Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 04 / 13 . ஸ்ரீ தசாவதார ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 04 / 13 . ஸ்ரீ தசாவதார ஸ்

    श्री दशावतार स्तोत्रम् : 04 / 13
    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :


    श्रीमते निगमान्त महा देशिकाय नम:



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    *


    வராஹனின் 'குர் குர்' ஒலிகள் , குவலயம் காக்க வேண்டும் !


    गोपायेत् ! अनिशं , जगन्ति , कुहना पोत्री , पवित्री कृत-

    ब्रह्माण्डः ; प्रलय ऊर्मि घोष गुरुभि: , घोणारवै: घुर्घुरैः।

    यत् दंष्ट्र अङ्कुर कोटि गाढ घटना , निष्कंप नित्य स्थितिः ,

    ब्रह्म स्तंबम् असौत् , असौ , भगवती , मुस्ता इव विश्वंभरा ॥४॥


    கோபாயேத் ! அநிசம் , ஜகந்தி , குஹநா – போத்ரீ , பவித்ரீ க்ருத ,


    ப்ரஹ்மாண்ட: ; ப்ரளய ஊர்மி கோஷ குருபி: , கோணாரவை: , குர்க்குரை: ,


    யத் தம்ஷ்ட்ர அங்குர கோடி காட கடநா , நிஷ்கம்ப நித்ய ஸ்த்திதி:,


    ப்ரஹ்ம ஸ்தம்பம் அஸௌத் ; அஸௌ , பகவதீ , முஸ்தா இவ , விச்வம்பரா


    Gopayedanisam jaganthi kuhanapothri pavithri krutha,

    Brahmanda pralayormi gosha gurubhirgonaravavair gurgurai,

    Yad damshtrangura koti ghada ghatana nishkamba nithya sthithi,

    Brahma sthambhamasodasou bhagavathi mustheva viswambhara. — Verse 4

    Meaning(PP Ramchander): Let the world be always protected by the lord who took the form of a boar,

    Who cleaned all the universe by the sound of “Kur”, Kur” made by his nose,


    Who resembled the giant waves at the time of the final deluge,


    And by holding tightly to his protruding teeth , the great earth goddess,


    Could stand stable like a giant tuber and created everything from Brahma to the grass.

    *

    यत् ........ யாருடைய

    दंष्ट्र ........ கோரைப்பல் ஆகிய

    अङ्कुर ..... முளையின்

    कोटि ........ நுனிப் பகுதியை

    गाढ .......... இறுகப்

    घटना ........ பற்றியதால் ,

    नित्य ......... எப்பொழுதும்

    निष्कंप ....... அசையாது

    स्थितिः ....... நிலையாய் இருக்கும் ,

    भगवती ..... ..பெருமை உள்ள

    असौ .......... இந்த

    विश्वंभरा ..... பூமி தேவி ,

    मुस्ता इव ... ..கோரைக் கிழங்கு போல் நின்று ,

    ब्रह्म ............ பிரமன் முதல்

    स्तंबम् ......... துரும்பு வரை உள்ள எல்லாவற்றையும்

    असौत् ........ படைத்தாளோ ;


    प्रलय ........... யார் பிரளய காலத்தில் ,


    ऊर्मि ............ கடல் அலைகளின்
    घोष ............. ஒலியைப் போல
    गुरुभि: .......... பெரிய
    घुर्घुरैः .......... 'குர் குர் ' என்ற
    घोणा रवै: ...... மூக்கின் ஒலியால் ,
    ब्रह्माण्डः ........ பிரம்மாண்டங்களைப்
    पवित्री कृत ......பரிசுத்தம் ஆக்கினானோ ;
    कुहना ........... போலியான
    पोत्री ............ வராஹ வடிவம் கொண்டவனுமான அந்த எம்பெருமான் ,
    जगन्ति .......... உலகங்களை
    अनिशं .......... எப்பொழுதும்
    गोपायेत् ......... காத்து அருள வேண்டும் !


    *

    ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:

    * பிரளய காலத்தில் , பூமி கடலுள் மூழ்கி விட்டது. இந்தப் பூமியைக் கடலிலிருந்து , எடுத்து வருவதற்காக எம்பெருமான், ஒரு பெரிய பன்றி வடிவம் கொண்டு அவதரித்தான். அந்த வராஹப் பெருமானது திரு மூக்கிலிருந்து , 'குர் குர்' என்ற ஒலிகள் எழுகின்றன. இவ்வலைகள் பிரளய காலத்துக் கடலின் அலைகள் மோதும் ஒலிகளை போல் மிகுந்து இருந்தன. இவ்வொலிகள் பிரம்மாண்டம் முழுவதும் பரவி , அவற்றைத் தூய்மை ஆக்கின .

    * இவ்வொலிகளுடன் , வராஹப் பெருமான் , தனது கோரைப் பல்லின் முளையில் , பூமியத் தரித்து , எடுத்தது வருகிறான். அப்பூமி , ஒரு பன்றியின் , கோரைப் பல்லின் முளையில் , கோரைக் கிழங்கு ஒட்டியிருப்பது போல் காட்சி அளிக்கிறது.

    * வராஹப் பெருமானுடைய கோரைப்பல்லில் , பூமி தேவி , நன்கு இறுகப் பற்றியிருப்பதால் , சிறிதும் அசையாமல் , நிலைத்திருக்கிறாள் . கோரைக் கிழங்கு போல் நின்று , பிரமன் முதல் துரும்பு வரை , உள்ள சராசரங்களாகிய பல கோரைப் புற்கள் உற்பத்தியாகக் காரணம் ஆகிறாள்

    * இந்த வராஹப் பெருமானுடைய , திரு மூக்கின் ஒலிகள் , உலகங்களை எப்பொழுதும் , காத்து அருள வேண்டும் !




    Last edited by sridharv1946; 24-03-18, 10:07.
Working...
X