ஸ்ரீ:
ஸ்ரீதேவி காமாட்சி பாடல்
(கிட்டத்தட்ட "கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பணிந்தேன்" மெட்டில் பாடவேண்டும்)

3.
கற்பகத் தரு போலே கருணை மழை பொழிவாயே
கண்களைத் திறந்தெந்தன் கனவுகளைக் கலைத்தாயே
கற்பனைக்கெட்டாத கலியுக தெய்வம் நீயே
கண்டுகொண்டேனுன்னை காஞ்சி காமாட்சி தாயே! (கற்பக)

சித்தமெல்லாம் உந்தன் சிங்கார ரூபமம்மா
சிந்தனையில் உனையன்றி வந்தனையே இல்லையம்மா!
சக்தியெல்லாம் உந்தன் ஸன்நிதி முன்னிலம்மா
சகலகலாவல்லி சரணமென்றே சொல்வேனம்மா!! (கற்பக)

தத்தையும் தாமரையுன் சித்தத்திற் குகந்ததன்றோ -நின்
தளிர்க்கரம் அதனுடனே சொந்தம் கொண்டாடிமோ !
காமாட்சி நகரினிலே கனிவாட்சி நடைபெறவே
கனிவான செங்கரும்பைக் கையில் கொண்டேகினாயோ?! (கற்பக)