Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 17 / 29 . எம்பெருமான் உĨ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 17 / 29 . எம்பெருமான் உĨ


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 17 / 29

    .



    எம்பெருமான் உகந்த , உயர்ந்த மணம், எது ?



    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    विश्वायमान , रजसा , कमलेन , नाभौ ;


    वक्ष: - स्थले च , कमला , स्तन , चन्दनेन ।


    आमोदितो , अपि , निगमै: विभु: , अंग्रि - युग्मे ;


    धत्ते ! नतेन , शिरसा , तव , मौलि , मालाम् ।।


    .


    விச்வாயமாந , ரஜஸா , கமலேந , நாபௌ ;


    வக்ஷ: - ஸ்தலே ச , கமலா , ஸ்தந , சந்தநேந |


    ஆமோதிதோ , அபி , நிகமை: , விபு: , அக்ரி - யுக்மே ;


    தத்தே ! நதேந , சிரஸா , தவ , மௌளி , மாலாம் ||


    .


    विभु: ........... பிரபுவான உன் நாயகன் ,


    विश्वायमान .... உலகங்களாகும் ,


    रजसा ........... துகள்களை உடைய ,


    कमलेन .......... தாமரையால் ,


    नाभौ ............. திரு உந்தியிலும் ;


    कमला ........... பெரிய பிராட்டியின் ,



    स्तन .............. ஸ்தனங்களில் பூசிய ,


    चन्दनेन .......... சந்தனத்தால் ,


    वक्ष: - स्थले च ..திரு மார்பிலும் ;


    निगमै: ............வேதங்களால் ,



    अंग्रि युग्मे ........இரு திருவடிகளிலும் ;


    आमोदित: अपि ..மணம் பெற்றிருந்தாலும் ,


    तव ............... உன்னுடைய ,



    मौलि मालाम् ... திரு முடியில் அணிந்த மாலையை ,



    नतेन ............. வணங்கிய ,


    शिरसा ...........திரு முடியால் ,


    धत्ते .............. அணிந்து கொள்கிறான் !



    .


    ஸ்ரீ .வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யர் விளக்கவுரை:


    * கோதைப் பிராட்டியே ! உன் நாயகனான எம்பெருமானுடைய திரு உந்திக் கமலத்தின் ஒவ்வொரு துகளும் , ஒவ்வொரு உலகமாய் மாறும் தன்மை உடையது. அத்தகைய துகளைப் பெற்ற தாமரைப் பூவினால் , அவனது திரு உந்தி , மிக்க மணம் கொண்டு திகழ்கின்றது

    * அவனது திருமார்பில் , எப்பொழுதும் விளங்கும் பெரிய பிராட்டியின் திருமுலைத் தடங்களில் அணிந்துள்ள திவ்ய சந்தனத்தால் , அவனது திரு மார்பு முழுதும் ,மணம் மிகுதியாய் வீசுகின்றது.


    * வடமொழி வேதங்கள் , ஆழ்வார்கள் கண்ட தமிழ் மறைகள் , அனைத்தும் , அவனுடைய திருவடிகளின் பெருமையே பேசி நிற்பதால் ,அவன் திருவடிகள் இரண்டிலும் , அவ்விரு மறைகளின் , திவ்ய பரிமளம் , நிறைந்து இருக்கிறது.


    * இங்ஙனம் , திருமேனி முழுதும் , ஒப்பற்ற நறுமணம் வீசினாலும் , அதானல் திருப்தி அடையாத உன் நாயகன் , அந்தப் பரிமளங்களைக் காட்டிலும் , உயர்ந்த பரிமளத்தைப் பெற விரும்பினான்.


    * அதற்காக , உன் திரு முடியில் சூடிக் களைந்த மாலையைத் , தன தலையால் வணங்கி ஏற்றுக் தரித்து , அற்புதமான மணம் நிறைந்து திகழ்கிறான்.


Working...
X