* திருவரங்கம் எனும் , இந்த திவ்ய ஸ்தலம் , பகவத் அனுபவத்தில் சுவை மிகுந்தவர்களான , பாகவதர்களால் , வாஸத்திற்கு , உரியதாகப் போற்றப் படுகிறது. இங்கு வசிக்கும் அனைவருடைய உள்ளத்தையும் , மிக மகிழ்விப்பது , இந்தத் தலம்.
* இதில் வசிக்கும் பேறு பெற்ற ஸ்ரீ வேங்கடேசன் , அப்புள்ளார் முதலிய ப்ரம்ம வித்துக்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் , திருவருளால் , பெற்ற ஞானத்தால் , தூய உள்ளம் பெற்றவன். இக்கவி இயற்றியது , இந்த "பகவத் த்யான ஸோபானம்" எனும் ஸ்தோத்ரம் .
* இதைப் பாராயணம் செய்தால் , எம்பெருமானுடைய திருவடிகளில் , உறுதியான பக்தி உண்டாகும் . சிறந்த யோகிகளின் நிலையில் , எளிதாய் , எற விரும்புபவன் கூட , இதைப் படித்து வந்தால் , அந்த நிலையைப் பெறுவதற்கு , ஏற்ற பக்தியைப் பெற்றுப் , படிப்படியாக , அந்த யோக நிலையையும் பெறலாம் !
ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம் முற்றும்
कवि , तार्किक सिम्हाय , कल्याण गुण शालिने
श्रीमते , वेङ्कटेशाय , वेदान्त गुरवे नम:
श्रीमते , निगमान्त महा देशिकाय नम:
கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண குண சாலினே |
ஸ்ரீமதே , வேங்கடேசாய , வேதாந்த குரவே , நம: ||
ஸ்ரீமதே . நிகமாந்த மஹா தேசிகாய , நம:
Last edited by sridharv1946; 14-04-2018 at 09:16 AM.
Bookmarks