Announcement

Collapse
No announcement yet.

Abhirami pattar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Abhirami pattar

    Courtesy: Sri.ON.Ravi
    தை அமாவாசைதான் திருக்கடையூர் உறையும் அன்னை அபிராமி, தன் பக்தரான சுப்பிரமணியம் என்னும் அபிராம பட்டருக்கு தன்காதில் உள்ள தாடங்கத்தை பூர்ண பவுர்ணமி நிலவாக மாற்றி, பட்டரை ஆட்கொண்டத் திருநாள். தஞ்சையை ஆண்ட மன்னன் சரபோஜி மன்னர்,அவருடைய உண்மையான யோக நிலையை அறியாமல், பட்டர் அம்பிகையின் தியானத்தில் இருக்கும் பொழுது (சிறந்த ஸ்ரீ வித்யா உபாசகரானஅவர் அன்னையை பூர்ண சந்திரனின் நடுவில் தியானிப்பது வழக்கம். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தில், பூர்ண சந்திரனின் 16 கலைகளும்அம்பிகையின் அம்சங்களாகும்), தை அமாவாசையான அன்று என்ன திதி என்று கேட்க, தன்னை மறந்து அன்னையை பூர்ண சந்திரன் மத்தியில்தியானித்துக் கொண்டிருக்கும் பட்டர், பவுர்ணமி என்று சொல்லிவிடவே, திரும்ப அதே கேள்வியைக் கேட்ட அரசருக்கு அதே பதிலை சொல்லஅதனால் வெகுண்ட மன்னர் மறுபடி அதே கேள்வியைக் கேட்டு வற்புறுத்த, தன் தியானத்தை கலைக்கும் மன்னரை பாவ சமாதியில் இருக்கும்பட்டர், தன்னை மறந்து ஏசி பேசி விடுகின்றார். அதனால் மிகுந்த சினம் கொண்ட அரசன் அன்று இரவுக்குள் பூர்ண நிலவைக் காட்டாமல்போனால், பட்டரை 100 கயிறுகளால் கட்டப் பட்ட மரப் பலகையில் ஏற்றி, அதன் அடியில் பெரும் நெருப்பு குழி ஏற்படுத்தி, ஒவ்வொருகயிறாக அறுத்து, அவரை அத்தீ குழியில் வீழ்த்திக் கொன்று விட ஆணை இடுகின்றார். அதன் படியே ராஜ சேவகர்கள் செய்கின்றனர்.அப்பொழுது பட்டர் அம்பிகையின் பரிபூர்ண ஆசியால் பாவ சமாதியில் இருந்து அன்னை மீது அதி அற்புதமான அந்தாதி யாப்பில் அபிராமியின்புகழை துள்ளி வரும் அருவியாய் அழகியத் தமிழில் 100 பாடல்களில் பாடிக் கொண்டே வருகின்றார். அரசரின் கட்டளைப் படி ஒவ்வொருகயிறாக(தறியாக) அறுத்துக் கொண்டே வருகின்றனர். பட்டர் 79வது பாடலான விழிக்கே அபிராம வல்லிக்கு என்னும் பாடலைப் பாடியவுடன்அம்பிகை அவருக்கு தரிசனம் தந்து தன்னுடைய இடது புறம் காதில் அணிந்த தாடங்கத்தை (அம்பிகையின் இடது தாடங்கம் சந்திரன் என்றும்வலது தாடங்கம் சூரியன் என்றும் தேவி உபாசனை நூல்கள் கூறுகின்றன) ஆகாயத்தில் வீசி எறியவே, அது பூர்ண சந்திரனாக மாறுகின்றது.இவ்வதிசயத்தைக் கண்ட மன்னர், பட்டர் பெருமை அறிந்து "அபிராமப் பட்டர்" என்று புகழ்மாலைச் சூடி அவரைக் கொண்டாடுகிறார். தன் தவவலிமையால் தேவியின் வடிவாகவே மாறிய அபிராமப் பட்டரை இன்று ஒருமுறை நினைத்து அவருடைய அபிராமி அந்தாதியை படித்து,கேட்டு அன்னை அருள் அடைவோமாக
Working...
X