Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    236.பூமாதுர
    236
    சீகாழி


    தானாதன தானன தானன
    தானாதன தானன தானன
    தானாதன தானன தானன தந்ததான


    பூமாதுர மேயணி மான்மறை
    வாய்நாலுடை யோன்மலி வானவர்
    கோமான்முநி வோர்முதல் யாருமி யம்புவேதம்
    பூராயம தாய்மொழி நூல்களும்
    ஆராய்வ திலாதட லாசுரர்
    போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி
    நீமாறரு ளாயென ஈசனை
    பாமாலைக ளால்தொழு தேதிரு
    நீறார்தரு மேனிய தேனியல் கொன்றையோடு
    நீரேர்தரு சானவி மாமதி
    காகோதர மாதுளை கூவிள
    நேரோடம் விளாமுத லார்சடை யெம்பிரானே
    போமாறினி வேறெது வோதென
    வேயாரரு ளாலவ ரீதரு
    போர்வேலவ நீலக லாவியி வர்ந்துநீடு
    பூலோகமொ டேயறு லோகமு
    நேரோர்நொடி யேவரு வோய்சுர
    சேனாபதி யாயவ னேயுனை யன்பினோடுங்
    காமாவறு சோம ஸமானன
    தாமாமண மார்தரு நீபசு
    தாமாவென வேதுதி யாதுழல் வஞ்சனேனைக்
    காவாயடி நாளசு ரேசரை
    யேசாடிய கூர்வடி வேலவ
    காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே



    பதம் பிரித்தல்



    பூ மாது உரமே அணி மால் மறை
    வாய் நாலு உடையோன் மலி வானவர்
    கோமான் முநிவோர் முதல் யாரும் இயம்பு(ம்) வேதம்


    பூ மாது = தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமியை உரமே அணி = மார்பிடத்தே வைத்துள்ள மான்(ல்) = திருமாலும் மறை வாய் நாலு உடையோன் = வேதம் ஓதும் நான்கு வாய்களை உடைய பிரமனும் மலிவான = கூட்டமான வானவர் கோமான் = தேவர்களின் தலைவனான இந்திரனும் முநிவோர் =முனிவர்களும் முதல் யாரும் = முதலான யாவரும் இயம்பும் = புகழ்ந்து சொல்லும் வேதம் = வேதப் பொருளை


    பூராயமதாய் மொழி நூல்களும்
    ஆராய்வது இலாத அடல் அசுரர்
    போரால் மறைவாய் உறு பீதியின் வந்து கூடி


    பூராயமதாய் மொழி = ஆராய்ந்து கூறும்நூல்களும் = நூல்களில் ஆராய்வது இலாத =ஆராய்ச்சி செய்யாத அடல் அசுரர் = வலிமை வாய்ந்த அசுரர்கள் போரால் = போருக்குமறைவாய் = மறைந்து உறு பீதியின் = தாம் கொண்ட பயத்தின் காரணமாக வந்து கூடி =வந்து ஒன்று கூடி


    நீ மாறு அருளாய் என ஈசனை
    பா மாலைகளால் தொழுதே திரு
    நீறு ஆர் தரு மேனிய தேன் இயல் கொன்றையோடு




    நீ மாறு = அப் பகைவர்களை அழிக்க வல்ல ஒருவனை நீ அருளாய் என = தந்து அருள வேண்டும் என்று ஈசனை = சிவபெருமானைபாமாலைகளால் தொழுதே = பாமாலைகள் பாடித் தொழுது திரு நீறு ஆர் தரு = திரு நீறு விளங்கும் மேனிய = மேனியனே தேன் இயல் =தேன் பொதியும் கொன்றையோடு = கொன்றைப் பூவுடன்


    நீரேர் தரு சானவி மா மதி
    காகோதர மாதுளை கூவிளை
    நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே


    நீர் ஏர் தரு = நீர் அழகுடன் ததும்பும் சானவி = கங்கையையும் மா மதி = சிறந்த நிலவையும்காகோதர(ம்) = பாம்பையும் மாதுளை = மாதுளம் பூ கூ விளை = வில்வம் நேரோடம் = நாவல் இலை விளா = விளா இலை முதல் ஆர் சடை =முதலியவை நிறைந்துள்ள சடையை உடையஎம்பெருமானே = எம்பெருமானே


