Welcome letter - Periyavaa
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை(30-4-2010)
"ஆயன தேவுடு"
(நன்றி : தரிசன அனுபவங்கள்)
சுகப்பிரம்மரிஷி அவர்களின் அபார தவவலிமையுடன் திகழ்ந்தாலும் ஒரு பாமர பக்தனையும் நெருங்கி தன் மாபெரும் கருணையால் அனுக்ரஹம் பொழியும் மாண்பை சாட்சாத் சர்வேஸ்வர அவதாரமாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் நடமாடும் தெய்வத்திடம் நாமெல்லாம் காணும் பாக்யமடைந்துள்ளோம்.
திரு. ம. வே. பசுபதி என்ற பக்தருக்கு ஏற்பட்ட அனுபவத்தில், ஸ்ரீ பெரியவா முக்காலமும் உணர்ந்த மேன்மையான மகான் என்பது வெளிப்படுகிறது. 1964இல் இவர் சென்னை அடுத்த சோழவரம் என்ற ஊரில் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இவர் பணி ஏற்ற சில நாட்களில் சோழவரம் ஊருக்கு சாட்சாத் பரமேஸ்வர்ரான ஸ்ரீ பெரியவா விஜயம் செய்தருளும் சமயம் அமைந்தது.
"கொஞ்சம் பாடம் கற்பிப்பதை நிறுத்திவிட்டு உங்களுக்கு ஒரு பெரிய கைங்கர்யம் காத்திருக்கிறது. அதை முதலில் செய்யலாம்" என்று வகுப்பை நடத்திக் கொண்டிருந்தபோது தலைமை ஆசிரியர் இவரிடம் கட்டளையாக ஆரம்பித்தார். "இந்த ஊருக்கு ஸ்ரீ பெரியவாளும் புது பெரியவாளும் விஜயம் செய்ய இருப்பதால், ஊர் மக்கள் சார்பாக ஒரு வரவேற்புப் பத்திரம் எழுதணும். அதை நீங்க ஒரு கவிதையா எழுதித் தயார் பண்ணிக் கொடுங்கள்" என்றார்.


இதைத் தனக்குக் கிடைத்த பெரும் பாக்யமாக பசுபதிக்கு அப்போது தோன்றாமல் போனது. மிக பெரிய வாய்ப்பு என்ற அளவில் இதை எடுத்துக் கொண்டார். பாக்கியம் என்று இவரைக் கருதவிடாமல் ஒரு பயம் இவரைத் தடுத்தது. அப்படி என்ன பயம் என்பதை அவருடைய பால்ய வயதில் நடந்த சம்பவம் ஒன்றை விவரித்தால் புரியும்.


அந்த சிறு வயது பாலகனாய் இவர் குடும்பம் திருப்பனந்தாள் என்ற கும்பகோணம் பக்கத்து ஊரில் இருந்தது. இவருடைய தகப்பனார் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வராக பணியாற்றியவர். அப்போதும் அங்கே ஸ்ரீ பெரியவாளின் விஜயம்! திருப்பனந்தாள் தாடகை ஈச்சரம் திருக்கோயில் சன்னதி தெருவில் இவர்கள் இல்லம் இருந்தது. குலகுருநாதராம் ஸ்ரீ பெரியவாளின் வருகைக்காக இவருடைய அப்பா, அம்மா, பாட்டி, தம்பி என அனைவரும் வாசலில் காத்திருக்க, அம்மாவின் பார்வை 'சட்'டென பாலகனாய் நின்ற பசுபதியின் மேல் விழுந்தது.


இவர் கையைப் பற்றி 'தரதர' வென்று இழுத்துக்கொண்டு போய் ரேழி அறையில் தள்ளிக் கதவை அம்மா மூடி விட்டார். இப்படி அம்மா செய்தது ஏனென்று பாலகனுக்குப் புரியவில்லை. தான் ஒரு தவறையும் செய்யாதபோது அம்மா ஏன் இப்படித் தன்னைத் தண்டிப்பதுபோல் செய்ய வெண்டுமென்று கோபம்கூட வந்தது.


