AC Muthaiah -Periyavaa
ரெண்டு மட்டை தேங்காகொண்டா..!


பல வர்ஷங்களுக்கு முன் ஒருநாள் இரவு கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையில், ஶ்ரீமடத்திலிருந்து ரெண்டு பேர், தொழிலதிபர் ஶ்ரீ A.C முத்தையாவின் வீட்டுக்கு வந்தார்கள்.


அவர்களை தகுந்த முறையில் வரவேற்றார்.


"என்ன விஷயம்? இத்தன மழைல."


"பெரியவா..ஆக்ஞை!சிதம்பரத்ல நடராஜருக்கு வைரக்ரீடம் பண்றதுக்காக நிதி தெரட்டச் சொல்லி. பெரியவா உத்தரவிட்டிருக்கா.! எங்களாலஓரளவுதான் முடிஞ்சுது. இங்க. மெட்ராஸ்ல சில பேரைப் பாத்துக் கேக்கலாம்-ன்னு இருக்கோம். அதுக்கு. நீங்கதான் ஸஹாயம் பண்ணணும்"


பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஶ்ரீ முத்தையா.


"அதுக்கென்னங்க? பெரியவா உத்தரவிட்டாப் போறுமே! கட்டாயம். எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்றேன். எவ்வளவு நிதி தெரட்டி தர முடியுமோ என்னால ஆனதை செய்யறேன். மீதி எவ்வளவு தேவையோ, அத நானே குடுக்கறேன்.. இது, எங்களோட பாக்யம்"


வெறுமனே வாய் வார்த்தையாக சொன்னதோடு நில்லாமல், அவ்வாறே தந்து, சிதம்பரம் நடராஜருக்கு வைரக்ரீடம் ஸமர்ப்பிக்கும் பணியை சிறப்பாக முடித்தார்.


1992-ல் ஸ்ரீபெரும்புதூர் வேங்கடேஶ்வரா எஞ்ஜினீரிங் காலேஜை துவக்கினார் ஶ்ரீ முத்தையா. அதற்கு முன் பெரியவாளை தர்ஶனம் பண்ணப் போனார்.


"பெரியவாளுக்கு. இந்த ஸால்வையை ஸமர்ப்பிக்கறேன்"


பெரியவா அந்த ஸால்வையை உற்றுப் பார்த்தார்.


"பட்டா?"


"ஆமாபட்டுதான்.."
|
"நா..ஸன்யாஸி.! பட்டு.. எனக்கு வேணாமே!"


பட்டை ஏற்றுக் கொள்ளுவது பெரியவாளுடைய "அஹிம்ஸா தர்மத்துக்கு" புறம்பானது. ஆனால், அன்போடு வந்தவரை, அவர் கொண்டு வந்த பட்டு ஸால்வையுடன் திருப்பி அனுப்பவும் மனஸில்லை.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
தர்மத்தை, ஶாஸ்த்ரத்தை இம்மியளவும் மீறாமல், அதே ஸமயம் யாரையும் நோக அடிக்காமல் த்ருப்திப்பட வைப்பதில், பெரியவாளுக்கிணை பெரியவாதான்!


எனவே அவரைக் கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு, தான் போர்த்திக் கொண்டிருந்த கதர்த்துணிப் போர்வையை எடுத்து, தன் ஶிரஸில் [தலையில்] தேய்த்துக் கொண்டு, பக்கத்திலிருந்த பாரிஷதரிடம் தந்தார்.


"இந்தாடா.இத. முத்தையாவோட ஸம்ஸாரத்துக்கிட்ட குடுக்கச் சொல்லு"


என்ன ஒரு பாக்யம்! எப்பேர்ப்பட்ட ஆஶீர்வாதம்!


நடராஜாவுக்கு வைரக்ரீடம் அணிவிக்க மனமுவந்து, அதுவும் ஶப்தமில்லாமல் நிதி அளித்ததால், அந்த நடராஜாவே இப்படியொரு அமோஹமான அனுக்ரஹத்தை பண்ணிவிட்டார்.


பணம் இருந்தால் மட்டும் போதாது; அதை நல்ல கார்யங்களுக்கு, ஆத்மார்த்தமாக, டம்பம் இல்லாமல் குடுக்க வேண்டுமே!


சில நாட்கள் முன்புதான், ஶ்ரீ முத்தையாவின் மகனுக்குக் கல்யாணம் நிச்சயமானது. பத்து மாஸம் கழித்துத்தான் கல்யாணம் நடக்க இருந்தது.


"பெரியவா..ஆஶிர்வாதத்தோட பையனுக்கு இந்த வர்ஷ கடஸீல கல்யாணம் வெச்சிருக்கு.."


பெரியவாளிடம் தன் மகனின் திருமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.


பெரியவா ஒரு க்ஷணம் அமைதியாக இருந்தார்.


பிறகு பாரிஷதரை அழைத்தார்.


"ரெண்டு மட்டைத் தேங்கா எடுத்துண்டு வா."


மட்டைத் தேங்காய் வந்ததும், அதை தன் திருக்கரங்களால் தொட்டு ஆஶிர்வதித்து, முத்தையாவிடம் குடுத்தார்.


ஸாதாரணமாக கல்யாணப் பத்ரிகை கொண்டு வந்து, முறையாகக் குடுக்கும் போதுதான், பெரியவா மட்டைத் தேங்காய் குடுத்து ஆஶிர்வாதம் பண்ணிக் குடுப்பார். ஆனால், இப்போது மட்டும் ஏன் இப்படி பத்து மாஸம் முன்னாலேயே, பத்ரிகை கூட இல்லாமல், மட்டைத் தேங்காய் தந்து ஆஶிர்வாதம் பண்ணினார்?|


பாரிஷதர்கள் உள்பட யாருக்கும் விளங்கவில்லை.


பெரியவா செய்யும் எந்த கார்யத்துக்கும் அர்த்தம் இல்லாமல் போகுமா என்ன?.


ஶ்ரீ முத்தையாவின் மகனின் திருமணத்துக்கு பதினைந்து நாட்கள் முன்னாடியே நம் பெரியவா ப்ருந்தாவன ப்ரவேஸம் செய்து விட்டார் !!


ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்