22-01-2018 வஸந்த பஞ்சமி.
ஸ்ம்ருதி கெளஸ்துபம் 479 . மாக மாஸே சுக்லாயாம் பஞ்சமி திதெள ந்ருப சிரேஷ்ட ரதி காமெள து ஸம்பூஜ்ய கர்தவ்யஹ ஸு மஹோத்ஸவஹ.
மாக மாதம் வளர் பிறை பஞ்சமி திதிக்கு வஸந்த பஞ்சமி என்று பெயர். இன்று மஹா விஷ்ணு மஹா லக்ஷ்மி இருவருக்கும் காலையில் மல்லிகை பூவால் அர்சித்து மன்மதன், ரதி தேவியுடன் பூஜை செய்து பலவித பணியாரங்கள், பழங்களுடன் படைத்து உண்டால் குடும்பத்தில் ஒற்றுமை, ஆனந்தம் நீடிக்கும். நாம ஸங்கீர்த்தனம் ,பாட்டு பாடலாம்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
துர்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஸாவித்ரி, ராதை எனும் ஐவகை ப்ரக்ருதி சக்திகளில் இன்று ஸரஸ்வதி தேவி பிறந்த நாள். கண்ணுவ சாகையில் கூறியப்படி இன்று ஸரஸ்வதி தேவ்யை பூஜிக்க வேண்டும் எங்கிறது தேவி பாகவதம் ஒன்பதாவது ஸ்காந்தத்தில். வட இந்தியாவில் , பஞ்சாப், ஹரியானாவில் வஸந்த் பஞ்சமியான இன்று ஸரஸ்வதி பூஜை செய்வார்கள்.
வித்யா ஆரம்பமும் அவர்களுக்கு இன்றே. தீபாவளியின் போது லக்ஷ்மி பூஜையும், நவராத்திரியின் போது துர்கா பூஜையும் செய்கிறார்கள்.இன்றும் காலையில் புத்தக மண்டலத்தில் நாமும் ஸரஸ்வதி பூஜை செய்யலாம்.ஸரஸ்வதி தோத்திரங்கள் சொல்லலாம்.
இன்று பட்டம் பறக்க விடுவார்கள், -பஞ்சாப், ஹரியானா மா நிலங்களில்.---- குஜராத் , ஆந்திராவில் மகர ஸங்கிராந்தியன்று பட்டம் பறக்க விடுகிறார்கள்
பிருந்தாவன், மதுரா கோவில்களில் ஹோலிகா தஹனத்திற்கு இன்று கம்பு நடுவார்கள். ஹோலிகா தஹனம் 1-3-2018 அன்று.
Bookmarks