"பசுபதி இப்போ வர்றது நம்ம குலகுரு..அதுமட்டுமில்லே அவர் தெய்வம்தான். அவருக்கு எல்லாமே தெரியும்.. உனக்கு இன்னும் உபநயனம் செஞ்சி வைக்கலே. உன்னைப் பார்த்தா அவா ஏன் இன்னும் இவனுக்கு உபநயனம் செய்யலேன்னு கேட்பா.. எங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே. அதனாலே உன்னை அவா பார்க்ககூடாதுன்னுதான் இந்த அறையிலே அடைச்சு வைச்சிருக்கேன்" என்று அம்மா தாய்மொழியாம் தெலுங்கில் ஜன்னல் வழியாக இந்த பிள்ளையிடம் காரணம் சொன்னாள்.


சிறுவனுக்கோ கோபமும் அழுகையுமாக வந்த்து. ஊரே திருவிழக்கோலமாகி எல்லோரும் ஆனந்தமாக பெருங்குருவின் வரவிற்காகக் காத்திருக்க தன்னை தான் செய்யாத குற்றத்திற்காக இப்படி தண்டிக்கலாமா? மேலும் குருநாதரை இவர்கள் தெய்வம் என்கிறார்களே அப்படி அவர் தெய்வாமாயிருக்கும் பட்சத்தில் தன்னை மறைத்து வைத்திருப்பதை மட்டும் அவர் அறியாமல் போகமுடியுமா என்றெல்லாம் ஆதங்கம் பட்டுக்கொண்டு சிறுவன் உள்ளே ஏங்கிக் கொண்டிருந்தான்.


ஆனாலும் அவனுக்கு ஒரு வசதி இருந்தது. திண்ணையை ஒட்டியிருந்த அறை ஜன்னல் வழியேத் தெருவில் நடப்பவை எல்லம் தெரிந்தது. இருபத்தைந்தடி தூரத்தில் இருந்ததால் அங்கே பேசப்படுபவைகளைக் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் மேனா வருவதும், தாய், தந்தை, தம்பி, தங்கைகள் அருகே சென்று நமஸ்கரிப்பதும் நன்றாகக் காண முடிந்தது.


பசுபதியின் தாய் வழிப் பாட்டி மட்டும் மடி செய்துக் கொள்ளாததால் தூரத்திலிருந்த ஸ்ரீ பெரியாளைத் தரிசித்துக் கொண்டிருக்க, கருணைத் தெய்வமாம் ஸ்ரீ பெரியவா அந்த பாட்டியுருந்த திசை நோக்கி சுட்டிக்காட்டி, தாயாரிடம் எதையோ கேட்பதுத் தெரிந்தது. அதற்குத் தாயாரும் ஏதோ பதில் சொல்வதும் தெரிந்தது. ஆனால் கேட்கும்படியாக இல்லாத தூரம்!


ஸ்ரீ பெரியவா இவர்கள் தெருவில் திருக்கோயில் கட்டளை மடத்துக்குச் சென்றவுடன் அம்மா உள்ளே வந்தாள். இவரை அறையிலிருந்து விடுவித்துக் கொண்டே "நேனு ஆயன தேவுடு அனி செப்தினி கதாரா" என்று உணர்ச்சி வசப்பட்டு,' நான் அவா கடவுள்னு சொன்னேனே.அதை எப்படிக் காட்டிட்டார்' என்பதாக அம்மா சொன்னாள்.


விடுப்பட்ட பசுபதிக்கு இப்போது கோபம் தணிந்து அம்மா சொன்னதன் அர்த்தம் புரியாத குழப்பம் மேலிட்டது. ஒரு வேளை தனக்கு உபநயனம் செய்விக்கப்படாததை எப்படியோ கண்டுப்பிடித்து ஸ்ரீ பெரியவா கேட்டிருப்பாரோ என்றுக் கூட நினைத்தான் சிறுவன்.


ஆனால் பாட்டியிடம் சென்று இதைப்பற்றிக் கேட்டபோது தான் அந்த அதிசயம் புரிந்தது. தூரத்தே நின்ற பாட்டியைச் சுட்டிக்காட்டி தன் தாயாரிடம் ஸ்ரீ பெரியவா "சூலமேனி தொரசாமி ஐயர் பார்யாதானே" என்று கேட்டபோது அம்மாவே திகைத்துப்போய் விட்டாராம். இதை அம்மா சொல்லக் கேட்ட பாட்டிக்கும் மலைப்பாய் போய்விட்டதாம்.


