தீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் !
யம தீபம்
தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு.யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும்.
தொழில் முன்னேறும்.
திருமணத் தடைகள் விலகும்,
சொத்துகள் சேரும்.
அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
மாஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு உங்கள் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மாஹாளய அமாவாசை அன்று நீங்கள் திதி கொடுத்து இருப்பீர்கள்.
அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்" மட்டுமே. அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதஸி திதியில் ஏற்ற வேண்டும்.
இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.
யம தீபம் ஏற்றி ஹிந்து பலிதானிகளுக்கும், முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.
யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது.
அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள்.
சாத்திரப்படியான யம தீபம் ஏற்றும் முறை:
1. உங்கள் வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். வசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends
2. தெற்கு திசை நோக்கி விளக்கு எரிய வேண்டும்.
3. விளக்கேற்றிய பின்னர், இந்து பலிதானிகளையும் உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் சிந்திக்க வேண்டும்.
4. பின்னர்க் கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி: