Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    232.பிறவியான
    232
    சிறுவை
    (சின்னம்பேடு, சிறுவரம்பேடு)
    ஆலயத்தின் கொடி மரம் தாண்டி சதுரமான கூண்டில் மரகதப் பச்சை மயில் சிலா ரூபமாக கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இத்தகைய மரகதப் பச்சை மயில் வாகனத்தை உலகில் வேற எங்கும் காண முடியாது
    தனன தான தனன தந்த தனன தான தனன தந்த
    தனன தான தனன தந்த தனதான
    பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெ றிந்து
    பிணிக ளான துயரு ழன்று தடுமாறிப்
    பெருகு தீய வினையி னொந்து கதிக டோறு மலைபொ ருந்தி
    பிடிப டாத ஜனன நம்பி யழியாதே
    நறைவி ழாத மலர்மு கந்த வரிய மோன வழிதி றந்த
    நளின பாத மெனது சிந்தை யகலாதே
    நரர்சு ராதி பரும்வ ணங்கு மினிய சேவை தனைவி ரும்பி
    நலன தாக அடிய னென்று பெறுவேனோ
    பொறிவ ழாத முநிவர் தங்கள் நெறிவ ழாத பிலனு ழன்று
    பொருநி சாச ரனைநி னைந்து வினைநாடிப்
    பொருவி லாம லருள்பு ரிந்து மயிலி னேறி நொடியில் வந்து
    புளக மேவ தமிழ்பு னைந்த முருகோனே
    சிறுவ ராகி யிருவ ரந்த கரிய தாதி கொடுபொ ருஞ்சொல்
    சிலையி ராம னுடனெ திர்ந்து சமராடிச்
    செயம தான நகர மர்ந்த அளகை போல வளமி குந்த
    சிறுவை மேவி வரமி மிகுந்த பெருமாளே



    பதம் பிரித்து உரை

    பிறவியான சடம் இறங்கி வழியி(ல்)லாத துறை செறிந்து
    பிணிகள் ஆன துயர் உழன்று தடுமாறி
    பிறவியான = பிறப்புக்கு ஏற்பட்ட சடம் இறங்கி = உடலில் புகுந்து வழி இல்லாத துறை = நல் வழியல்லாத வழிகளில் செறிந்து = நெருங்கிப் போய் பிணிகளான = நோய் முதலிய துக்கங்களில் உழன்று = வேதனைப்பட்டு தாடுமாறி = தடுமாற்றம் அடைந்து.
    பெருகுதீய வினையில் நொந்து கதிகள் தோறும் அலை பொருந்தி
    பிடி படாத ஜனன(ம்) நம்பி அழியாதே
    பெருகு = வளர்ந்து பெருகும் தீய வினையில் நொந்து = கெட்ட வினைகளின் பயனால் துயர் அடைந்து கதிகள் தோறும் = பிறவிகள் தோறும் அலை பொருந்தி = அலைச்சல் அடைந்து பிடி படாத = உண்மைத் தனம் விளங்காத ஜனனம் நம்பி = பிறப்பை விரும்பி அழியாதே = நான் அழியாமல்.
    நறை விழாத மலர் முகந்த அரிய மோன வழி திறந்த
    நளின பாதம் எனது சிந்தை அகலாதே
    நறை விழாத = தேன் நீங்காத மலர் முகந்த = மலர் நிரம்பக் கொண்டுள்ளதும் அரிய = அருமையான. மோன வழி திறந்த = மெளன வழியைத் திறந்து காட்டிய நளின பாதம் = தாமரைத் திருவடி எனது சிந்தை அகலாத = என் மனதை விட்டு நீங்காமல்.
    நரர் சுர அதிபரும் வணங்கும் இனிய சேவை தனை விரும்பி
    நலன் அதாக அடியன் என்று பெறுவேனோ
    நரர் = மனிதரும் சுர அதிபரும் = தேவர்கள் தலைவர்களும் வணங்கும் = துதிக்கும் இனிய சேவை தனை விரும்பி = இனிமையான தரிசனத்தை விரும்பி நலன் அதாக = நன்மை பெறும்படியான அடியன் = அடியேனாகிய நான் என்று பெறுவேனோ = என்று பெறுவேனோ?
    பொறி வழாத முநிவர் தங்கள் நெறி வழாத பிலன் உழன்று
    பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி
    பொறி = ஐம்பொறிகளும் வழாத = தீய வழியில் போகாத வண்ணம் காத்திருந்த முநிவர் = நக்கீரர் தங்கள் நெறி வழாத = தமது நித்திய அனுட்டான நெறியைத் தவறுதல் இல்லாமல் நின்று பிலன் உழன்று = குகையில் மன அலைச்சல் உற்று பொரு நிசாசரனை = (அகப்பட்டவர்களைக் கொல்ல நினைத்த) அரக்கனை நினைந்து = (அந்த அரக்கனிடமிருந்து பிழைக்கும் வழியை) நினைந்து வினை நாடி = பிழைக்கும் வழியை நாடிய நாடிய போது.
    பொரு இலாமல் அருள் புரிந்து மயிலில் ஏறி நொடியில் வந்து
    புளகம் மேவ தமிழ் புனைந்த முருகோனே
    பொரு இல்லாமல் = ஒப்பில்லாத வகையில் அருள் புரிந்து = அருள் கூர்ந்து மயிலில் ஏறி = மயிலின் மேல் ஏறி. நொடியில் வந்து = ஒரு நொடிப் பொழுதில் வந்து (அவரை மீட்டு) புளகம் மேவ = அவர் புளகாங்கிதம் கொள்ளுமாறு தமிழ் புனைந்த = திருமுருகாற்றுப் படையை ஏற்றுப் புனைந்த முருகோனே = முருகனே.
    சிறுவராகி இருவர் அந்த கரி பதாதி கொடு பொரு சொல்
    சிலை இராமனுடன் எதிர்த்து சமர் ஆடி