பல ஆண்டுகளுக்குமுன் எப்போதோ அதுவும் ஒரே ஒரு முறை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் தெய்வத்தை சுமங்கலி கோலத்துடன் தன் கணவரான துரைசாமி ஐயருடன் தரிசனம் செய்துள்ளார் இந்தபாட்டி.. தாத்தா காலமான இருபது வருடங்களுக்குப் பின் தான் இங்கே திருப்பனந்தாளுக்கு வந்து தங்கியிருகிறாள். அதுவும் சுமங்கலிக்கு உண்டான அடையாளங்கள் எதுவுமில்லாத கோலத்தில்!


அப்படியிருக்க இருபது ஆண்டுகளுக்கு மேலே எங்கேயோ ஒரே ஒருமுறை சுமங்கலி கோலத்தில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு சில நிமிடங்களே தரிசித்து விட்டுப்போனவரை தூரத்திலிருந்தபடியே யாதொரு அடையாளம் காணும் வாய்ப்பில்லாதபோது இன்னாரின் மனைவிதானே என்று ஸ்ரீ பெரியவா கேட்பதென்பது அந்த மகான் சாட்சாத் ஈஸ்வரர் என்ற காரணத்தினாலன்றி வேறு எதுவாயிருக்கக்கூடும்?


இப்படி திருப்பனந்தாளில் பல வருடங்களுக்கு முன் தன் பால்யத்தில் நடந்த சம்பவம் பசுபதிக்கு நினைவில் ஓடியது. இப்போது தனக்கு வயதாகி ஆசிரியராய் வடக்கே சோழவரம் கிராமத்திற்கு உத்யோகம் பார்க்க வந்தாயிற்று. இந்த ஊரில் ஸ்ரீ பெரியவா விஜயத்திற்கு வரவேற்புப் பத்திரம் எழுத இப்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது.


இது உனக்குக் கிட்டிய பெரும்பாக்கியம் என்று சித்தப்பாவும் இவர் தமையனாரும் உற்சாகப்படுத்த வரவேற்புரையை ஒரு பதிகமாக இயற்றி புத்தகமாகப் போட்டு விநியோகித்தால் அதைத் தூக்கி எறியாமல் பக்தர்கள் வீட்டில் கொண்டு போயாவது வைத்துக் கொள்வார்களென்று இவருக்குத் தோன்ற அன்று இரவே ஸ்ரீ பெரியவாளின் அருளால் "பூஜ்ய சங்கராசார்ய சுவாமிகள் இரட்டை மணிமாலை" எழுத முடிந்தது. எப்படியோ புத்தகம் அச்சடிக்க பணவசதி ஏற்பட 500 புத்தகங்கள் அடித்தாயிற்று.


நூறு புத்தகங்களை வீட்டில் வைத்துக் கொண்டு மீதியை வரவேற்புக் குழுவினரிடத்தில் ஒப்படைத்தார். 9-12-1965 அன்று ஸ்ரீ பெரியவா சோழவரத்திற்கு விஜயம் செய்து ஒரு சிறிய ஓட்டு வீட்டில் அருள்பாலித்தார். மிகச் சிறிய அறை அப்புறம் கூடம். ஒரு பிரம்புத் தட்டில் பழங்கள், மலர், மங்களப் பொருள்களோடு பசுபதி எழுதிய புத்தகமும் வைத்து ஸ்ரீ பெரியவாளிடம் குழுவினர் சமர்ப்பித்தனர்.


பசுபதி அந்தக் குழுவினரோடு இல்லை. மற்ற பக்தர்களின் கூட்டத்தோடு ஒருவராய் ஒதுங்கியே நின்றார். அந்த சின்ன அறையில் தரிசனம் தந்த மகானை ஜன்னல் வழியாக தெருவிலிருந்துத் தரிசிக்க முயற்சி செய்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவராய் நின்றார்..

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
இப்படி எட்டி எட்டி மகான் என்ன செய்கிறார் என்ற ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தவருக்கு ஸ்ரீ பெரியவா அந்த புத்தகத்தை எடுத்து பூதக்கண்ணாடி ஏந்தி அதைப் படிப்பதை கொஞ்சம் சிரமப்பட்டுப் பார்க்க முடிந்தது. ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ளும் கூட்டத்தில் இதை ஒரு கணம் பார்த்தபோது இவருக்கு ஆனந்தத்தால் அழுகை வந்துவிட்டது. தான் எழுதிய எழுத்து மகானின் பார்வையில் பட்டுப் புண்ணியமடைகிறதே என்ற எண்ணம் இவரைப் புளகாங்கிதமடையச் செய்தது.


