Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 22 / 29 . எம்பெருமான் தĬ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 22 / 29 . எம்பெருமான் தĬ

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 22 / 29

    .

    எம்பெருமான் திருமேனி நிறம் , ஏன் மாறியது ?

    .


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .

    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .

    दूर्वा - दळ , प्रतिमया , तव , देह , कान्त्या ,

    गोरोचना , रुचिरया , च , रुचा , इन्दिराया: |

    आसीत् ! अनुज्झित , शिखावल , कण्ट , शोभम् ,

    माङ्गल्य - दम् , प्रणमताम् , मधु - वैरी , गात्रम् ||

    .

    தூர்வா - தள , ப்ரதிமயா , தவ , தேஹ , காந்தயா ,

    கோரோசநா , ருசிரயா , ச , ருசா , இந்திராயா : |

    ஆஸீத் ! அநுஜ்ஜித , சிகாவல , கண்ட , சோபம் ,

    மாங்கல்ய - தம் , ப்ரணமதாம் , மது - வைரி , காத்ரம் ||

    .

    प्रणमताम् ......... வணங்குபவர்களுக்கு ,

    माङ्गल्य - दम् ... நன்மையைத் தரவல்ல ,

    मधु - वैरि ........ எம்பெருமானுடைய ,

    गात्रम् ............. (கருமை நிறத்) திருமேனி ,

    दूर्वा - दळ ....... அருகம் புல் ,

    प्रतिमया ..........போன்ற ,

    तव ................உன் ,

    देह ................திருமேனியின் ,

    कान्त्या ...........(பசுமையான) ஒளியாலும் ,

    गोरोचना .........கோரோசனை போல் ,

    रुचिरया ..........அழகிய ,

    इन्दिराया: ........பெரிய பிராட்டியின் ,

    रुचा च ............திருமேனியின் (பொன் நிற) ஒளியாலும் ,

    अनुज्झित .........கை விடாத ,

    शिखावल .........மயிலின்

    कण्ठ ..............கழுத்தின் ,

    शोभम् ............அழகை உடையதாக

    आसीत् ...........ஆயிறறு !

    .

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * கோதைப் பிராட்டியே ! உன் நாயகனான எம்பெருமான் , திருமேனியைக் கண்ணால் கண்டு, அவனை , அடி பணிபவர்களுக்கு , அத் திருமேனி எல்லா நலங்களையும் , அருள வல்லது .

    * அத் திருமேனி கரு முகில் போன்று , கருமை நிறம் கொண்டது.

    * நீ அவன் அருகிலேயே எப்போதும் இருக்கிறாய் . உன் திருமேனி , அருகம்புல் போல , பசுமை நிறம் கொண்டது .

    * அவன் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் , பெரிய பிராட்டியின் திருமேனி , கோரோசனை போல , பொன் நிறம் கொண்டது.

    * இப்படி கருமை , பசுமை , பொன் ஆகிய மூன்று நிறங்களும் அவன் திருமேனியில் கலந்து , மிளிரும்போது , மயில் கழுத்து போல் அவன் திருமேனி விசித்திர நிறமாய் , காட்சி தருகிறது .
Working...
X