திருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுடன் அவதரித்த நிகழ்வு:


திருப்பதி ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை உலகிற்கு வெளிக்காட்டி கொள்ள சங்கல்பித்தார்.


தொண்டைமான் சக்கரவர்த்தி இந்த தேசத்தை, அந்த சமயம் ஆண்டு கொண்டிருந்தார்.

வராக (பன்றி) அவதாரம் எடுத்து, திருப்பதி மலையில் ஒரு வேடுவன் கண்ணில் படுமாறு நிற்க, அந்த வேடுவன் துரத்த, வேகமாக ஓடிய வராக மூர்த்தியாக இருந்த பெருமாள், ஒரு பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்டார்.


பாம்பு புற்று எத்தனை சிறியது? அதற்குள் எப்படி அவ்வளவு பெரிய பன்றி நுழைய முடியும்? எப்படி நுழைந்தது? இது சாத்தியமா?

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
கண்ணால் நம்பமுடியாத ஆச்சரியம் கண் முன் நடந்ததை கண்ட வேடுவன், இது இந்த மலையின் மகத்துவம் என்று மட்டும் உணர்ந்தான்.

ஆஞ்சநேயர் இந்த திருப்பதி மலையில் த்ரேதா யுகத்தில் அஞ்சனா தேவிக்கு மகனாக அவதரித்தார்.
இதனால் ஒரு மலைக்கு, அஞ்சனாத்ரி என்ற பெயர் ஏற்பட்டது.


வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால், வ்ருஷபாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.


பாவங்களை பொசுக்கும் வெங்கடாத்ரி என்று ஒரு மலைக்கு பெயர் ஏற்பட்டது.


சேஷாத்ரியாக ஒரு மலையும்,


கருடாத்ரி என்று ஒரு மலையும்,


நாராயண என்ற வைகானச முனிவரின் பெயரால் நாராயணத்ரி என்ற மலையும், ஏற்பட்டு ஏழு மலையும் தெய்வீகம் உடையது என்பது மட்டும் அனைவருக்கும் தெரிந்த காலம் அது.


பெருமாள் சாந்நித்யம் இருந்ததே தவிர, ஸ்ரீனிவாச பெருமாள் இன்னும் ப்ரத்யக்ஷம் ஆகவில்லை.


இந்த சமயத்தில், ஸ்ரீனிவாசன் தன்னை வெளிக்காட்ட திருவுள்ளம் கொண்டார்.
கலியில் வரப்போகும் ஜனங்களுக்கு கருணை செய்யும் நோக்கில் அர்ச்ச அவதாரம் செய்ய சங்கல்பித்தார்.


ஒரு பெரிய பன்றி, சிறிய பாம்பு புற்றுக்குள் நுழைந்து மறைந்து விட்ட அதிசயத்தை வேடுவன், தனது அரசன் தொண்டைமானிடம் சொன்னான்.


இது ஏதோ தெய்வ சம்பந்தமான விஷயம் என்று உணர்ந்து, வேத கோஷங்கள் முழங்க, அந்த புற்றில் குடம் குடமாக பசும் பாலை ஊற்றி அபிஷேகம் செய்ய சொன்னார்.


புற்று மண் கரைய கரைய ...


மேலும் படிக்க..
http://proudhindudharma.blogspot.in/...st_27.html?m=1