Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 11 / 12 ஸ்ரீ பகவத் த்ய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 11 / 12 ஸ்ரீ பகவத் த்ய&



    श्री भगवत् ध्यान सोपानम् - 11 / 12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் உறையும் இடம் !



    श्रीमते निगमान्त महा देशिकाय नम:



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:






    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||


    कान्त - उदारै: , अयम् , इह , भुजै: , कंकण , ज्या , किण - अंकै: ;

    लक्ष्मी , धाम्न: , पृथुल , परिघै: ; लक्षित - अभीति , हेति: |

    अग्रे , किंचित् , भुजग , शयन: , स्व - आत्मना - एव , आत्मन: , सन् ,

    मध्ये , रंगम् , मम , च , हृदये , वर्तते , स - अवरोध: ।।






    காந்த - உதாரை: , அயம் , இஹ , புஜை: , கங்கண , ஜ்யா , கிண - அங்கை: ;

    லக்ஷ்மீ , தாம்ந: , ப்ருதுள , பரிகை: ; லக்*ஷித - அபீதி, ஹேதி: |

    அக்ரே , கிஞ்சித் , புஜக , சயந: , ஸ்வ - ஆத்மநா - ஏவ , ஆத்மந: ஸந் ,

    மத்யே , ரங்கம் , மம , ச , ஹ்ருதயே , வர்த்ததே , ஸ - அவரோத: ||


    कान्त ............ அழகியதும் ;

    उदारै: ............. கொடையில் , சிறந்ததும் ;

    कंकण ............ கை வளை ,

    ज्या ................ நாண் , இவற்றின்,

    किण ............... தழும்புகள் ,

    अंकै: ............... உள்ளதும் ;

    लक्ष्मी .............. பெரிய பிராட்டியின்,

    धाम्न: .............. உறைவிடமான , திரு மார்புக்கு ,

    पृथुल ............... பெரிய ,

    परिघै: .............. தாழ்ப்பாளாயும் உள்ள ;

    भुजै: ................ திருக் கைகளால் ,

    अभीति ............. அபயம் அளிக்கும்

    हेति: ................ ஆயுதங்களைக்,

    लक्षित .............. காட்டுபவனும் ;

    भुजग ............... ஆதி சேஷன் மீது ,

    शयन: ............... பள்ளி கொள்பவனுமான ;

    अयम् ................ இந்தத் திருவரங்கன் ,

    इह ................... இந்த ஶ்ரீரங்க விமானத்தில் ,

    आत्मन: ............. மூலத் திருமேனி கொண்ட , தனக்கு ,

    किंचित् .............. சிறிது ,

    अग्रे .................. முன்பு ,

    स्व - आत्मना एव ... தானாகவே ,

    सन् ................... உத்ஸவத் திருமேனியாய் , இருந்து கொண்டு ,

    स - अवरोध: ........ பிராட்டிமார்களோடு ,

    मध्ये रंगम् ........... திரு அரங்கத்தின் நடுவிலும் ,

    मम ................... எனது ,

    हृदये च ............... உள்ளத்திலும் ,

    वर्तते .................. உறைகிறான் !



    ஶ்ரீ வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    * இந்த ச்லோகத்தில் , திருவரங்கனது , உத்ஸவத் திருமேனியும், கூட்டி , அனுபவிக்கிறார் ஶ்ரீ தேசிகன்.

    * திருவரங்கப்பெருமானுடைய , திருக்கரங்கள் , கண்டவர் மனதைக் கவரும் பேரழகு வய்ந்தவை. வேண்டுவோர்க்கு, வேண்டும் பலன் அனைத்தையும் , வாரி வழங்குவன.

    * அந்தத் திருக்கைகளில் , வளை அணிந்த வடுக்களும், விபவாவதாரத்தில் , வில் ஏந்திய நிலையில் , நாண் கயிறு , அழுத்திய தழும்புகளும் , தெரிகின்றன.

    * அத்திருக்கைகள் , பெரிய பிராட்டி உறையும் , திருக்கோவில் ஆகிய , திருமார்புக்குப் , பாதுகாப்பான பெரிய தாழ்ப்பாள் போல் உள்ளன.

    * அத்திருக்கைகளில் , ஏந்திய , திரு ஆயுதங்களைக் கண்டாலே , அடியார்களின் , அச்சம் எல்லாம், ஒழிந்து போம் .

    * இவ்வாறு , மிடுக்குடன் , திரு அனந்தாழ்வான் மீது , பள்ளி கொண்டுள்ள , திரு அரங்கன் , தன் பெரிய திருமேனிக்குச் சற்று முன் புறத்தில் , தானே , உத்ஸவத் திருவடிவம் கொண்டு , பெரிய பிராட்டி முதலிய தேவி மார்களுடன் , இத்திரு அரங்கத் தலத்தின் மத்தியில் , அனைவரும் , ஸேவித்து , உய்யுமாறு , காட்சி தருகிறான் !

    * அது மட்டுமோ ? அடியேனது உள்ளத்திலும் , அந்த நிலையிலேயே , நித்யமாய் உறைந்து , விளங்குகிறான் !

    ********************************************************
    அடுத்து , பல ச்ருதியுடன் , ஶ்ரீ பகவத் த்யாந ஸோபாநம் , முற்றும்.
    ********************************************************
    Last edited by sridharv1946; 13-04-18, 08:13.
Working...
X