श्री भगवत् ध्यान सोपानम् - 04/12ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்அரங்கன் திருத்தொடை


Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends

श्रीमते निगमान्त महा देशिकाय नम:


श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

.

ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

काम आराम , स्थिर कदलिका स्तंभ , सम्भावनीयम् ;

क्षौम आस्लिष्टम् , किमपि , कमला , भूमि , नीला , उपधानम् ; |

न्यञ्चत् , काञ्ची , किरण , रुचिरम् ; निर्विशत् , ऊरु युग्मम्

लावण्य औघ द्वयम् , इव , मति: , मामिका , रङ्ग यून: ||


காம ஆராம ஸ்திர கதளிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம் ;

க்*ஷௌம ஆஸ்லிஷ்டம் , கிமபி , கமலா , பூமி , நீளா , உபதாநம் ; |

ந்யஞ்சத் , காஞ்சீ , கிரண , ருசிரம் ; நிர்விசத் , ஊரு யுக்மம் ;

லாவண்ய ஔக த்வயம் , இவ , மதி: , மாமிகா , ரங்க யூந: ||


काम .............. மன்மனது

आराम ........... தோட்டத்தில் ,

स्थिर ..... ....... உறுதியாய் இருக்கும் ,

कदलिका ........ வாழைமரத்தின்

स्तंभ .............. கட்டைகள் போல் ,

सम्भावनीयम् ..... நினைக்கக் கூடியதும் ;

क्षौम .............. பீதாம்பரத்தை ,

आस्लिष्टम् ...... அணிந்திருப்பதும் ;

कमला ........... பெரிய பிராட்டிக்கும் ,

भूमि .............. பூமிப் பிராட்டிக்கும் ,

नीला ............. நீளைப் பிராட்டிக்கும் ,

उपधानम् ........ தலையணை போன்றதும் ;

न्यञ्चत् .......... கீழ்ப் பக்கம் செல்லும் ,

काञ्ची ........... மேகலையின்

किरण ............ ஒளிகளால் ,

रुचिरम् ... ....... அழகு பெற்றதாயும் ;

द्वयम् ...... ....... இரண்டு

लावण्य .......... அழகு

औघ ........ ..... வெள்ளம்

इव ............... போன்றதும் ;

किमपि .......... அற்புதமாய் உள்ள

रङ्ग ............. திரு அரங்கன் எனும்

यून: .............. வாலிபனுடைய

ऊरु .............. தொடைகள்

युग्मम् ........... இரண்டையும் ,

मामिका ......... எனது

मति: ............ புத்தி


निर्विशति........ அனுபவிக்கிறது !


ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

* மன்மதன் அழகுத் தெய்வம் . அவனுக்கு ஒரு தோட்டம். அதில் , மன்மதன் தன் கையாலேயே வாழைக்கன்றுகளைப் பயிர் செய்கிறான் . அவற்றில் , இரண்டு வாழை மரங்கள் , மிகச் செழிப்பாய் வளர்ந்து , அழகு பெற்று , ஓங்கி , காற்று முதலியவற்றால் , அசையாமல் (உலகில் , பலனை ஈன்ற வாழை மரங்கள் அழிவது போல் ) அழியாமல் , நிற்கின்றன. இந்த இரண்டு மரங்களைத்தாம் , திருவரங்கனுடைய , இரண்டு திருத்தொடைகளுக்கும் உவமை கூறலாம் !

* இந்தத் தொடைகளைச்சுற்றி பீதாம்பரத்தை அணிந்துள்ளான் அரங்கன் !

* பெரிய பிராட்டியும் , பூமி தேவியும், நீளைப் பிராட்டியும் அரங்கனது , திருவடிகளை வருடிப் , பணிசெய்யும் போது,களைப்பு ஏற்படின் , அவன் தொடைகளையே , தலையணையாகக்கொண்டு , சாய்ந்து , களைப்பாறுவார்களாம் !

* இடையில் , அவன் அணிந்திருக்கும் , மேகலையில் உள்ள பல்வகை ரத்தினங்களின் ஒளி , கீழே , தொடைகளில் வீசுவதால் , இவையும் , பல நிறங்களுடன் அழகு பெறுகின்றன !

* திரு வயிற்றுக்குக் கீழ் , அழகே உருவு கொண்ட தொடைகள் , இரண்டாகப் பிரிந்து , செல்வதை நோக்கும்போது , அவனுடைய , திருமேனி அழகு , மேல் உள்ள அங்கங்களில் , வெள்ளம்இட்டு , ஓடி , வந்து , திரு வயிற்றின் கீழ் , அவ்வழகு , வெள்ளம் , இரு கூறாகப் பிரிந்து , உள்ளதோ என்று கருதும்படி , உள்ளன !

* எந்நாளும் , வாலிபப் பருவமேஉள்ள , திரு அரங்கனுடைய இரு தொடைகளையும் , என் புத்தி , அனுபவித்துக் கொண்டு கிடக்கின்றது !