219.வேழம் உண்ட
219
காசி


தான தந்த தனாதன தனதான


வேழ முண்ட விளாகனி யதுபோல
மேனி கொண்டு வியாபக மயலூறி
நாளு மிண்டர் கள்போல்மிக அயர்வாகி
நானு நைந்து விடாதருள் புரிவாயே
மாள அன்று மணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா
காள கண்ட னுமாபதி தருபாலா
காசி கங்கை யில்மேவிய பெருமாளே

- 219 காசிபதம் பிரித்தல்


வேழம் உண்ட விளா கனி அது போல
மேனி கொண்டு வியாபக மயல் ஊறி


வேழம் உண்ட = வேழம் என்னும் நோய் உண்டவிளாக் கனி அது போல = விளாப் பழத்தைப் போல்மேனி கொண்டு = மேனியை அடைந்து (உள் இருக்கும் சத்து அற்று) வியாபக = எங்கும் மயல் ஊறி = காம இச்சைப் பரவி-.


நாளும் மிண்டர்கள் போல் மிக அயர்வாகி
நானும் நைந்து விடாது அருள் புரிவாயே


நாளும் = நாள் தோறும் மிண்டர்கள் போல் =அறிவின்மையால் திண்மை கொண்ட (மூடர்கள்) போன்று அயர்வாகி = தளர்ச்சி அடைந்து நானும் நைந்து விடாது = நானும் மெலிந்து வாட்டமுறாதபடி அருள் புரிவாயே = அருள் புரிவாயாக.


மாள அன்று அமண் நீசர்கள் கழு ஏற
வாதில் வென்ற சிகாமணி மயில் வீரா


அன்று = முன்பு அமண் நீசர்கள் = சமணக் குருமார்கள் கழு ஏற மாள = கழுவில் ஏறி மாளும் வண்ணம் வாதில் வென்ற = வாதில் வென்றசிகாமணி = சிகாமணியே மயில் வீரா = மயில் வீரனே.


காள கண்டன் உமாபதி தரு பாலா
காசி கங்கையில் மேவிய பெருமாளே.


காள கண்டன் = விடமுண்ட கண்டனாகிய உமாபதி= உமா தேவியின் கணவனான சிவபெருமான் தரு பாலா = பெற்ற பிள்ளையே கங்கை = கங்கை நதிக் கரையில் உள்ள காசியில் மேவிய பெருமாளே =காசித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendsவேழம் என்னும் நோய் பரவிய விளாம்பழத்தில், உள்ளிருக்கும் பழம் நீங்கி, ஓடு மட்டும் மிஞ்சுமோ, அதுபோல என் உடம்பில் காம இச்சை காரணமாக, நாள்தோறும் உடல்தளர்ச்சி மேலோங்குகிறது. மூடர்களைப் போல உடல் பலவீனத்தை அடியேனும் அடைந்து விடாதபடி அருள்புரிவாயாக.
விளக்கம்: அவல் உடலுக்கு சத்துள்ள ஆகாரம். நெல்லைக் குத்தினால் தரமான அவல் கிடைக்கும். இதுபோல், மனதுக்கு சத்துள்ள ஆகாரம் ஒன்று இருக்கிறது. அதுதான் "பக்தி' என்னும் அவல். அதிலும் முருகபக்தி என்னும் அவல் கிடைத்து விட்டால் அது சம்பா அவல் சாப்பிட்டது போல இன்னும் பிரமாதமாக இருக்கும். நாம் வயிற்றுக்கான சாப்பாட்டு விஷயத்தில் நிறைய வகைகளை கண்டுபிடிக்கிறோம். மனதுக்கான சாப்பாட்டுக்கும் "மெனு' கண்டுபிடிக்க வேண்டும். நல்ல மனம், நல்ல பேச்சு, நல்ல எண்ணங்கள் ஆகிய "மெனு' மனதுக்குரியதாக உள்ளன. இவற்றை சாப்பிட வேண்டுமானால், நம் பக்திச்செம்மல்கள் நமக்காக விட்டுச்சென்றிருக்கும் புராணங்களையும், அறநூல்களையும் படிக்க வேண்டும். செய்வோமா!
வேழம் உண்ட விளாகனி....
உலங்குண்ட விளங்கனி போல்
உள்மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாரணற்கென்
நடலை நோய் செப்புமினே ....நாச்சியார் திருமொழி


சுற்றி மரக்காவில்
வேழம் உண்டகனி .....அகப்பேய்! .. அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்


மாள அன்று அமண் நீசர்கள் கழு ஏற
வாதில் வென்ற சிகாமணிசமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார். அதனால் சமணர்கள் தாங்கள் முன்னமே நியமித்துக் கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர், இதனை "அங்கத்தைப் பாவை செய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ஒருகோடி பந்தப்பொற் பாரப யோதர (பந்தப்பொற் பாரப யோதர அவிநாசி பாடல் என்று அருணகிரிநாதர் சுவாமிகள் பாடியுள்ளார், இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கப்பட்டது, இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது, இவ்வூர் திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது, இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும், திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளது. திருப்பூவணத்தில் 10நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6ஆம்நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது