Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : ஸ்ரீ தசாவதார ஸ்த

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : ஸ்ரீ தசாவதார ஸ்த





    श्री दशावतार स्तोत्रम् :


    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் 01 / 13





    அரங்கன் , மங்களங்களை , அருளட்டும் !



    श्रीमते निगमान्त महा देशिकाय नम:



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் முன்னுரை:

    * எம்பெருமானுடைய பத்து அவதாரங்களைப் பற்றிய ஸ்தோத்ரம் ஆதலால் , இதற்கு இப்பெயர் வந்தது. ஸ்ரீ தேசிகன் , திருவரங்கத்தில் எழுந்தருளி இருந்தபோது , ஸ்ரீ தசாவதார சன்னிதியில் , எம்பெருமானுடைய பத்து அவதாரத் திருமேனிகளையும் ஸேவித்தார் . அந்தப் பத்து அவதாரங்களிலும் , எம்பெருமான் செய்தருளிய , திவ்ய லீலைகளைச் சுலோகங்களில் அமைத்து இந்த ஸ்தோத்ரத்தை அருளிச் செய்தார்.

    * திருவரங்கனே , அந்த அவதாரங்களை செய்தததாகத் தொடங்குகின்றது , இந்த ஸ்தோத்ரம் . கடைசியில் , பத்து அவதாரங்களையும் பொருத்தமான அடைமொழி கொடுத்து , ஒரே ஸ்லோகத்தில் அமைத்துப் பாடியிருப்பது , சுவைத்தற்கு உரித்து.

    * இறுதியில் , இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்க்குப் , பல் வகைப் பலன் கூறித் , தலைக் கட்டுகிறார் ஸ்ரீ தேசிகன்

    देवो , न: , शुभम् , आतनोतु ! दशधा , निर्वर्तयन् , भूमिकाम् ,


    रङ्गे , धामानि , लब्ध , निर्भर , रसै: , अध्यक्षितो , भावुकै: |


    यत् भावेषु , पृथक् विधेषु , अनुगुणान् भावान् , स्वयम् , बिभ्रती ,


    यत् धर्मै : , इह धर्मिणी , विहरते , नाना (आ)कृति: , नायिका ||


    .

    தேவோ , ந: , சுபம் , ஆதனோது ! தசதா , நிர்வார்த்தயன் , பூமிகாம் ,

    ரங்கே தாமனி , லப்த , நிர்ப்பர , ரஸை : , அத்யக்ஷிதோ , பாவுகை : |

    யத் பாவேஷு , ப்ருதக் , விதேஷு , அனுகுணான் , பாவான் , ஸ்வயம் , பிப்ரதீ

    யத் தர்மை : , இஹ , தர்மிணீ , விஹரதே , நாநா (ஆ)க்ருதி: , நாயிகா ||


    .


    यत् भावेषु ...... யாருடைய அவதாரங்களில் ,

    नायिका ......... ஸ்ரீ ரங்க நாச்சியார் ,

    पृथक् विधेषु .... வெவ்வேறான ,

    अनुगुणान् ....... பொருத்தமான


    भावान् ............ அவதாரங்களை ,

    स्वयम् .............தானே ,

    बिभ्रती ............ எடுத்துக்கொண்டு ,


    नाना ...............பல

    आकृति: .......... வடிவங்களை ,

    यत् धर्मै : ........ அவனது தர்மங்களோடு

    धर्मिणी ........... ஒத்த தர்மங்களுடன் ,

    इह .................. இவ்வுலகில்


    विहरते ............ .விளையாடுகிறாளோ ,



    देव: ................ அந்த அரங்கன் ,

    दशधा ............. .பத்து வகைகளான

    भूमिकाम् ...... .....வேஷத்தை ,

    निर्वर्तयन् .............எடுத்துக் கொண்டு ;

    निर्भर .................முழுமையான ,

    रसै: .................. மகிழ்சசி

    लब्ध ................. அடைந்த

    भावुकै: .............. பக்தர்களால் ,

    रङ्गे ................. திரு அரங்கம் எனும்

    धामनि ................ தலத்தில் ,

    अध्यक्षित: ........... காணப்படுபவனுமான

    न: ..................... நம் எல்லோருக்கும் ,


    शुभम् ................. மங்களத்தை ,

    आतनोतु ............. அருள வேண்டும் !


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * உலகில் , நடிகன் , பற்பல வேடங்களை அணிந்து , நாடக மேடைக்கு வந்து நடிப்பான் . அப்போது , நடிகையும் , அவனது வேடத்திற்கு ஏற்ற வேடத்தை அணிந்து , மேடைக்கு வந்து , ஏற்றவாறு நடிப்பாள் . இவர்களின் நடிப்பைக் கண்டு , ரசிகர்களான மக்கள் மனம் மகிழ்வார்கள் .

    * இங்கு , திருவரங்கமே 'ரங்கம்' எனும் பெயர்க்கு இணங்க , ஒரு நாடக மேடை. இதில் , திரு அரங்கனும் , திரு அரங்க நாச்சியாரும , நடிப்பவர் ஆவர். திரு அரங்கன் எனும் நடிகன் , மத்ஸ்யம் , கூர்மம் , வராஹம் , நரஸிம்ஹம் முதலிய பத்து வேடங்களை அணிந்து நடிக்கின்றான் . இது இவனுக்கு ஒரு லீலையாக உள்ளது .

    * திரு வரங்க நாச்சியார் எனும் நடிகையும் , இவனுடைய அவதாரங்களுக்கு ஏற்ற வடிவு கொள்கிறாள் . இவன் செய்யும் படைத்தல் , காத்தல் முதலிய செயல்களுக்கு , ஏற்ற செயல்கள் இவளும் புரிந்து , துணை செய்கிறாள் . இதுவும் இவளுக்குத் திரு விளையாடல் ஆகிறது.

    * இவர்களின் வேடத்தையும் , செயல்களையும் கண்டு , ரசிகர்களான அடியார்கள் , மிக்க மகிழ்ச்சி கொள்கின்றனர் . இவ்வாறு , பிராட்டியைப் பிரியாத திருவரங்கன் , நமக்கு , நலத்தை அருள வேண்டும் !

    Last edited by sridharv1946; 21-03-18, 18:31.
Working...
X