24-01-2018
ரதஸப்தமி எருக்கு இலை ஸ்நானஸ்லோகங்கள்.


ஸப்தஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைகபூஜிதே
ஸப்தஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமிஸத்வரம்
யத்யத் கர்ம க்ருதம்பாபம் மயாஸப்தஸு ஜன்மஸு


தன்மே ரோகம் ச சோகம் ச மாகரி ஹந்துசப்தமி
நமாமிஸப்தமீம் தேவிம் ஸர்வ பாபப்ரனாசினீம்
ஸப்தஅர்க்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய


ஏழுஎருக்கை இலையும்,பச்சரிசியும்ஆண்களுக்கு,பெண்களுக்குஇத்துடன் சிறிது மஞ்சள்பொடியும் சேர்த்து தலையில்வைத்து கொண்டு ஸ்நானம்செய்யவும்.


மடிஉடுத்தி க்கொண்டு நெற்றிக்கிஇட்டு கொண்டு ஸுரியனுக்குஅர்க்கியம் கொடுக்க வேண்டும்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
ரதஸப்தமி ஸ்நானாங்க அர்க்கியப்ரதானம் கரிஷ்யே என்று
சொல்லவும்.

ஸப்தஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசகதிவாகர
க்ருஹாணார்க்கியம்ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே


திவாகராயநமஹ இதமர்க்கியம்,திவாகராய நமஹஇதமர்கியம்; திவாகராயநமஹ இதமர்க்கியம்.


அநேனஸப்த பத்ரார்க்க ஸ்னானேனஅர்க்கிய ப்ரதானே ச
பகவான்ஸர்வாத்மகஹ ஸ்ரீ ஸுர்ய நாராயாணப்ரீயதாம்.


தைமாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி24-01-2018.--பீஷ்மாஷ்டமி.


ஸ்நானம் செய்து விட்டு நெற்றிக்கிஇட்டு கொண்டு தகப்பனார்இருப்பவர் உள்பட எல்லோரும்பீஷ்மருக்கு அர்க்கியம் விடவேண்டும். ஒவ்வொருசுக்ல பக்ஷ அஷ்டமியிலும்கொடுக்கலாம். இந்தஅஷ்டமி மட்டுமாவது அவசியம்கொடுக்க வேண்டும். நாம் தெரியாமல்செய்த பாபங்கள் அழிந்துபோகும்.


வையாக்கிரபாத கோத்ராய ஸாங்க்ருத்யப்ரவராய ச
அபுத்ராயததாம்யர்க்கியம் ஸலிலம்பீஷ்ம வர்மிணே
பீஷ்மாயநமஹ இதமர்க்கியம் மூன்றுமுறை கொடுக்கவும்.


கங்காபுத்ராய பீஷ்மாய சந்தனோராத்மஜாயச
அபுத்ராயததாம்யர்க்கியம் ஸலிலம்பீஷ்ம வர்மணே
பீஷ்மாயநமஹ இதமர்க்கியம் மூன்றுமுறை கொடுக்கவும்.


பீஷ்மஹசாந்தனவோ வீரஹ ஸத்யவாதீஜிதேந்திரிய
ஆபிரத்பி ரவாப்னோது புத்ரபெளத்ரோசிதாம் கிரியாம்
பீஷ்மாயநமஹ இதமர்க்கியம் மூன்றுமுறை கொடுக்கவும்.


அநேன அர்க்கிய ப்ரதானேன ஸ்ரீபீஷ்ம ப்ரீயதாம்.