எப்படியோ இண்டு இடுக்கில் ஸ்ரீ பெரியவா இப்படி நூல் முழுவதையும் படிப்பதை பசுபதிக்குப் பார்க்க முடிந்தது. நூலின், நிறைவு பக்கம் ஸ்ரீ பெரியவா பார்வையிடும் தருணம் இவருக்கு பயம் ஏற்படலாயிற்று. மகானின் திருவாக்காக நூலைப்பற்றி என்ன அபிப்ராயம் வருமோ என்ற ஆவலில் மனம் படபடத்தது.


கூப்பிய கரங்களோடு இவர் ஜன்னல் கூட்டத்தில் நிற்க இவரை முன்னிலிருந்த ஒரு பக்தர் தலை ஸ்ரீ பெரியவா பார்வையிலிருந்து மறைந்தது.


அப்போதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. கோடி சூரிய ஞான பிரகாசத்துடனான மகானின் திருமுகம் இவர் இருந்த பக்கம் திரும்பியது. சரியாக குறி வைத்து அந்தக் கூட்டத்தில் இவரை மட்டும் பார்த்து "பசுபதி நுவ்வு ஸ்ரீருத்ரம் சதுவுகுன்னாவா?" (பசுபதி நீ ஸ்ரீருத்ரம் படிச்சிருக்கயா) என்று தெலுங்கில் கேட்டபோது பசுபதிக்கு நிலமே நடுங்கினார்ப்போல் ஒரு பிரம்மிப்பு தாக்கியது.


நடுங்கியபடி "லேது சுவாமி" என்றார் எட்டியிருந்தவாறு.


"ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள செய்திகள் அத்தனையும் இந்த பதிகத்திலே இருக்கு" என்ற பொருள்பட ஸ்ரீ பெரியவா தெலுங்கில் இவரிடம் கூறினார்.


பசுபதிக்கு பிரம்மிப்பு அடங்குவதாகவே இல்லை. அது எப்படி அந்த கூட்டத்தில் தன்னை பசுபதி என்று ஸ்ரீ பெரியவாள் கண்டு கொள்ள முடிந்தது? யாரும் அறிமுகபடுத்தவில்லை. அந்த நூலிலும் தன் புகைப்படம் வரவில்லை. பல ஆண்டுகளுக்கு முன் ஜன்னலில் அடைக்கப்பட்டபோது தூரத்தில் இவர்தான் ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்தார். அப்போதும் பாட்டியைத்தான் ஸ்ரீ பெரியவா தூரத்திலிருந்து பார்த்துள்ளார். அப்படியே தன்னைப் பார்த்திருந்தாலும் அது எப்போதோ திருப்பனந்தாளில் தன் பாலிய வயதில் ஒரு நொடிப் பொழுதில் நடந்த சம்பவம். அதை இங்கு பல வருடம் கழித்து சம்பந்தமே இல்லாத சோழவரத்தில், அதுவும் தான் இயற்றிய நூலில் யாதொரு அடையாளமும் இல்லாதபோது என்னை மட்டும் தெரிந்தவர்போல அதுவும் தாய்மொழி தெலுங்கிலேயே கேட்பதென்றால் இந்த அதிசயங்களை எப்படித் தாங்கிக் கொள்வதாம்!


ம.வே. பசுபதின்னா மந்த்ரவாதி வேங்கட்ராமையா நா" என்று வேறு ஸ்ரீ பெரியவா தன் தந்தையின் முழுப் பெயரையும் குறிப்பிட்டுக் கேட்டபோது திகைப்பு மேலிட்டது.


"ஆயன தேவுடு" என்று தன் தாயார் பால்யத்தில் கூறிய வார்த்தைகள் சாட்சாத் எத்தனை உண்மை என்பது பசுபதிக்குப் புலனாயிற்று.


இப்பேற்பட்ட தெய்வம் சகல ஜனங்களுக்கும் எல்லா நன்மைகளையும் அளித்தருளுமென்பது திண்ணம்