Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 02/12 ஸ்ரீ பகவத் த்ய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 02/12 ஸ்ரீ பகவத் த்ய

    श्री भगवत् ध्यान सोपानम् - 02/12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் திருவடி !

    श्रीमते निगमान्त महा देशिकाय नम:

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    वेला अतीत , श्रुति परिमलम् ; वेधसाम् मौलि सेव्यम ;

    प्रातुर्भूतम् , कनक सरित: , सैकते , हंस जुश्टे ; |

    लक्ष्मी - भूम्यो : , कर सरसिजै: , लालितम् ; रङ्ग भर्तु: ;

    पाद - अम्बोजम् ; प्रतिफलति ! मे , भावना , दीर्घिकायाम् ||
    .

    வேலா - அதீத , ச்ருதி பரிமளம் ; வேதஸாம் , மௌளி - ஸேவ்யம் ;

    ப்ராதுர்பாவம் , கனக ஸரித: , ஸைகதே , ஹம்ஸ - ஜூஷ்டே ; |

    லக்ஷ்மீ - பூம்யோ: , கர - ஸரஸிஜை: , லாலிதம் ; ரங்க - பர்த்து:

    பாத - அம்போஜம் : பிரதி பலதி ! மே , பாவனா , தீர்க்கிகாயாம் ||

    .

    वेला ............ எல்லையைக் ,

    अतीत ......... கடந்த ,

    श्रुति ............ வேதங்களின்,

    परिमलम् ...... மணம் வீசுவதும் ;

    वेधसाम् ....... பிரம்ம தேவர்களின் ,

    मौलि .......... முடிகளால்

    सेव्यम ......... வணங்கப்படுவதும் ;

    हंस ............ அன்னப் பறவைகள்

    जुश्टे ........... விரும்பி உறையும் ,

    कनक .......... காவிரி

    सरित: ......... ஆற்றின் ,

    सैकते ........... மணல் திட்டில் ,
    प्रातुर्भूतम् ...... தோன்றியதும் ;

    लक्ष्मी .......... பெரிய பிராட்டி ,

    भूम्यो : .......... பூமி தேவி இவர்களின் ,

    कर .............. திருக்கைத் ,

    सरसिजै: ........ தாமரைகளால் ,

    लालितम् ........ வருடப் படுவதுமான

    रङ्ग भर्तु: ....... திருவரங்கப் பெருமானுடைய ,

    पाद .............. திருவடித்

    अम्बोजम् ....... தாமரை

    मे ................. அடியேனுடைய ,

    भावना ............ நினைவு எனும்

    दीर्घिकायाम् .. ...பொய்கையில் ,

    प्रतिफलति ....... பிரதிபலிக்கிறது !

    .

    * திருவரங்கனுடைய தாமரை போன்ற திருவடிகளை , எல்லை அற்ற , வேதங்கள் , எப்பொழுதும் , புகழ்ந்து கொண்டே இருப்பதால் , அந்த வேதங்களின் மணம் , இந்தத் திருவடிகளில் , எப்போதும் வீசுகிறது. வரையறைக்கு உட்படாது , எல்லாச் சாதியாரும் , ஓதுவதற்கு உரிய , ஆழ்வார்கள் கண்ட , தமிழ் மறையும் , அவன் திருவடிகளையே பேசுவதால் , அந்த மணமும் , வீசுகின்றது இத் திருவடிகளில் .

    * பல பிரம்மாண்டங்களுக்குத் தலைவரான பல பிரம்ம தேவர்களும் , அரங்கனது திருவடித் தாமரைகளைத் தம் முடியில் சூடி , வழிபடுகின்றனர் .

    * இத்திருவடி , அன்னங்கள் , ஆசையோடு விளையாடும் , காவிரியின் நடுவில் , அடியார்களை உய்விக்க அவதரித்ததாகும் .

    * பெரிய பிராட்டியும் , பூமிப் பிராட்டியும் , தாமரை போன்ற தன் திருக்கரங்களால் , இவனுடைய திருவடியை , மெல்ல , வருடிக் கொண்டுள்ளனர் .

    * இத்தனை பெருமை பெற்ற , அரங்கன் திருவடித் தாமரைகள் , அடியேனுடைய நினைவு எனும் , பொய்கையில் சாயல் இட்டு விளங்குகிறது.


    * [ இங்கு திருவடித்தாமரை , மற்ற தாமரை மலர் போல் அன்றி :

    . விலக்ஷணமாய் ,இரு வேத மணம் வீசுவதும் ,

    . பிரமர்கள் , முடியில் சூடும் பூவாக விளங்குவதும் ,

    . சேற்றில் முளைக்காது , காவிரியின் மணல் திட்டில் தோன்றுவதும் ,

    . பிராட்டிகளின் திருக் கைகள் , தாமரையினும் , விஞ்சிய மென்மை பெற்றிருப்பதும் ,

    . திருவரங்கத்தில் , ஹம்ஸர் எனப்படும் , வைராக்கிய சாலிகளான , ஆச்சார்யர்கள் பல விரும்பி உறைவதும் ,

    கூறப்பட்ட சுவை காண்க !]



    Last edited by sridharv1946; 04-04-18, 10:02.
Working...
X