ஆனைக்காவில் உணர்வித்த அம்பலவாணன் திருவருள் ( மெய்யை மெய்பித்து மெய்சிலிர்க்க வைத்த அனுபவம் )
என்னுள் உணர்த்தியவரை, யாருடைய வழிபாட்டையும் குறை கூறுவது இல்லை, அவர்களை தவிர்ப்பதும் இல்லை, என்னை பொறுத்தவரையில் நான் கடந்து வந்த பாதையில் பயணிக்கிறார்கள் என்ற மெய்யை ஏற்றுக்கொள்ளும் திருவருளால் !!
சிவனைதையும் வணங்குபவர்களை, சிவத்தை அனுபவித்து பாருங்கள் என்று உணர்த்தி காட்டுவது, அங்கனம் சிவத்தை அனுபவிக்கி தொங்கிவிட்டாள் சிவம் அட்கொள்வதில் அவர்களே வணங்குவதை கடந்து அனுபவித்து வாழ்வார்கள்,
அதுபோலவே இன்றுவரையும் யார் சிவனை கண்டு அஞ்சுவது, அந்த நாள், அந்த பூசை, என்று இருப்போர்கள் யாராக இருந்தால், அடியேன் வழியே வெளிப்படும் பதிவுகள் கண்டு தொலைபேசி எண் கேட்டல் கொடுத்து அவர்களுடன் உரையாடுவது வழக்கம்,
அப்படி சிவத்தை சுவைக்கும் பலருக்கு அனந்த கூத்தன் திருமேனி கொடுத்தும், வாங்கி கொடுத்தும், விட்டில் வைத்து அனுபவித்து பாருங்கள் என்று கொடுத்து இருக்கேன்,
இப்போது அதுபோலவே இரண்டு அன்பர்கள் தங்கள் இல்லத்திற்கு திருமேனி வேண்டும் என்று கேட்க அவர்களுக்கு, செய்யும் சிற்பியிடம் சொல்லி, ஆணைக்க தேரோட நிகழ்வுக்குள் கொண்டு வந்து தருமார் கூறியிருந்தேன்,
அவரும் இந்த வந்துவிடும், இப்போது வந்துவிடும் என்று கூறி, நேற்று இரவு 8 மணி வரை கூறிவிட்டு, நாளை தான் பணி முடியும், நாளை மதியம் தருகிறேன் என்று கூறிவிட்டார்,
இந்த திருமேனியை பெற்று செல்ல ஆணைக்க வந்த அடியார்க்கு பெரிய ஏமாற்றம், என்னிடம் அழுதே விட்டார், " என்ன ஐயா இப்படி ஆகிவிட்டது, சாமியை உங்கள் கையில் வாங்கி செல்லவே வந்தேன், இப்போது இரவு இரயில் எப்படி திருமேனி இல்லது செல்வேன் ?? "
நான் எவ்வளவோ சொல்லியும் என்னுள்ளும் வருத்தத்தை விதைத்துவிட்டார், என்ன சாமி இப்படி ஓர் திருவருளா ?? என்று எண்ணிவிட்டு,
உன்னை அனுபவித்தவரை திருவருளை தவிர எதையும் கொடுக்காத நீ இப்படி என்னை வைத்து ஓர் அடியார் வருந்தும் படி செய்து விட்டாயே !! என்ன நிகழ்த்துகிறாய் பாப்போம்,
என்று நிகழ்வை ரசிக்கும் ஆவலே மேலிட நிகழ்வை ரசிக்க தொடங்க
சிவ சிவ
நேற்று அந்த திருமேனி கிடைத்து இருந்தால், அந்த சிற்பி தான் கொண்டுவந்து கொடுத்து இருப்பார்,
அனால் மதியம் 2 மணிக்கு அழைத்து எனக்கு உடம்பு சரியில்லை, திருமேனியை தஞ்சாவூர் வரை கொண்டு வந்து தருகிறேன், யாராவது வந்து எடுத்துப்போக முடியுமா என்று கேட்க !!
