Announcement

Collapse
No announcement yet.

गोदा स्तुति: கோதா ஸ்துதி : 24 / 29 . எம்பெருமானின்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • गोदा स्तुति: கோதா ஸ்துதி : 24 / 29 . எம்பெருமானின்

    गोदा स्तुति: கோதா ஸ்துதி : 24 / 29

    .

    எம்பெருமானின் , இரு பக்கத்திலும் , இரு தேவிகள் இருப்பது , ஏன் ?

    .

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :

    .

    श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |

    वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    .

    आर्द्र - अपराधिनि , जने , अपि , अभि - रक्षणार्थम् ,

    रङ्गेश्वरस्य , रमया , विनिवेद्यमाने |

    पार्श्वे , परत्र , भवती , यदि , तत्र , न - आसीत् ;

    प्रायेण , देवि ! वदनम् , परिवर्तितम् , स्यात् ||

    .

    ஆர்த்ர - அபராதினி , ஜநே , அபி , அபி - ரக்ஷணார்த்தம் ,

    ரங்கேச்வரஸ்ய , ரமயா , விநிவேத்யமானே |

    பார்ச்வே , பரத்ர , பவதீ , யதி , தத்ர , ந - ஆஸீத் ;

    ப்ராயேண , தேவி ! வதனம் , பரிவர்த்திதம் , ஸ்யாத் ||

    .

    देवि ................. கோதைப் பிராட்டியே !

    जने ................. பக்தர்கள் ,

    अपराधिनि ......... தவறு செய்துவிட்டு ,

    आर्द्र अपि .......... வருந்தினாலும் ,

    अभि - रक्षणार्थम् ..அவர்களைக் காக்கும்படி ,

    रमया ............... பெரிய பிராட்டியால் ,

    रङ्गेश्वरस्य ........ ரங்கேஸ்வரனுக்கு ,

    विनिवेद्यमाने ........ விண்ணப்பம் , செய்யும்போது ,

    तत्र .................. அங்கு ,

    परत्र ................. மற்றோரு ,

    पार्श्वे ................ பக்கத்தில் ,

    भवती ............... தாங்கள் ,

    यदि न - आसीत् ... இல்லை , ஆயின் ,

    वदनम् .............. அவனது திரு முகம் ,

    प्रायेण .............. பெரும்பாலும் ,

    परिवर्तितम् ......... திருப்பியதாகவே ,

    स्यात् ................ இருக்கும் !

    .

    ஸ்ரீ. வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை:

    * கோதைப் பிராட்டியே ! பக்தர்கள் , பாபங்களைச் செய்வது இயற்கையே . அவர்கள் , புதிது புதிதாக , குற்றங்களைச் செய்துகொண்டே இருக்கின்றனர்.

    * குற்றம் செய்த கை , உலராதிருக்கும்போதே , அவர்களைக் காப்பாற்றுவதற்காக , உன் நாயகனான , திருவரங்கனிடம் , பெரிய பிராட்டி , பரிந்து , பேசிக்கொண்டே இருக்கிறாள் .

    * அவள் எப்போதும் இப்படியே பேசிக்கொண்டிருப்பதைக்கண்டு , சில சமயம் , அவனுக்கு , சிறிது சலிப்பு , ஏற்பட்டுத் , தன் திருமுகத்தை , வேறு பக்கம் திருப்பிக் கொள்ள முற்படுகிறான் .

    * அந்த மற்றோர் பக்கத்திலும் , அவளைவிட கருணை மிகுந்த , நீ அமர்ந்து , நீயும் , பக்தர்களைக் காக்குமாறு , மிகப் பரிந்து , பேச முன்வருகிறாய் .

    * ஆதலின் , எம்பெருமான் , தன் முகத்தை , மற்றொருபக்கம் திருப்பியும் , பயன் இல்லாததால் , பெரிய பிராட்டியின் சொற்படியே , பக்தர்களைக் , காத்து விடுகின்றான்.

    * இப்படி , பெரிய பிராட்டி ஒரு பக்கத்திலும் , நீ, ஒரு பக்கத்திலும் இருந்து காக்காவிட்டால் , பாவிகள் , வாழும் வழி ஏது ?
Working...
X