Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 12 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 12 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கன

    ��


    अभीति स्तवम् 12 / 29


    ��
    அபீதி ஸ்தவம்
    ��
    அரங்கனை , அனுபவிப்பதே , ஆனந்தம் !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:



    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    लकिष्ट , सुख , संगदै: ; स्व , कृत , कर्म , निवर्तितै: ;

    कलत्र , सुत , सोदर - अनुचर , बन्धु , संबन्धिभि: ।

    धन , प्रभृतिकै: - अपि ; प्रचुर , भीति , भेद - उत्तरै: ;

    न , बिभ्रति , धृतिम् ! , प्रभो ! त्वत् - अनुभूति , भोग - अर्थिन: ।।

    ��

    லகிஷ்ட்ட , ஸுக , ஸங்கதை: ,ஸ்வ , க்ருத ,கர்ம , நிவர்த்திதை:

    களத்ர , ஸுத , ஸோதர - அனுசர , பந்து , ஸம்பந்திபி: |

    தன - ப்ரப்ருதிகை: - அபி , ப்ரசுர , பீதி , பேத - உத்தரை:

    ந , பிப்ரதி , த்ருதிம் ! , ப்ரபோ ! த்வத் - அநுபூதி , போக - அர்த்திந: ||

    ��

    प्रभो ....... திருவரங்கப் பெருமானே !

    त्वत् ........ உன்னை ,

    अनुभूति .... இடைவிடாது ,

    भोग ........ அனுபவிக்கும் ,

    अर्थिन: ..... மோக்*ஷானந்தத்தை விரும்புபவர்கள் ;

    लकिष्ट .... மிக அற்பமான ,

    सुख ........ ஸுகத்தைத் ,

    संगदै: ...... தருபவையும் ;

    स्व .......... தாங்கள் ,

    कृत ......... செய்த ,

    कर्म ......... கர்மத்தால் ,

    निवर्तितै: ... வந்தவையும் ;

    प्रचुर ........ மிகுதியான ,

    भेद .......... வெவ்வேறு ,

    भीति ........ அச்சத்தை ,

    उत्तरै: ........ விளைவிப்பவையும் ;

    कलत्र ....... மனைவி ,

    सुत ......... புதல்வர்கள் ,

    सोदर ....... ஸஹோதரர் ,

    अनुचर ...... பணியாளர்கள் ,

    बन्धु ......... உறவினர் ,

    संबन्धिभि:.. சுற்றத்தார் , ஆகியவர்களாலும் ;

    धन .......... செல்வம் ,

    प्रभृतै: अपि . முதலியவற்றாலும் ;

    धृतिम् ....... மன மகிழ்ச்சியை

    न बिभ्रति ... அடைய மாட்டார்கள் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:

    ��

    * திருவங்க நகர் அப்பனே !

    * இவ்வுலகில் , மானிடர் , தாங்கள் , முன் செய்த கரமங்களுக்கு ஏற்ப , மனைவி , புதல்வர் , ஸஹோதரர் , பணியாளர் , உறவினர் , மற்றும் உள்ள சுற்றத்தார் இவர்களை , அடைகின்றனர்.

    * இவ்வாறே , மானிடரே , தாங்கள் செல்வம் முதலிய சிறப்புகளைப் பெறுகின்றனர் .

    * இந்தச் சுற்றத்தாராலும் , செல்வங்களாலும் , வரும் இன்பம் , மிக அற்பமாய் , நிலை அற்றதாய் , உள்ளது .

    * மேலும் , பல உறவினர்களையும் , சுற்றத்தாரையும் , பெற்றவர்களுக்கு , செல்வத்தை , மிகுதியாகப், பெற்றவர்க்கும் , பற்பல துன்பங்களும் , பகைவர்களும் ஏற்படுவது , இயற்கை ஆதலால் , எப்பொழுதும் , மிகுதியான , அச்சம் , தொடர்ந்து கொண்டே இருக்கும் .

    * நல்ல அறிவுடையவர்கள் , "உறவினர்களாலும் , செல்வங்களாலும் , நிலையான இன்பம் இல்லை " என , உணர்ந்து , இவற்றில் , சிறிதும் , மன மகிழ்ச்சியோ, விருப்பமோ , கொள்வது இல்லை.

    * அவர்கள் , பரம புருஷனான , உன்னை , இடைவிடாது , அனுபவித்துக் கொண்டிருப்பதிலேயே , ஆர்வம் , கொண்டிருப்பார்கள் .

    ��



    Last edited by sridharv1946; 27-04-18, 09:17.
Working...
X