நான் சிவ தம்பி ராஜேசை கூப்பிட்டு, எடுத்து வர முடியுமா என்று கேட்க,
அய்யா எனக்கு திருச்சியில் ஓர் வேலை இருக்கு அங்கு வரையில் கொண்டுவந்து தருகிறேன் என்று சொல்ல, அந்த திருமேனியை தீண்டி எடுத்தவரை விருப்பம் கொண்ட உயிரை கொண்டு அவர்களுக்கு ஆனந்தம் அருளி சிவ உணர்வோடு அந்த திருமேனியை கொண்டுவந்து திருச்சியை அடைய !!
அங்கு திருச்சியில் சிவத்தம்பி மணிகண்டன் இடம் சொல்லி வாங்கி வையுங்கள், நான் ஒருவரை அனுப்பி பெற்று கொள்கிறேன் என்று சொல்ல,
அவர்களோ பெரும் பாக்கியம் நாங்கள் வணங்கி வைத்து இருக்கோம் என்று ஆனந்தமாக சொல்ல,
திருச்சியில் உள்ள சிவஉறவை அழைத்து அந்த திருமேனியை பெற்று நாளை திண்டுக்கல் கொண்டு வந்து கொடுக்கவும் என்று சொல்ல, அவரும் நாளை எடுத்து வருகிறேன், அதுவரையில் அவர்களிடமே இருக்கட்டும் என்று சொல்ல
நான் மீண்டும் அழைத்து மணிகண்டன் ஐயா சாமி உங்கள் வீட்டில் இன்று இருந்து விட்டு காலையில் ஐயா வந்து வாங்கிகொள்வர் என்று சொல்ல !!
அவர்களுக்கு ஆனந்தமோ, ஆனந்தம், இதுவரையில் அவர்கள் வீட்டில் திருமேனி இல்லை, மதியம் சாமி அவர்கள் விட்டிற்கு வந்ததில் இருந்து அவருக்கு உணவு படித்து பூஜித்து, அவரோடு இன்று இரவு உறங்கி மகிழ்வது ஆனந்தமே !! என்று கூற
அவரோடு அவரது நண்பரும் வந்து எடுத்து வந்தார் என்று சொல்ல, அவரும் இன்னும் இருக்கிறாரா என்று கேட்ட, அவரே தொடர்பில் வர, ஐயா மொத்தம் முன்று திருமேனி உள்ளது, நீங்கள் ஓர் திருமேனியை உங்கள் விட்டிற்கு எடுத்து சென்று இரவு வைத்து இருந்து, காலையில் ஐயா வரும்போது கொடுத்து விடுங்கள் என்று சொல்ல, அவருக்கு ஆனந்தமோ, ஆனந்தம் !!
இத்தனை ஆன்மாக்களுக்கு ஆனந்தம் கொடுக்கவே நேற்று வரவேண்டிய திருமேனி வரவில்லை ,
இப்போது புரிகிறதா பெரும்கருணை பேராளன் திருவருள், அவனே நிகழ்த்துவது நிகழ்வில் நம்மை தொலைத்தல் காண முடியாது, நிகழ்த்துபவனை அனுபவித்து இருந்து, உணர்ந்து பாருங்கள் யாவும் திருவருள் என்று புலப்படும் !!
அந்த ஆன்மாக்கள் சிவத்தை அனுபவிக்கும், அதனுள் இருக்கும் மாயை விலகும், மெய் புலப்படும், ஆனந்தமே நிறையும்,
சிவத்தை உணர்வார் சிறப்படைவர் !!
இந்த நிகழ்வில் எனக்கும் ஓர் பங்கு கொடுத்து நிகழ்த்திய திருவருள் நாயகன் திருவடியை போற்றுகின்றேன் !
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே
குமாரசூரியர் அங்கமுத்து

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends