226.ஞால மெங்கும்
226
கோடைநகர்


வல்லக்கோட்டை என தற்சமயம் அழைக்கப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 10 கி.மீ தூரம். 2 மீட்டர் உயரத்துடன் சரணாகதி காட்டும் கர முருகனின் சிலை அமைப்பு வேறுயெங்கும் காண முடியாதது


தான தந்த தனத்த தத்த தனதான

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends


ஞால மெங்கும் வளைத்த ரற்று கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே
ஆல முந்து மதித்த ழற்கும் அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த முதல்வானோர்
காலவி லங்கு களைத்த றித்த பெருமாளே.பதம் பிரித்து உரைஞாலம் எங்கும் வளைத்து அரற்று(ம்) கடலாலே
நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே


ஞாலம் எங்கும் = பூமியின் எல்லா பக்கங்களிலும்வளைத்து = வளைந்து கொண்டு அரற்றும் =ஒலிக்கின்ற கடலாலே = கடலாலும் நாளும் =தினமும் வஞ்சியர் உற்று உரைக்கும் = மாதர்கள்சேர்ந்து சொல்லும் வசையாலே = வசை மொழியாலும்.


ஆலம் உந்து மதி தழற்கும் அழியாதே
ஆறு இரண்டு புயத்து அணைக்க வருவாயே


ஆலம் உந்து = விடத்தைச் செலுத்தும். மதித் தழற்கும் = சந்திரனாகிய நெருப்பாலும் அழியாதே =அழிவுறாமல் ஆறு இரண்டு = பன்னிரண்டு புயத்து அணைக்க வருவாயே = புயங்களாலும் (இந்தப் பெண்ணை) அணைக்க வந்தருளுக.


கோலம் ஒன்று(ம்) குறத்தியை தழுவு மார்பா
கோடை அம் பதி உற்று நிற்கும் மயில் வீரா


கோலம் ஒன்று = அழகு பொருந்திய குறத்தியை =குறப் பெண்ணாகிய வள்ளியை தழுவு மார்பா =தழுவுகின்ற மார்பனே கோடை அம் பதி =கோடையம் பதியில் உற்று = பொருந்தி நிற்கும் =நிற்கின்ற மயில் வீரா = மயில் வீரனே.


காலன் அஞ்ச வரை தொளைத்த முதல் வானோர்
கால் விலங்கு களை தறித்த பெருமாளே.


காலன் அஞ்ச = யமன் பயப்படும்படியாக வரை =கிரௌஞ்ச மலையை தொளைத்த முதல் = தொளைசெய்த முதல்வனே வானோர் = தேவர்கள் கால்விலங்கு = கால் விலங்குகளை களை தறித்தபெருமாளே = உடைத்தெறிந்த பெருமாளே.சுருக்க உரைஒப்புக
இப்பாடல் அகப் பொருள் துறையைச் சேர்ந்தது.


1. தழற்கும் அழியாதே...
காமம் கொண்டவரை வருத்துவன... கடல் ஒலி, மாதர் வசை, எறி நிலவு முதலியன.


தெருவினில் நடவா மடவார்
திரண்டொ றுக்கும் வசையாலே........ திருப்புகழ்,தெருவினில்


துள்ளுமத வேள்கைக் கணையாலே
தொல்லை நெடு நீலக் கடலாலே...... திருப்புகழ், துள்ளுமத


2. கால்விலங்கு களைத்த றித்த பெருமாளே....
அரியரி பிரமாதியர் கால் விலங்க விழ்க்கும் பெருமாளே
...திருப்புகழ், தெருவினில்