஷ்ப பானம் போட்டு மனதில் காமம் உண்டாக்க முயற்சிக்க, சிவபெருமான் தன் மூன்றாவது கண்ணை திறந்து கோபத்துடன் விழித்து பார்க்க, நெற்றிக்கண்ணில் இருந்து புறப்பட்ட தீ ஜ்வாலையில், மன்மதன் பொசுங்கி விட்டான்.


    மன்மதனே பொசுங்கி விட்டான் என்பதை பார்த்த பிறகு, தனக்கும் இதே கதி தான் ஏற்படுமோ என்று பயந்து போனாள் பார்வதி தேவி.


    இனி இவரிடம் தன் இளமையை கொண்டோ, அழகை கொண்டோ மயக்க இயலாது, பக்தியாலும், தபசாலும் தான் இவரை அடைய முடியும் என்று உணர்ந்து, கடும் தவம் செய்யலானாள்.


    இவள் பக்திக்கும், தவத்திற்கும் பிரசன்னாமாகி சிவபெருமான் பார்வதியை மணந்தார்.
    மன்மதனையே பொசுக்கி விட்ட சிவபெருமான், பார்வதி தேவியுடன் கூட பேசாமல், சிவனே என்று தனித்து யோகத்தில் இருந்தார்.


    பர-ஸ்திரீ இடத்தில் ஏற்படும் காமம் பாவத்தை தரக்கூடியது. ஆனால், தன் பத்னியிடத்தில் காமம் தவறில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது.
    இப்படி இருக்க, தன் பத்னியான பார்வதியிடம் கூட முகம் கொடுத்து, ப்ரியமாக பேசவில்லை சிவபெருமான்.
    சிவசக்தியாக இல்லாமல், தனித்தே இருந்தார்.


    சாஸ்திரமே அனுமதி கொடுக்கும் ஸதி-பதிக்கு உள்ள காமத்தை (அன்பை) பெறுவதற்காக, சிவன் தன்னிடம் ஆசையாக பேச வேண்டும் என்ற ஆசையில், பார்வதி தேவி கைலாயத்தில் இருந்து, காஞ்சிபுரம் வந்து காஞ்சி வரதனை நோக்கி தவம் செய்தாள்.


    பார்வதி தேவிக்கு, ஸ்ரீ பகவான் ப்ரத்யக்ஷமானார்.
    "மந்திரங்களில் பீஜாக்ஷரங்கள் உண்டு. அதில் சில பீஜாக்ஷரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
    அதில் காம பீஜாக்ஷரம் என்று ஒன்று உண்டு,


    மேலும் படிக்க....
    http://proudhindudharma.blogspot.in/...08_16.html?m=1

  • #2
    Re: காஞ்சிக்கு வந்த காமாக்ஷி - திருகள்வனூர் (1

    Mr.Premkumar,
    Why repeat postings of the same four times?
    Kundly avoid such things.
    Varadarajan

    Comment


    • #3
      Re: காஞ்சிக்கு வந்த காமாக்ஷி - திருகள்வனூர் (1

      Pls check.. it is different forum keeping different audience in mind.. the content are highly informative and i want all hindus to read. Its not junk or forwarded messages.

      Comment

      Working...
      X