Rewarding a poor brahmin -Periyavaa
ஸ்ரீ மஹா பெரியவாவின் சரித்ரம்" Part 166 - HAPPY SATURDAY MORNING OCTOBER 6, 2017.
பெரியவா அருகில் இருந்த ஒரு தொண்டர் தான் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு அனுபவித்த ஒரு சம்பவம்.
எங்கோ ஒரு குக்கிராமம் தமிழ் நாட்டில் இருக்கும் எத்தனையோவில் ஒன்று. நமது கிராமங்களில் சிவன் இருந்தால் அருகே ஒரு பெருமாள் இருப்பார். அருகாமையில் அம்மன் கோவிலும் இருக்கும். இப்படி மூன்றும் தவிர வேறு எத்தனையோ கோவில்கள் காணப்பட்டாலும் நிச்சயம் இந்த அத்தியாவசிய மூன்று கோவில்கள் உண்டு.
ஒரு வைதிக பிராமணர் மேலே சொன்ன சின்ன குக்கிராமத்தில் இந்த மூன்று கோவில்களையும் தனது எளிய அன்றாட வாழ்க்கையில் ஒரு அவசிய பணியாக சந்தோஷத்தோடு பராமரித்து வந்தார்.
பழசு என்பதால் இந்த கோவில்களில் நிறைய பராமரிப்பு, புனருத்தாரணம், சீரமைப்பு தேவைப்பட்டுக் கொண்டே இருந்தது. அலையாய் அலைந்து நன்கொடை வசூலித்து தேவையான ஆலய நிர்மாண வேலைகளை செய்து வந்தார். சுத்தமான கை என்பதால் நிறைய பேர் அவருக்கு உதவினார்கள். அவருடைய சேவையை அண்டை கிராமத்தார்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
அந்த கிராமத்தின் ஒரு வயற்காட்டில் ஒரு பெரிய சிவலிங்கம் தன்னந் தனியாக வெயிலில் காய்ந்து, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது இந்த பிராமணர் கண்ணில் பட்டு ரத்தம் வழிந்தது. அவசர அவசரமாக முயற்சி செய்து ஒருவழியாக சிவனுக்கு கூரை அமைத்துவிட்டார். இதனால் மழை-காற்றுக்கு அஞ்சாமல், வெளியே வாடிய சிவன் கருவறையில் நிம்மதியாக குடி புகுந்தார். இப்படி எத்தனையோ கோயில்கள் அந்த ப்ராமணரால் உருவானது. .
ஒரு சிறு கம்பிக் கதவு கொடுத்தால் கூட அந்த கதவு அளவுக்கு தனது பேரை போட்டுக்கொள்ளும் தர்மிஷ்டர்களுக்கு மத்தியில் இந்தமாதிரி சைலண்டாக செவி செய்யும் ஏழை வைதிக பிராமணர்களும் உண்டு. ஆகவே அந்த வைதிகர் எந்தக் கும்பாபிஷேகத்திலும் தான் முன்னால் போய் நின்றதில்லை. எங்கோ ஒரு மூலையில் ஒண்டிக் கொண்டு நிற்பார்!
ஜகத் குருவுக்கு உலகத்தில் எங்கு எது நடந்தாலும் தெரியாமலா இருக்கும்? மஹா பெரியவாளுக்கு இந்த வைதிக பிராமணரின் சேவை பற்றி சேதி காதில் விழுந்தது. அந்த பிராமணர் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வருபவர் அல்ல. அவருக்கு காஞ்சி செல்ல நேரம் ஏது? எங்கோ ஏதோ ஒரு பழைய கோவிலில் உழவார பணி இல்லையேல் திருப்பணி. சில பையன்கள் அவருக்கு உதவினார்கள்.தொண்டு தொடர்ந்தது .
பிராமணர் ஏதோ ஒரு வேலையாக காஞ்சி பக்கம் வந்தவர் மஹா பெரியவா தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்தார். நமஸ்காரம் பண்ணிவிட்டு ஓரமாக நின்றார். வரிசை நகர் பெரியவா அருகே வந்தபோது பெரியவா வழக்கமாக கேட்கும் ஊர்பேர் விசாரணை எதுவும் செய்யவில்லை.
யாரோ பரம பக்தர்களான ஒரு பணக்கார தம்பதிகள் வந்து பெரியவா முன்னாள் நின்று நமஸ்கரித்தார்கள் பெரியவா அருகே இருந்த ஒரு தொண்டருக்கு ஏதோ ஜாடை செய்ய விலையுயர்ந்த ஒரு சால்வை பெரியவா எதிரே தட்டில்.
"இங்கே வா, இந்த சால்வையை அந்த பிராமணருக்கு போர்த்து". பணக்கார பக்தர் மெஷின் மாதிரி சொன்னபடி செய்தபோது எல்லோருக்கும் அதிர்ச்சி, ஆச்சர்யம்.
"யார் இந்த அழுக்கு வேஷ்டி வைதிக பிராமணர். என்ன பண்ணினார் என்று அவருக்கு பணக்காரர் கையால் மரியாதை?" ரொம்ப படித்த சாஸ்த்திர ஞானியா, யோகியா, சித்தாரா? பார்த்தால் அப்படி தெரியவில்லையே!
"இவரைப் பார்த்திருக்கிறாயோ? தெரியுமா உனக்கு?"
"இல்லை பெரியவா" ன்கிறார் பணக்கார பக்தர்.
"இவர் அட்ரஸ் தெரியுமோ?"
"தெரியாது"
"எனக்குத் தெரியும்! சொல்றேன் கேளு. "சாஸ்திரிகள் கேர் ஆஃப் சிவன் கோயில்! இவர் பெரிய பில்டர் (Builder) என்ன? பல சிவன்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்..!"
"யார் இது. முகமே பரிச்சயம் இல்லையே. ஒரு போட்டோவில் கூட பார்க்காத பசி முகம் "பணக்காரர் திகைத்தார்.
"இவர் ஒரு பெரிய சிவப்பழம் பிரசாதத்தோட நெறய்ய பழங்கள் கொடு" மஹா பெரியவா முன் பின் பார்த்தறியாத அந்த வைதிக பிராமணரை பற்றி இப்படி அறிமுகம் செய்தது எப்படி?
ஏன் முடியாது. நிச்சயம் பெரியவாளால் மட்டுமே முடியும். ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில் ஒரு தாய்ப்பசு தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ள முடியாம்

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends