* திருவரங்கன் திருவடியில் அணிந்திருக்கும் , தண்டைகள் , பல்வகை ரத்னங்கள் , இழைக்கப் பட்டவை. அவற்றின் ஒளி அரங்கன் கணைக்காலில் வீசுவதால் , கணைக்காலும் , பல நிறம் கொண்டது போல் காட்சி அளிக்கிறது .
* பார்க்க அழகியதாய் , வட்ட வடிவமாய் , மேலே உள்ள அங்கத்திற்கு ஏற்ற அமைப்பு கொண்டது , இந்த கணைக்கால் .
* முன்பு , பாண்டவர்களுக்காக கௌரவர்களிடம் தூது சென்றபோது , இந்தக் கணைக்காலின் சக்தியால் தானே , மிக விரைவாகச் செல்ல முடிந்தது.
* மேலுள்ள அங்கங்களின் , அழகு , வெள்ளமிட்டு ஓடி , வழிந்ததை இந்தக் கணைக்கால் தான் பாத்திரம் போல் இருந்து , ஏந்தியது போலும் ! மேலே உள்ள முழந்தாளின் அழகும் , இதில் வந்து சேரும்போது , கணைக்காலின் இயர்கையான அழகு , இரட்டித்துப் புலனாகின்றது.
* இத்தகைய சிறப்புடைய , திருவரங்கனுடைய கணைக்காலை , சேவித்த அடியேனது , உயிர் , இனி , ஸம்ஸார மார்க்கத்தில் ஓடி அலையும் , துன்பம் ஒழிந்து விட்டது .
Last edited by sridharv1946; 05-04-2018 at 08:54 AM.
Bookmarks