Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 08 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 08 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

    श्री भगवत् ध्यान सोपानम् - 08 / 12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் திரு முகம்


    श्रीमते निगमान्त महा देशिकाय नम:

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||





    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    स - अभिप्राय , स्मित , विकसितम् ; चारु , बिम्ब - अधर , ओष्टम् ;

    दु;ख - अपाय , प्रणियिनि , जने ; दूर , दत्त - आभिमुख्यम् ; |

    कान्तम् , वक्त्रम् , कनक , तिलक - अलङ्कृतम् ; रङ्ग , भर्तु: ;

    स्व - अन्ते , गाढम् , मम , विलगति ! स्वागत - उदार , नेत्रम् ||



    ஸ - அபிப்ராய , ஸ்மித , விகஸிதம் ; சாரு , பிம்ப , அதர - ஓஷ்டம் ;

    து:க்க - அபாய , ப்ரணியினி , ஜனே ; தூர , தத்த - ஆபிமுக்யம் ; |

    காந்தம் , வக்த்ரம் , கனக , திலக - அலங்க்ருதம் ; ரங்க பர்த்து: ;

    ஸ்வ - அந்தே , காடம் , மம , விலகதி ! ஸ்வாகத - உதார , நேத்ரம் ; ||


    स - अभिप्राय... பொருள் பொதிந்த ,

    स्मित ............ புன்னகையால்

    विकसितम् ...... மலர்ந்த ,

    चारु ............. அழகிய ,

    बिम्ब ............ கோவைக் கனி போன்ற ,

    अधर ............. மேல் உதடும் ,

    ओष्टम् ........... கீழ் உதடும் உடையவனாய் ;

    दु;ख .............. துன்பம் ,

    अपाय ............ நீங்குவதை ,

    प्रणियिनि ........ விரும்புகின்ற ,

    जने ................ மக்களிடம் ,

    दूर ................. தூரத்தில் இருந்தே

    दत्त ................ (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட

    आभिमुख्यम् ...... பார்வையை உடையவனும் ;


    कान्तम् ........... அழகியவனும் ;

    कनक .............. பொன்னால் ஆன ,

    तिलक ............. திலகத்தால் ,

    अलङ्कृतम् ....... அலங்கரிக்கப்பட்டவனும் ;

    स्वागत ............. நல்வரவு கூறும் ,

    उदार ............... பெருந்தன்மை உடைய ,

    नेत्रम् ............... கண்களை உடையவனுமான ,

    रङ्ग भर्तु: .......... ரங்க நாதனின் ,


    वक्त्रम् ............. திரு முகம் ,

    मम ................. என்னுடைய ,

    स्व अन्ते ............ உள்ளத்தில் ,

    गाढम् .............. ஆழ்ந்து ,

    विलगति ........... பதிகிறது !



    ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :

    * திருவரங்கனது , திருமுக மண்டலத்தில் , அடியார்கள் விஷயத்தில் , நல்ல கருத்தை ,வெளியிடும் புன் சிரிப்பு திகழ்கிறது. அதனால் , திருமுகம் , மிக மலர்ந்து, விளங்குகிறது. கீழ் மேல் உதடுகள் , கோவைக் கனி போல் செம்மை நிறமாய் , அழகியனவாய் உள்ளன.

    * தம் துன்பத்தை ஒழித்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள் , தூரத்தில் வரும்போதே , அரங்கன் , தன் , திருமுகத்தை , அவர்கள் பக்கமாய்த் திருப்பிக் , கடாக்ஷிக்கின்றான் .

    * அவன் , பொன்னால் ஆகிய , ஒரு திலகத்தைத் , திரு நெற்றியில் , அணிந்திருப்பது, திரு முகத்துக்கே , ஓர் அழகைத் தருகிறது.

    * திருக்கண்களின் பெரு மிடுக்கை நோக்கும்போது , அடைதற்கு வருகின்றவர்களுக்குத் , திரு முகம் , நல் வரவு கூறுவது போல் , விளங்குகிறது.

    * இத்தகைய , அரங்கனது , திருமுக மண்டலம் , அடியேனது உள்ளத்தில் , ஆழப் பதிந்து விளங்குகிறது.

    Last edited by sridharv1946; 10-04-18, 09:23.
Working...
X