பெரியவா சரணம்


(இந்த வார துக்ளக் இதழில் வந்தது)


கேள்வி : ஆசாரம், சம்பிரதாயம் இவற்றை மாற்றலாமா?


சோ அவர்களின் பதில் : காஞ்சி மஹா ஸ்வாமிகள் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி...


சிரார்த்த மந்திரத்தில் ஒரு மந்திரம். அதனுடைய தாத்பர்யத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால், தவறான மந்திரமாகத் தோன்றும். அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது என்னவென்று தெரியும்..


"அந்த மந்திரத்தை நான் சொல்ல மாட்டேன்.. அதை நீக்க வேண்டும்.." என்று மஹா ஸ்வாமிகளிடம் போய் ஒருவர் கேட்டார்.


"ஏன்?" என்று கேட்டார் ஸ்வாமிகள்..


"என்னுடைய அம்மா, பாட்டிக்கு எல்லாம், இது ரொம்ப அவமானமாக இருக்கிறது.. அதனால் இதை நீக்க வேண்டும்.. நீங்கள் சொன்னால் தான் ஏற்கப்படும்.. அதனால் இந்த மந்திரம் இனிமேல் சிரார்த்தத்தில் கிடையாது என்று நீங்கள் அறிவிக்க வேண்டும் " என்றார்.


அதற்கு ஸ்வாமிகள்," எனக்கு என்ன அத்தாரிட்டி? இப்போது நான் ஒன்று சொல்கிறேன்.. இன்றைக்கு இதை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறேன்.. நாளைக்கு இன்னொருத்தர் இதில் இன்னொன்றை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.. இதே மாதிரி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக எடுத்து விட்டால், மீதி என்ன இருக்கும்? இதெல்லாம் ஒரு காரணத்தோடு தான் இருக்கிறது... இதையெல்லாம் மாற்றுவதற்கு இங்கே யாருக்கும் அதிகாரம் கிடையாது... அதனால் நான் மாற்ற மாட்டேன்.. "என்று சொல்லி விட்டார்...

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
" அப்படி என்றால் இனிமேல் நான் சிரார்த்தமும் பண்ண மாட்டேன்... நான் ஹிந்துவும் இல்லை "என்றார் வந்தவர்..


" அது உன் இஷ்டம்.. உன்னைத் தடுப்பதற்கும் எனக்கு அதிகாரம் கிடையாது.. ஆனால் இதெல்லாம் சனாதனம்... என்றைக்குமே நிலைத்து நிற்கிற விஷயம்.. இதில் கை வைக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. " என்று கூறி விட்டார் ஸ்வாமிகள்..


அது மாதிரி, சிலவற்றையெல்லாம் மாற்ற முடியாது.. ஆனால், எல்லோரும் சமம் என்பது... அந்த சமப் பார்வை..... அது வந்தது என்றால் அது மிக உயர்ந்த நிலை, அது எல்லோருக்கும் வராது. ஞானிகளுக்குத் தான் வரும், அந்தச் சமப் பார்வை.


அதனால் அது தான் உயர்ந்த நிலை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. அதை எல்லோரும் கடைப்பிடித்தாக வேண்டும் என்பது நடக்காது.. ஆனால் கடைப்பிடித்தால் நல்லது..