கல் தெய்வமாகி விட முடியுமா?

நாம் குப்பை செடி என்றும் ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைக்கும் இலைகளை, ஒரு மருத்துவன் கையில் எடுக்கும் போது, அதை ஏதோ செய்து, ப்ரயோஜனம் இல்லாத செடி என்று நினைத்த நமக்கே, உடல் உபாதை வரும் போது, சாப்பிட சொல்கிறான். நோய் விலகுகிறது.

சாதாரண மனிதன் செடி தானே என்று நினைக்கிறான்.
அதே செடியை, தன் கை பக்குவத்தால், மருந்தாக்கி, அந்த மனிதனுக்கே கொடுத்து விடுகிறான் மருத்துவன்.

அதேபோல,
சாதாரண மனிதன் கல் தானே என்று நினைக்கிறான்.
அதே கல்லை, தன் பக்தியாலும், தவத்தாலும் எங்கும் உள்ள தெய்வத்தை அதில் நிலைநிறுத்தி, சாதாரண மக்களும் வந்து பார்த்து, கேட்கும் வரங்களை கொடுக்குமாறு வரமும் வாங்கி, காண முடியாத, எங்கும் உள்ள தெய்வத்தை, இங்கு பூரணமாக இருக்கிறார் என்று உணர செய்து, அந்த சாதாரண மனிதனுக்கே கொடுத்து விடுகிறார்கள் ஞானியும், ரிஷியும், தேவர்களும்.

மகாபலிபுரத்தில், மிகவும் ஆச்சர்யமான அழகான சிவனின் சிலைகளை செதுக்கி விற்பனைக்கு வைத்துள்ளனர் சிற்பிகள். இந்த அற்புதமான சிலைகளை கண்டால் சிலை என்று தான் தோன்றுமே தவிர, தெய்வம் என்று தோன்றாது.

பார்க்கும் கல்லை எல்லாம் தெய்வம் என்று சொல்லும் முட்டாள் அல்ல பாரத தேச ஹிந்துக்கள்.

ஆனால், அழகே இல்லாமல், லிங்கமாக கர்பக்ரஹத்தில் இருக்கும் சிலையை கண்டால் மட்டும் தெய்வம் என்று தோன்றும். ஆச்சர்யம் !!

இந்த கல்லுக்கு மட்டும் எதனால் தெய்வம் என்ற ஸ்தானம் கிடைத்தது?

எந்த கல்லை, ஒரு மகான், ஒரு ஞானி, ஒரு ரிஷி, ஒரு பக்தன் தன் பக்தியால் தெய்வ பிரதிஷ்டை செய்கிறானோ, அந்த கல் தெய்வ சாந்நித்யம் பெறுகிறது.

கல் தானாக தெய்வமாகவில்லை.
ஒரு ஞானியின் பக்தியால், தெய்வம் கல்லுக்குள் பிரவேசிக்கிறது.

நமக்கு எளிதில் தெய்வ அருள் கிடைக்க, ஞானிகளும் மகான்களும் செய்த பெரிய உபகாரம் இது.

அதனால் தான், நம் சாஸ்திரம், ஒரு ஞான குருவும், இஷ்ட தெய்வமும் ஒரு சேர வந்தால், தெய்வத்தை கூட வணங்க வேண்டாம், ஆனால் அந்த குருவுக்கே முதல் நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது.

ராம பக்தர், கபீர் தாஸ் தன் கவிதைகளில் இதையே சொல்கிறார்.

ஞானிகளும், ரிஷிகளும், பக்தனும், யோகிகளும் இருப்பதாலேயே, நமக்கு தெய்வ சாந்நித்யம் கொண்ட சிலைகள் கிடைத்தன.
கல்லில் குடிகொண்டுள்ள இந்த தெய்வங்களே, நமக்கு அணுகிரஹமும், தெய்வ சிந்தனையும் ஏற்பட செய்கிறது.

பாரத தேசத்தை தவிர, ஞானிகள் வேறு எங்கும் பிறக்க பிரியப்படாததால் தான், தெய்வ சிந்தனை குறைந்த மக்கள் உலகெங்கிலும் உள்ளனர்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friendshttp://proudhindudharma.blogspot.in/...blog-post.html