* ஸ்ரீ ரங்கநாதனது மேனியைத் திருவடி முதல் திருமுடி வரை , த்யானிப்பதற்கு , இந்த ஸ்தோத்ரம் , படி (ஸோபனம்) போல் இருப்பதால் , இப்பெயர் ஏற்பட்டது. இது 12 ஸ்லோகங்கள் கொண்டது.
* திருப்பாணாழ்வார் , திருவராங்கனைப் பாடிய 'அமலாதி பிரான்' எனும் பிரபந்தத்தை ஆதி ஒற்றியது இந்த ஸ்தோத்ரம் .
* இதில் முதலில் , திருவரங்கனது , பெருமையைப் பேசி , பின் , அவனது,திருவடி , கணைக்கால் , தொடை , திரு உந்தி , திரு மார்பு , திருக்கை , திருமுகம் , கிரீடம் இவற்றை அனுபவித்துப் , பின் , எல்லா அவயவங்களையும் சேர அனுபவித்துத் , தம் உள்ளத்தில் ஸ்ரீ ரங்க திவ்ய தம்பதிகள் , நித்ய வாஸம் செய்வதைப் பேசிப் , பலன் கூறித் தலைக்கு காட்டுகிறார் , ஸ்ரீ தேசிகன்.
* திருவரங்கப் பெருநகரில் , சோதி வடிவமாய் , ஓர் ஆச்சர்ய வஸ்து காட்சி தருகிறது . திருவரங்கன் எனும் திருநாமத்துடன்.
* இந்த சோதியை யோகம் செய்ய வல்ல பெரியோர்கள் , தங்களது இதயக் கமலத்தில் வைத்துக் காண்கின்றனர். அவ்வாறு காண்பதற்கு , அது சாதனமும் ஆகிறது.
* உலகில் சித்தர்களின் மையைக் கண்ணில் அணிந்தால் , கண்ணுக்கு எட்டாத பொருட்களும் , கண்ணுக்குப் புலன் ஆவது உண்டு. அவ்வாறு , அப்பரம்பொருள் , தானே மையாய் இருந்து , எல்லாவற்றையும் , தன்னை அறியச் செய்கிறது.
* சிந்தாமணி எனும் ரத்னம் , தேவலோகத்தில் , இருந்துகொண்டு, விரும்பும் பலனை எல்லாம் அளிக்கும் என்பர். அந்த ரத்னம் , நமக்குக் கிட்டாத ஒன்று ஆகும் . மேலும் அந்த ரத்னம் மோக்ஷத்தைக் , கொடுக்கவல்லதும் , அன்று .
* திருவரங்கன் எனும் ரத்னமோ , நாம் இவ்வுலகில் கண்டு களிக்க எளிதாய் , இம்மைப் போகங்களையும் , மோக்ஷத்தையும் அளிக்கவல்ல சிந்தாமணியாக விளங்குகிறது.
* யோகம் போன்ற வேறு உபாயத்தை செய்யச் சக்தி அற்று , வேறு ரக்ஷகனைக் கொள்ளாமல் இருந்து , பிரபத்தி செய்பவர்களின் , துன்பத்தைப் போக்கி , பேரின்பத்தைத் தர வல்லது.
* உலகில் உள்ள எல்லா தெய்வங்களும் , தொழுவதற்கு ஏற்ற பெரிய தெய்வமாக விளங்குகிறது
* இந்திரியங்களுள் , முக்கியமான கண்ணை , மக்கள் போற்றுவது போல் , வேதநூல்கள் , அனைத்தும் , இந்தப் பரம்பொருளைத் தங்கள் தெய்வக் கண்ணாகக் கொண்டு , போற்றுகின்றன
* இத்தனை பெருமை பெற்ற , அரங்கன் எனும் தெய்வம் , திருவரங்கத்தின் நடுவில் , நம் கண்ணுக்குப் புலனாய்க் காட்சி தருகிறது.
Last edited by sridharv1946; 03-04-2018 at 09:34 AM.
Bookmarks