Announcement

Collapse
No announcement yet.

Bhaagavata apacharam- Vedanta desikar-spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bhaagavata apacharam- Vedanta desikar-spiritual story

    ஸ்ரீ:*ஸ்வாமி ஸ்ரீதேசிகன்* ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த காலம். ஒரு நாள் தம் வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து புத்தகம் எழுதிக்கொண்டிருந்தார்.
    அப்போது *'கந்தாடை லக்ஷ்மணாசார்யர்'* என்ற ஒரு ஸ்ரீவைஷ்ணவ குருவை அவரது சீடர்கள் பல்லக்கில் சுமந்துகொண்டு வீதி உலா வந்தனர். வீதியெங்கும் மக்கள் வந்து அவரை வணங்கினர்.
    நம் ஸ்வாமியின் வீட்டுப் பக்கமாக அப்பல்லக்கு சென்றது. நம் ஸ்வாமியோ எழுத்து ஆர்வத்தில் இவரை கவனிக்கவில்லை.
    இதைத் தவறாகப் புரிந்துகொண்ட கந்தாடை லக்ஷ்மணாசார்யரின் சீடர்கள், உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்த நம் ஸ்வாமியின் கால்களைப் பிடித்து இழுத்துவிட்டனர்.
    இதனால் நம் ஸ்வாமி மிகவும் உள்ளம் நொந்தார். ஒரு குற்றமும் புரியாத தனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம் என எண்ணி வருந்தி, சிலகாலம் ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே சென்று வசிக்க விரும்பி *சத்யாகாலம்* சென்று அங்கே வசித்துவந்தார்.
    இங்கே கந்தாடை லக்ஷ்மணாசார்யரோ உடல்நலம் மிகவும் குன்றிப் படுத்துவிட்டார். குழந்தைப்பேறும் இன்றி வருந்தினார்.
    தன் சீடர்கள் நம் ஸ்வாமியிடம் அபசாரப்பட்ட செய்தி அவருக்குத் தெரியாது.
    அவரது மனைவி அவரிடம் கேட்கிறாள், *"எதனால் உமக்கு இப்படி ஆனது? ஏதேனும் பாகவத அபசாரப்பட்டீரா?"* என்று.
    அவரும் நன்கு யோசித்துவிட்டு, "இல்லை" என்றார்.
    "உமது சீடர்கள் ஏதேனும் பாகவத அபசாரப்பட்டார்களா என அவர்களை அழைத்துக் கேளுங்கள்" என்றாள்.
    *"சிஷ்ய பாபம் குரோரபி:"* என்று ப்ரமாணம் ஆயிற்றே.
    சீடர்களை அழைத்துக் கேட்டபோது, நம் ஸ்வாமியிடம் தாங்கள் அபசாரப்பட்டதைச் சொன்னார்கள்.
    உடனே கந்தாடையாரும் அவர் மனைவியும் திடுக்கிட்டு, உள்நடுங்கி, மனம் கலங்கி நம் ஸ்வாமி தேசிகன் இருக்கும் இடம் தேடிப் புறப்பட்டு, சத்யாகாலம் சென்று நம் ஸ்வாமியை விழுந்து வணங்கினர்.
    "எனது சீடர்கள், பரம பாகவத உத்தமர் ஆன உங்களிடம் அபசாரப்பட்டது எனக்கு இப்போதே தெரிந்தது.
    அந்த அபசாரத்தால் தான் நான் இப்போது நோய்வாய்ப்பட்டும் பிள்ளைப்பேறு இன்றியும் தவிக்கிறேன்.
    என் பொருட்டு அவர்களின் குற்றத்தைப் பொருத்து எனக்கு நோயில் இருந்து விடுபட அருள்செய்ய வேண்டும்" என்று நம் ஸ்வாமியை ப்ரார்த்தித்தார் கந்தாடையார்.
    நம் ஸ்வாமியும் பரந்த மனதோடு அவரை மன்னித்து, அவருக்குத் தன் பாதங்களில் சேர்க்கப்பட்ட புனித நீரை ( *ஸ்ரீபாத தீர்த்தம்* ) அருள, அதை உட்கொண்ட கந்தாடையார், நோய் நீங்கப்பெற்று ஆரோக்யம் கூடி ஒரு ஆண் குழந்தைக்குத் தந்தையும் ஆனார்.
    இதனால் தெரியவருவது என்ன?
    *1.* படக்கூடாதது பாகவத அபசாரம்.
    *2.* பாகவத அபசாரப்பட்டவர்களைப் பெருமாள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்.
    *3.* பாகவத அபசாரப்பட்டவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
    *4.* நாம் எந்த பாகவதரிடம் அபசாரப்பட்டோமோ அதே பாகவதரிடமே மன்னிப்பு கேட்டு, அவர் அதை உளமாற ஏற்று நம்மை மன்னித்தாலே, அந்த அபசாரத்தில் இருந்து நாம் மீளமுடியும்.
    ( *அம்பரீஷ சக்ரவர்த்தியிடம் அபசாரப்பட்ட துர்வாச முனிவர்* ஸுதர்ஸனாழ்வானால் துரத்தப்பட்டபோது, எந்த தேவதைகளாலும் ஏன் பெருமாளாலும் கூட அவரைக் காக்க இயலவில்லையே!
    தான் அபசாரப்பட்ட அம்பரீஷனிடம் மன்னிப்பு கேட்க, அவர் ப்ரார்த்தனையின் பேரில் தானே ஸுதர்சனாழ்வான் துர்வாசரை விட்டார்!)
    *பாகவத அபசாரம் தவிர்ப்போம்; பாகவத கைங்கர்யம் ஏற்போம்.*
Working...
X