Announcement

Collapse
No announcement yet.

Saphala ekadasi

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Saphala ekadasi

    Saphala ekadasi
    ராம் ராம்
    சாந்த்ரமான ரீதியில் பௌஷ க்ருஷ்ணபக்ஷ ஏகாதஶீ திதிக்கு
    "ஸபலா" என்ற பெயராகும்.
    இந்த வ்ரதத்தின் மாஹாத்ம்யம் மற்றும் கதையை பார்ப்போம்.
    पौषस्य कृष्णपक्षे या सफला नाम नामतः।
    नारायणोधिदेवोस्याः पूजयेत्तं प्रयत्नतः।।
    पूर्वेण विधिना राजन् कर्तव्यैकादशी जनैः।
    नागानां च यथा शेषः पक्षिणां गरुडो यथा।।
    यथाश्वमेधो यज्ञानां नदीनां जाह्नवी यथा।
    व्रतानां च तथा राजन् प्रव्रैकादशी तिथिः ।।
    இந்த புஷ்ய கிருஷ்ண பக்ஷ ஏகாதஶீ ஆனது, ஸபலா என்ற பெயர் கொண்டதாகும்..இதில் பூஜிக்கதக்க தெய்வமானவர் நாராயணனாவார்.
    விதி விதாயகத்துடன் இந்த வ்ரதத்தை ஜனங்களால் அனுஷ்டிக்கப்பட வேணும்.
    நாகங்களில் ஆதிஶேஷன் எப்படியோ!
    பக்ஷிகளில் கருடன் எப்படியோ!
    யாகங்களில் அஶ்வமேதம் எப்படியோ!
    நதிகளில் கங்கை எப்படியோ!
    அப்படி தான் இந்த ஏகாதஶீ மிகவும் உயர்ந்ததாகும்..
    இந்த ஸபலையில் நிறைய பழங்களைக்கொண்டு பூஜிக்க வேண்டும்..
    ஶுத்தமான தேங்காய்,
    கொய்யாப்பழம்,
    எலுமிச்சை,
    மாதுளை
    பாக்கு,
    லவங்கம்
    மாம்பழம்
    முதலிய பழங்களை கொண்டு அந்த தேவதேவனான நாரயணனை தூபம், தீபம்,போன்ற உபசாரங்களுடன் பூஜித்தல் வேண்டும்.
    இந்த ஏகாதஶீயில் தீபம் ஏற்றி பூஜித்தல் மிக உயர்ந்ததாகும்.
    ராத்ரி கண் விழித்து ஓர் மனதுடன் எவன் ஒருவன் வ்ரதத்தை அனுஷ்டிப்பானாகில் அதன் பலமானது,
    வேறு எந்த யாகத்தாலோ தீர்த்தயாத்ரையினாலோ கிடைக்க கூடியதாகாது..


    पञ्चवर्षसहस्राणि तपस्तप्त्वा च यत्फलम् ।
    तत्फलं समवाप्नोति सफलाया व्रतेन तु।।
    ஐந்தாயிரம் வருடம் தபஸ் செய்தால் என்ன பலம் ஏற்படுமோ அந்த பலமானது இந்த ஏகாதஶீ வ்ரதத்தில்*கிடைக்கின்றது..


