"ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கம்

வேதம் "ஓம்" என்ற பிரணவத்தில் இருந்து உண்டானது.
ஓம் அந்த பரவாசுதேவனால் உண்டானது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
அந்த பரவாசுதேவன் நாராயணனே என்றும் தெளிவாக "ஹரி: ஓம்" என்று வேதம் ஹரியின் பெயரை சொல்லி அதற்கு பின் தான் பிரணவம் என்கிறது.


வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம்.


அந்த ஓம் என்ற பிரணவமும் மூன்று அக்ஷரங்களால் ஆனது.


அந்த மூன்று அக்ஷரங்கள் "அ உ ம" எனப்படும்.

உலகம் வேதத்தில் அடங்குகிறது.


வேதம் பிரணவத்தில் அடங்குகிறது.


பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில், அக்ஷரங்களில் நான் "அ" என்ற அக்ஷரமாக இருக்கிறேன் என்கிறார்.

உலகமே வேதத்தில் அடக்கம். வேதமே பிரணவத்தில் அடக்கம் என்றால் அதன் பொருள் என்ன? அதனை உணர்ந்து ஜபம் செய்ய என்ன கிடைக்கும்?
மேலும் பார்ப்போம்.


a)
'அ' என்ற அக்ஷரம் பிரணவத்தின் (அஉம) முதல் அக்ஷரமாக உள்ளது.


"அ" என்ற அக்ஷரம் பரமாத்மாவை குறிக்கிறது.


அக்ஷரமாக பார்க்கும் போது "அ" என்ற சொல்லுக்கு "உயிர்" எழுத்து என்று அழகான பொருத்தமான பெயரில் நாம் சொல்கிறோம்.


இதற்கு உயிர் என்ற பெயர் கிடைத்ததே, இது பரமாத்மாவை குறிக்கிறது என்பதால் தான்.


நாம் (ஆத்மா) அனைவரும் ஜீவாத்மாக்கள். நம்மை படைத்தவர், அந்த பேருயிரான பரமாத்மா.


"அ" என்ற அக்ஷ்ரம் சொல்லும்போது, நம்மை படைத்த பரமாத்மாவை தியானிக்கிறோம் என்ற கவனத்துடன், கர்வமில்லாமல் சொல்ல வேண்டும்


இந்த "அ" என்ற உயிர் எழுத்து தனித்து தெரிவதால், இது பரமாத்மாவை குறிக்கிறது.


b)
'ம' என்ற அக்ஷரம் பிரணவத்தின் (அஉம) கடைசி அக்ஷரமாக உள்ளது.


"ம" என்ற அக்ஷரம் ஜீவாத்மாவான ....


மேலும் படிக்க ....
http://proudhindudharma.blogspot.in/...st_28.html?m=1