ஒரு sanskrit வார்த்தையின் அர்த்தம்.
அதிதி (Aditi) -
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
"திதி" என்றால் நேரம், தேதியை குறிக்கிறது.
"அதிதி" என்றால் காலம், நேரம் இல்லாமல் என்று அர்த்தம்.
இந்தியாவில் மட்டும் தான் "அதிதி தேவோ பவ" என்று சொல்லும் பழக்கம் உண்டு.
வெளிநாட்டவன் அதிதி என்றால் "Guest" என்று அர்த்தம் புரிந்து கொள்கிறான். அவன் புத்திக்கு எட்டியது அவ்வளவு தான்.
வீட்டுக்கு இத்தனை மணிக்கு வருகிறேன், இந்த தேதிக்கு வருகிறேன் என்று சொன்னால் தான், வெளிநாட்டவன் வீட்டில் வரும் விருந்தாளிக்கு மரியாதை கிடைக்கும்.
நேரம் காலம் சொல்லி வீட்டுக்கு வருபவனை தான் guest என்று சொல்கிறான் வெளிநாட்டவன்.
நம் பாரத நாட்டில், நேரம் காலம் சொல்லாமல் வரும் அதிதியையும் வணங்கி உபசரிக்கும் உயர்ந்த குணம் உண்டு என்பதால் தான் வெளிநாட்டவன் நினைத்து கூட பார்க்காத உயர்ந்த குணத்தை சர்வ சாதாரணமாக "அதிதி தேவோ பவ" என்கிறான்.
நேரம் காலம் சொல்லாமல் திடீரென்று வரும் விருந்தினனை, நான் தெய்வத்துக்கு சமமாக நினைத்து உபசரிப்பேன் என்கிறான் ஹிந்து.
இந்த உயர்ந்த குணம் நம்மிடையே மீண்டும் துளிர்க்க வேண்டும்.
அதிதி தேவோ பவ என்ற சொல்லுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை உணர வேண்டும்.
வீட்டிற்கு வரும் அதிதியையும் உபசரிக்க வேண்டும். இது ஹிந்துக்களின் உயரிய பண்பு.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சிறப்பு சொல்லும் போது, நம் இந்தியர்களை பார்த்து "Indians are known for hospitality" என்று சொல்கின்றனர்.
இந்த பெருமை "guest" வந்தால் இந்தியன் உபசரிப்பான் என்ற காரணத்தால் கொடுக்கப்படவில்லை. அதிதியாக வந்தாலும், ஹிந்து உபசரிப்பான் என்ற காரணத்தால் கிடைத்தது.
திடீரென்று வந்த சுதாமாவை ஸ்ரீகிருஷ்ணர் எப்படி வரவேற்றார். கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும். நம் தெய்வம் எப்படி உபசரிக்க வேண்டும் என்று காட்டினார்.
மேலும் படிக்க....
http://proudhindudharma.blogspot.in/...st_10.html?m=1
Bookmarks