Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 12 / 29. . கோதாவரி , புனித&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 12 / 29. . கோதாவரி , புனித&#

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 12 / 29.


    .


    கோதாவரி , புனிதம் , ஆனது , எப்படி ?


    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||






    प्रायेण , देवि ! भवती , व्यपदेश - योगात् ,


    गोदावरीम् , जगत् , इदम् , पयसा , पुनीते |


    यस्याम् , समेत्य , समयेषु , चिरम् , निवासात् ,


    भागीरथी - प्रभृतय : अपि , भवन्ति , पुण्या: ||


    .


    ப்ராயேண , தேவி , பவதீ , வ்யபதேச - யோகாத் ,


    கோதாவரீம் , ஜகத் , இதம் , பயஸா , புனீதே |

    யஸ்யாம் , ஸமேத்ய , ஸமயேஷு , சிரம் , நிவாஸாத் ,

    பாகீரதீ - ப்ரப்ருதய: அபி , பவந்தி , புண்யா: ||

    .

    देवि ............... கோதைப் பிராட்டியே !


    यस्याम् ............ எந்த நதியில் ,


    भागीरथी .......... கங்கை ,


    प्रभृतय : अपि ..... முதலிய நதிகள் கூட,


    समयेषु ............. அந்தந்த சமயங்களில் ,


    समेत्य .............. வந்து கூடி ,


    चिरम् ............... நெடு நாட்கள் ,


    निवासात् ........... வசித்ததால் ,


    पुण्या: .............. புண்யமயமாக ,


    भवन्ति .............. ஆகின்றதோ ,


    गोदावरी ............ அந்த கோதாவரி நதியானது ,


    भवती................. உன்னுடைய ,


    व्यपदेश ............. (கோதா என்ற) பெயரைத் ,


    योगात् ............... தாங்குவதால் ,


    इदम् ................. இந்த ,

    जगत् ................. உலகத்தை ,


    पयसा ................ தனது நீரால் ,


    पुनीते ................. புனிதம் ஆக்குகிறது ,


    प्रायेण ................ போலும் !


    ஶ்ரீ உப. வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:


    * கோதைப் பிராட்டியே ! கோதாவரி எனும் புண்ய நதியில் , அந்தந்த விசேஷ ஸமயங்களில் கங்கை முதலிய பல நதிகள் , வந்து கூடி , நெடுநாட்கள் நிற்பதாகவும் , அதனால் , அந்த நதிகள் தூய்மை பெறுவதாகவும் , புராணம் கூறும்.


    * இவ்வாறு , கோதாவரி நதி , தன்னில் வந்து கூடும் , நதிகளை மட்டுமின்றி , இந்த உலகையே , தனது நீரால் , தூய்மை ஆக்குகின்றது.


    * இதற்குக் காரணம் யாது என்று , சிந்தித்துப் பார்த்தால் , அந்த நதி , 'கோதா' என்ற உன் பெயரைத் தன் பெயராகக் கொண்டமையே போலும் என்பது புலன் ஆகிறது.


    * ஒருவர் பெயரை , மற்றொருவர் சூட்டிக் கொள்வது , அடிமைக்குச் சின்னமாகவும் ஆகும் அன்றோ ? கோதாவரி நதி உனக்கு அடிமையாய் , உன் திருநாமத்தைச் சூட்டிக் கொண்டதாலேயே , அத்துணை பெருமை பெற்றது.





Working...
X