    போமாறு இனி வேறு ஏது ஓது எனவே
    ஆர் அருளால் அவர் ஈதரு
    போர் வேலவ நீல கலாவி இவர்ந்து நீடு


    போ மாறு = (எங்களுக்கு உய்ந்து) போகும் வழி இனி வேறு ஏது என = (உன்னை) ஒழிய இனி வேறு எது உள்ளது ஓது எனவே = சொல்லி அருள்வாய் என்று முறையிடவே ஆர் =நிறைந்த அருளால் = கருணையால் அவர் =அந்த சிவபெருமான் ஈ தரு =
    தந்தருளிய போர் வேலவ = போர் செய்ய வல்ல வேலவனே நீல கலாவி இவர்ந்து = நீலத் தோகை மயிலில் ஏறி நீடு = நீண்ட


    பூ லோகமொடு அறு லோகமும்
    நேர் ஓர் நொடியே வருவோய் சுர
    சேனாபதியாயவனே உன்னை அன்பினோடும்


    பூலோகமோடு = இந்தப் பூலோகத்துடன் அறு லோகமும் = பாக்கி உள்ள அறு லோகங்களையும் நேர் = நேராக ஓர் நொடியே =ஒரே நொடிப் பொழுதில் வருவோய் = சுற்றிவந்தவனே சுர சேனாபதியாயவனே =தேவர்களின் சேனாதிபதியானவனே உனை அன்பினோடும் = உன்னை அன்பினால்


    காமா அறு சோம சம ஆனன
    தாமா மணமார் தரு நீப
    சுதாமா எனவே துதியாது உழல் வஞ்சனேனை


    காமா = மன்மத அழகு உடையவனே அறு சோம = ஆறு பூரணச் சந்திரருக்கு சம ஆனன =சமம் ஆன திரு முகங்களைக் கொண்டவனேதாமா மணமார் தரு நீப = மணம் நிறைந்து வீசும் கடப்ப மாலை அணிந்தவனே சுதாமா =நல்ல ஒளியை உடையவனே எனவே துதியாது = என்று கூறி உன்னைத் துதிக்காமல் உழல் = திரிகின்ற வஞ்சனேனை = வஞ்சகம் பொருந்திய என்னை


    காவாய் அடி நாள் அசுரேசரையே
    சாடிய கூர் வடி வேலவ
    கார் ஆர் தரு காழியில் மேவிய தம்பிரானே


    காவா = காத்தருள்க அடி நாள் = முன்புஅசுரேசரை = அசுரர் முதலானவர்களை சாடிய =அழித்த கூர் வடி வேலவ = மிகக் கூரிய வேலாயுதத்தை உடையவனே கார் ஆர் தரு =மேகங்கள் நிறைந்துள்ள காழியில் மேவிய =சீகாழியில் வீற்றிருக்கும் தம்பிரானே = தம்பிரானே



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்


    இந்தப் பாடலில் கந்த புராணச் சுருக்கம் கூறப்பட்டுள்ளது


    பூலோகமொடு அறு லோகமும்
    பூலோகம், புவ லோகம், சுவர்க்க லோகம், மக லோகம், தவ லோகம், சன லோகம், சத்திய லோகம்


    ஒப்புக:


    1 அவர் ஈதரு போர் வேலவ


    எப்படைக்கும் நாயகமாவதொரு தனிச் சுடர் வேல் நல்கியே
    மதலைகக் கொடுத்தான் ...... கந்த புராணம்


    இருண்ட கண்டர் தந்த அயில் வேலா ............ .. திருப்புகழ், கனங்கள்


    2 பூமாதுரமே அணி


    திரு மரு மார்பில் அவனும் திகழ் தரு மா மலரோனும்
    ......சம்பந்தர் தேவாரம்


    3. சானவி மா மதி

    சானவி~ ஜான்வி = கங்கை சன்னு( ஜன்நு) முனிவரிடத்தினின்று தோன்றியவள்
Working...
X