    இந்த ஏகாதஶீ வ்ரதத்தின் கதையை பார்ப்போம்..
    புகழ்ப்பெற்ற சம்பாவதீ என்கின்ற நகரத்தில் மாஹிஷ்மதன் என்கின்ற அரசன் இருந்தான்.
    அவனுக்கு நான்கு பிள்ளைகள் இருந்தனர்.
    அவர்களில் மூத்தவன் மஹாபாபீயாக இருந்தான்.
    பிறர் மனைவியை துன்புறுத்துதல்,
    வேசியிடம் செல்லுதல், தன் தந்தையின் செல்வாக்கையும், செல்வத்தையும் தவறான முறையில் செலவு செய்ய தொடங்கினான்.பகவானையும் , பாகவதர்களையும் நிந்தித்தான்,
    அவனை உற்றார் உறவினர் மற்றும் அரசனும் பொறுமை இழந்து அவனை நாடுகடத்த முடிவு செய்தனர். அவனை ஒற்றையாளாக ஆக்கினர் . அவனிடம் யாரும் புழங்கவில்லை. இதை அறிந்த அவன் காட்டுக்கு கிளம்பினான்.பகலில் காட்டிலும் இரவில் நாட்டிலும் இருந்து கொண்டு சொத்தை அனுபவிப்பது என நினைத்துக்கொண்டான்.
    அங்கு காட்டில் சென்றும் திருட்டு வழிப்பறி முதலியவைகளை தொடங்கினான்.
    அங்கு பழம் முதலியவைகளை சாப்பிட்டு வந்தான்.. அவனை ப்ரஷ்டப்படுத்தினர்..
    அங்கு ஓர் ஆஶ்ரமம் மற்றும் அதனருகில் ஓர் பாழடைந்த அரசமரம் இருந்தது...
    எந்த கர்மாக்களையும் செய்யாமல் அங்கேயே காலத்தை கடத்தினான்..
    ஒரு நாள்.
    அன்று தஶமீ அன்று நல்ல குளிர். அவனுக்கு வஸ்த்ரமின்மையால் இரவு முழுவதும் தூங்கவே இல்லை.
    அவனை அறியாமல் உறைந்து போனான். மறுநாள் காலை ஏகாதஶீ அன்று ஸூர்யோதயம் ஆகி மத்யாஹ்னகாலம் வந்த போது தான் உறைவில் இருந்து விடுபட்டான்.
    விழித்து கொண்ட அவன் எழுந்தால் நொண்டி போல் நடக்கலானான்.. பசி தாஹத்தினால் அவஸ்தையுற்றான்..
    கீழே விழுந்து கிடந்த சில பழங்களை எடுத்து வந்தான் அச்சமயத்திற்கே இருள் வந்து விட்டது....அவன் அஶக்தனான்.. அப்பழங்களை அரச மரத்தின் அடியில் வைத்தான்..
    சாப்பிடாமல் வருத்தத்தில் ஆழ்ந்தான் அன்றும் தூங்கவில்லை.. காலையில் ஸ்வாமியான நாராயணனின் அனுக்ரஹத்தை பெற்றான்.. தன்னை அறியாமல் செய்த வ்ரதத்தை செய்த அவனுக்கு பகவான் அனுக்ரஹம் செய்தார்..அவன் முன் தோன்றி உன்னால் எதிர்ப்பாராத விதமாக செய்யப்பட்ட வ்ரதத்தை மெச்சினோம்.. நீ உன் நகரம் சென்று உன் தந்தையை சந்திப்பாயாக .. உனக்கு க்ஷேமம் உண்டாகும் என பகவான் சொல்ல உடனே நல்ல தேஜஸ்வீயான ரூபத்தை பெற்றான். காலையில் நாட்டிற்கு சென்றான் அவனது வ்ருத்தாந்தத்தை கேட்டு அரசன் ஆனந்தித்தான்.அவன் ராஜ்யத்தையும் அடைந்தான்.. ஆண்டான்.. அதன் பிறகு அவன் பரம விஷ்ணுபக்தனாக வாழ்ந்து காலக்ரமத்தில் மோக்ஷஸாம்ராஜ்யத்தை அடைந்தான்..


    நண்பர்களே பார்த்தீர்களா.. தெரிந்து செய்த தவறுகளை தெரியாமல் செய்த ஸபலா ஏகாதஶீயின் வ்ரதமானது பரம சௌக்யத்தை அளித்தது.. இதை அறிந்து நாமும் இவ்ரதத்தை அனுஷ்ட்டிப்போமாக..
    இக்கதையை கேட்டாலோ சொன்னாலோ ராஜஸூய யாகம் செய்த பலனை பெறுவோம் என ஸாக்ஷாத் பகவான் ஸ்ரீக்ருஷ்ணனின் வாக்கு ...
    இந்த கதை பவிஷ்யோத்தர புராணத்தில் உள்ளது..


    ராம் ராம்
Working...
X