Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 18 / 29 . அரங்கனுக்குபĮ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 18 / 29 . அரங்கனுக்குபĮ




    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 18 / 29

    .


    அரங்கனுக்குப் பெருமை வந்தது எப்படி ?






    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    चूडा - पदेन , परि - गृह्य , तव , उत्तरीयम् ,


    मालाम् , अपि , त्वत् , अळकै : अधिवास्य , दत्ताम् |


    प्रायेण , रङ्ग - पति : , एष , बिभर्ति , गोदे !


    सौभाग्य , सम्पत् , अभिषेक , महा - अधिकारम् ||


    .


    சூடா - பதேந , பரி - க்ருஹ்ய , தவ , உத்தரீயம் ,


    மாலாம் , அபி , த்வத் , அளகை : , அதிவாஸ்ய , தத்தாம் |


    ப்ராயேண , ரங்க - பதி : , ஏஷ , பிபர்த்தி , கோதே !


    ஸௌபாக்ய , ஸம்பத் , அபிஷேக , மஹா - அதிகாரம் ||


    .


    गोदे .................. கோதைப் பிராட்டியே !


    तव ................... உன்னுடைய ,

    उत्तरीयम् ............ மேலாடையையும் ,

    त्वत् ................. உனது ,

    अळकै : ............. கூந்தலால் ,

    धिवास्य .......... மணம் ஊட்டி ,

    दत्ताम् ............... கொடுக்கப்பட்ட ,

    मालाम् अपि ....... மாலைகளையும் ,

    चूडा - पदेन ......... தனது , திரு முடியால் ,

    परि - गृह्य .......... ஏற்றுக்கொண்டு ,

    एष: .................. இந்த ,

    रङ्ग - पति : ....... திரு அரங்கன் ,

    सौभाग्य ............ .மங்களம் ஆகிய ,

    सम्पत् ............... செல்வத்தில் ,

    अभिषेक ............ முடி சூடுவதற்கு ,

    महा अधिकारम् . ...மேலான , தகுதியை ,


    प्रायेण ............... பெரும்பாலும் ,


    विभर्ति ............... தாங்குகின்றான் !


    .


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யார் விளக்கவுரை:


    * கோதைப் பிராட்டியே ! திரு அரங்க நகரப்பன் , நீ அணிந்த , மேலாடையை , மிக்க ஆதாரத்துடன் , தன் திருமுடிக்குப் , பரியட்டமாகத் தரிக்கின்றான்.


    * மேலும் , உன் , திருக் குழற் கற்றையில் , அணிந்ததால் , நறுமணம் , மிக , ஊட்டப்பட்டு , உன் தந்தையால் , ஸமர்ப்பிக்கப்பட்ட , பூ மாலையையும் , ஆர்வத்தோடு , ஏற்றுத் , தன திரு முடியில் , சூடிக் கொள்கிறான் .


    * இச்செய்கைகளால் , அவன் , தான் மங்கள ஸ்வரூபனாக , ஆகிப் , பிறருக்கும் , மங்களம் தரும் பெருமை பெறுகிறான் . இந்தப் பெருமையே , மிகப் பெரிய செல்வம் அன்றோ !


    * இச்செல்வத்துக்கு , நன்கு முடி சூடப் பெறுகிறான். என்னே உன் மேலாடையின் சிறப்பு ! என்னே நீ சூடிக் களைந்த பூ மாலையின் பெருமை !!


    *
Working...
X