    சிறுவர் ஆகி இருவர் = சிறுவரான லவ குசர் என்னும் இருவரும் அந்த கரி பதாதி கொடு = அந்த யானைப் படை, காலாட் படை இவைகளைக் கொண்டு. பொரும் = போரிடையே (சொல்லும்). சொல் = சொற்களுடன் சிலை இராமனுடன் = வில் ஏந்திய இராமனுடன் எதிர்ந்து சமர் ஆடி = எதிர்த்துப் போர் செய்து.
    செயம் அதான நகர் அமர்ந்த அளகை போல வளம் மிகுந்த
    சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே.
    செயம் அதான = வெற்றி கொண்ட. நகர் அமர்ந்த = நகரமான. அளகை போல = அளகாபுரி போல. வளம் மிகுந்த = வளப்பம் மிக்கதான. சிறுவை மேவி = சிறுவாபுரியில் வீற்றிருந்து. வரம் மிகுந்த பெருமாளே = வரங்களை நிரம்பத் தரும் பெருமாளே.

    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    1. சிறுவராகி யிருவர் அந்த...
    இராமனின் புதல்வர்களாகிய லவ குசன் என்னும் சிறுவர்கள், இரமனுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற தலம் சிறுவை ஆகும். ஆதலின் இத்தலம் சிறுவர் அம்பெடு (சிறுவரம்பேடு) எனப் பெயர் பெற்றது.
    2. பொறி வழாத முநிவர்....
    (மலைமு கஞ்சு மந்த புலவர் செஞ்சொல் கொண்டு
    வழி திறந்த செங்கை வடிவேலா)......திருப்புகழ் (முலைமுகந்தி).
    (பொருதச மர்த்தா குத்திர துரகமு கக்கொ தைக்கிடை
    புலவரில் நக்கீ ரர்க்குத வியவேளே)......திருப்புகழ் (அகல்வினை).
Working...
X