Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29 . சூடிக் களைந்த 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29 . சூடிக் களைந்த 


    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 19 / 29

    .


    சூடிக் களைந்த மாலையின் பெருமை !



    .





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :



    .


    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |




    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    .


    तुङ्गै: , अकृत्रिम - गिर: , स्वयम् , उत्तमाङ्गै: ,




    यम् , "सर्व - गन्ध" , इति , सादरम् , उद्वहन्ति |




    आमोदम् , अन्यम् , अधिगछति , मालिकाभि:




    सो , अपि , त्वदीय , कुटिल , अळक , वासिताभि: ||


    .


    துங்கை: , அக்ருத்ரிம , கிர: , ஸ்வயம் , உத்தமாங்கை:




    யம் , "ஸர்வ - கந்த" இதி , ஸாதாரம் , உத்வஹந்தி |




    ஆமோதம் , அந்யம் , அதிகச்சதி , மாலிகாபி:





    ஸோ , அபி , த்வதீய , குடில , அளக , வாஸிதாபி: ||



    .


    अकृत्रिम गिर: ... வேத வாக்குகள் ,



    तुङ्गै: ............ உயர்ந்த ,


    उत्तमाङ्गै: ....... முடிகளால் ,


    यम् ............... எந்த எம்பெருமானை ,


    सर्व गन्ध इति ... "எல்லா மணத்தையும் , உடையவன்" என்று ,


    स्वयम् ........... தாங்களே ,



    सादरम् .......... ஆதரத்துடன் ,


    उद्वहन्ति .......... கொண்டாடுகின்றனவோ ,


    सो अपि .......... அந்த எம்பெருமானும் ,



    त्वदीय ............ உன்னுடைய ,


    कुटिल ............ சுருண்ட ,


    अळक ............ கூந்தலால் ,



    वासिताभि: ....... மணம் ஊட்டப்பட்ட ,



    मालिकाभि: ...... மாலைகளால் ,



    अन्यम् ............ விலக்ஷணமான ,



    आमोदम् .......... மணத்தை (மகிழ்ச்சியை) ,


    अधिगछति ...... ..அடைகிறான் !


    .


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:


    * கோதைப் பிராட்டியே ! வேதங்கள் , ஒருவராலும் இயற்றப்படாமல் , நித்தியமாக உள்ளது. அவை , தம் உயர்ந்த முடிகளான உபநிஷத்துக்களால் , உன் நாயகனான எம்பெருமானை , "ப்ரக்ருதி ஸம்பந்தம் அற்ற எல்லா வகையான நறுமணமும் நிறைந்தவன்" என்று , ஆதுரத்துடன் , புகழ்ந்து பேசுகின்றன.


    * அத்தகைய எம்பெருமானும் , உன் சுருட்டைக் கூந்தலில் சூடியதால் , நறுமணம் பெற்ற மாலைகளை , அணிந்து , ஒப்பற்ற ஓர் அற்புத மணத்தைப் , பெற்றுப் , பேரானந்தம் அடைகிறான்.


    * நீ சூடிக் களைந்த மாலையின் பெருமை அளவிடவே முடியாதோ !




Working...
X