உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்? என்ற கேள்விக்கு, சாஸ்திரம் என்ன பதில் சொல்கிறது.

விபீஷணன், ஸ்ரீராமரிடம் சரணாகதி என்று வந்த சமயத்தில், அனைவரும் "இவனை சேர்த்து கொள்ள கூடாது" என்று பல காரணங்கள் ஸ்ரீராமரிடம் கூறினர்.

சுக்ரீவன், "சொந்த அண்ணனை போர் வந்து விடும் என்ற நிலையில், விட்டு விட்டு, நம்மிடம் வருகிறான் என்பதே சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் சொன்னான்.

ஸ்ரீ ராமர் புன்சிரிப்புடன், லக்ஷ்மணரை பார்த்து கொண்டே, "எல்லோரும் பரதனை போல சகோதரன் ஆகி விட முடியுமா?" என்று சொல்லி,

தான் பகவான் என்று சொல்வதை விட, தசரதன் மைந்தன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்பட்ட ஸ்ரீராமர், தன்னை பற்றி பொதுவாக, உயர்த்தி எங்கும் பேசிக்கொள்ள ஆசைப்படாதவர், சுக்ரீவனை பார்த்து,
"ஒரு தகப்பனுக்கு என்னை போல மகன் கிடைத்து விடுவானா?" என்று பெருமிதமாக சொன்னார்.

ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பக்கத்தில் வைத்து கொண்டே, "பரதனை போல ஒரு சகோதரன் உண்டா ?" என்று உயர்த்துகிறார்.

அண்ணனுக்காக, 14 வருடமும் தூங்காமல்,
அண்ணனுக்காக 14 வருடமும் தன் மனைவி, தன் தாயை விட்டு, ஸ்ரீராமருக்கு சேவையே லட்சியம் என்று வந்த லக்ஷ்மணனை அருகில் நிற்க வைத்துக்கொண்டே, ஸ்ரீ ராமர், இப்படி சொன்னார் என்று நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

லக்ஷ்மணர் முகமும் இதனால் சுருங்கவில்லை. லக்ஷ்மணர் அமோதித்தது புரிகிறது.

லக்ஷ்மணரை விட பரதனே சிறந்த சகோதரன் என்ற ஸ்ரீ ராமரே சொல்லி விட்டார்.
அது மட்டுமில்லை, தனக்கு கிடைத்த பரதனை போன்ற சகோதரன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார்.

ஸ்ரீ ராமர், வேதங்களை, சாஸ்திரங்களை அறிந்தவர். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், வேத சாஸ்திரமானது.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsஉண்மையான சகோதரனை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் பதில் சொல்கிறது.
"சொத்து விவகாரங்கள் நடக்கும் போது, உண்மையான ....

மேலும் படிக்க ...
http://proudhindudharma.blogspot.in/...-post.html?m=1