Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 12 / 13 ஸ்ரீ தசாவதார ஸ்&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 12 / 13 ஸ்ரீ தசாவதார ஸ்&#

    श्री दशावतार स्तोत्रम् : 12 / 13

    வணங்கி , புண்யம் பெறுக !

    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்






    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||


    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    *
    इच्छा , मीन ; विहार , कच्छप ; महा , पोत्रिन् ; यदृच्छा , हरे ;

    रक्षा , वामन ; रोष , राम ; करुणा , काकुत्स्थ ; हेला , हलिन् ;


    क्रीडा , वल्लव ; कल्क वाहन दशा , कल्किन् ; इति , प्रत्यहं ,

    जल्पन्तः , पुरुषाः , पुनन्ति ! भुवनं , पुण्यौघपण्यापणाः ॥१२॥


    இச்சா , மீந ; விஹார , கச்சப ; மஹா , போத்ரிந் ; யத்ருச்சா , ஹரே ;

    ரக்ஷா , வாமந ; ரோஷ , ராம ; கருணா , காகுஸ்த்த ; ஹேலா , ஹலிந் ;


    க்ரீடா , வல்லவ ; கல்கி வாஹந தசா , கல்கிந் ; இதி , ப்ரத்யஹம் ,


    ஜல்பந்த: , புருஷா: , புநந்தி ! புவநம் , புண்யௌக , பண்யாபணா: !





    Iccha meena vihara kachapa maha pothreen yadrucha hare,
    Raksha vamana rosha rama karuna kakustha hela haleen,
    Kreeda vallava kalka vahana dasakalkeen ithi prathyaham,
    Jalpantha purusha punanthi bhuvanam punyougapanyapana. — Verse 12

    *

    Meaning (pr reamchander) :


    Those men who are like the shop that only sells holy acts,

    And who with pure mind meditate on the Lord calling him,


    “He who was born as a fish due to his own wish,


    Who was born as a tortoise just to play,


    Who assumed the form of a big boar,


    Who without thought came as Narasimha,


    Who was Vamana who was born to protect,


    Who was the very angry Parasurama,


    Who was the merciful Rama,


    Who was Balarama who played with his plough,


    Who was the playful cowherd Krishna,


    And who is going to be the Kalki riding on a white horse,”


    Would surely make this world greatly pure.



    *
    इच्छा ........ தன் விருப்பத்த்தால் ,

    मीन .......... மீனாகத் தோன்றியவனே !



    विहार ........ விளையாடல் புரிந்த ,


    कच्छप .......ஆமையாகத் தோன்றியவனே !


    महा ...........மிகப் பெரிய


    पोत्रिन् ....... பன்றி உருவாய்த் , தோன்றியவனே !


    यदृच्छा ...... எதிர்பாராது , தோன்றிய ,


    हरे ............ நரசிங்கப் பெருமானே !


    रक्षा .......... காப்பதற்கு ,


    वामन ......... வாமனனாய்த் தோன்றியவனே !


    रोष ........... கோபம் கொண்ட


    राम ........... பரசு ராமனே !


    करुणा ....... கருணா மூர்த்தியான ,


    काकुत्स्थ .... இராம பிரானே !


    हलिन् ........ கலப்பையுடன் விளையாடிய ,


    हेला .......... பலராமனே !


    वल्लव ........கோபாலனாய் ,


    क्रीडा ......... விளையாடிய , கண்ணனே !




    कल्क ......... வெண் குதிரையில் ,



    वाहन दशा ... வரப்போகும் ,



    कल्किन् .......கல்கி பகவானே !


    इति ............என்று


    प्रत्यहं ..........தினம் தோறும் ,



    जल्पन्तः ...... துதிக்கும் ;


    पुण्य ओघ .... புண்யக் கூட்டத்தையே ,



    पण्य .......... அளிக்கும் ,


    आपणाः ...... கடை போன்ற ,



    पुरुषाः ........ மனிதர்கள் ,


    भुवनं .......... உலகத்தை ,



    पुनन्ति ........ தூய்மை ஆக்குகின்றனர் !


    *


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :


    * பத்து அவதாரங்களையும் , ஏற்ற அடைமொழிகளுடன் , ஒன்று சேர ஸ்ரீ தேசிகன் , அனுஸந்தானம் செய்கிறார் , இந்த ஸ்லோகத்தில் .


    * தானே ஸங்கல்பித்து , மத்ஸ்யாவதாரம் செய்த பிரானே !


    * மந்தர மலையை மத்தாக்கிக் , கடலைக் கடைந்து , விளையாட , ஆமையாய் அவதரித்த பிரானே !


    * உலகம் முழுதும் , சூழ்ந்து நிற்குமாறு , பெரிய வராஹமாய்த் தோன்றிய , எம்பெருமானே !


    * ஒருவரும் எதிர்பாராத நிலையில் , சடக்கெனத் தோன்றிய , நரசிங்க வடிவனே !


    * மூவுலகும் நல் வாழ்வு பெறக் கங்கையைப் பெருக்கிக் , காத்த , வாமன , த்ரிவிக்ரமப் பெருமானே !


    * க்ஷத்ரிய பூண்டே உலகில் இல்லாமல் செய்தற்கு , ஏற்ற கோப மூர்த்தியான , பரசு ராமனே !


    * கருணையே வடிவு எடுத்த , இராம பிரானே !


    * கலப்பையைக் கொண்டு , பல லீலைகளைச் செய்த , பல ராமனே !


    * ஆயர் குலத்துத் தோன்றி , பல அற்புத லீலைகள் புரிந்த , கண்ணா பிரானே !


    * வெண் குதிரை ஏறித் தருமத்தை நிலை நிறுத்தப் போகும் , கல்கி பெருமானே !


    * என்று இவ்வாறு , தினம் தோறும் துதித்துக் , கொண்டிருக்கும் மக்கள் , புண்ணியக் கூட்டத்தையே , விலைப் பொருளாகக் கொண்டுள்ள கடை போன்றவர்கள் ஆவர். கடைகளை அணுகினால் , வேண்டிய பண்டங்களை அடையலாம் . அவ்வாறே , இந்தப் புண்ய புருஷர்களை , அணுகி , வழிபட்டால் , மிகுந்த புண்யங்களைப் பெறலாம் . இவர்கள் , தாம் , வசிக்கும் , உலகம் முழுவதையும் , புனிதம் ஆக்குகின்றனர்.


    *


    [அடுத்து, பல ஸ்ருதியுடன் , தசாவதார ஸ்தோத்ரம் முற்றும்]







































































































































    Last edited by sridharv1946; 01-04-18, 17:52.
Working...
X