Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    239. உரியதவ
    239
    சோமீச்சுரம்
    கும்பகோணம் வியாழச் சோமேஸ்வரர் கோயிலில் உள்ள ஆறுமுகன்.
    போளூர் அருகில் உள்ள சோமேசர் கோயிலே அருணகிரியார் பாடிய தலம் எனக் கருத இடமிருக்கிறது என்பது வலையப்பட்டி கிருஷ்ணன் கருத்து
    தனனதன தனனதன தானான தானதன
    தனனதன தனனதன தானான தானதன
    தனனதன தனனதன தானான தானதன தனதான
    இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
    இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
    இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை யருள்வாயே


    உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
    ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
    னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு னுறுதூணில்


    உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
    உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
    உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு முயர்வாக


    வாரிளிக ளிசைமுரல வாகான தோகையிள
    மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
    வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட மதில்சூழும்


    மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
    மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
    மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் பெருமாளே




    இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும்
    இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
    இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே
    இரவின் இடை துயில் உகினும் - கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் உறங்கினாலும்யாரோடு பேசுகினும் - எவருடன் பேசினாலும்இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் -
    இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு தோள், வரிசையை களையும், இரு பதமும் அறு முகமும் - இரண்டுதிருவடிகளையும், ஆறு முகங்களையும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே - நான் ஓதும்படியான ஞானத்தைத் தந்து அருள்வாயாக


    உரிய தவ நெறியில் நம நாராயணாய என
    ஒரு மதலை மொழிய அளவில் ஓராத கோபமுடன்
    உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் உறு தூணில்


    உரிய தவ நெறியில் - சரியான தவ நெறியிலிருந்து நம நாராயணாய என - நமோ நாராயணாய என்று ஒரு மதலை மொழியஅளவில் - ஒப்பற்ற குழந்தையாகிய(பிரகலாதன்) சொன்னதும் ஓராத கோபமுடன் -அறிவில்லாத கோபத்துடன், உனது இறைவன் எதனில் உளன் ஓதாயடா எனு முன் - உன் கடவுள் எங்கு இருக்கிறான் சொல்லடா என்று கேட்டு முடியும் முன்னே


    உரமுடைய அரி வடிவதாய் மோதி வீழ விரல்
    உகிர் புதைய இரணியனை மார் பீறி வாகை புனை
    உவண பதி நெடியவனும் வேதாவும் நான் மறையும் உயர்வாக


    உறு தூணில் உரமுடைய அரி வடிவதாய் -அங்கிருந்த தூணில் வலிமை உள்ள சிங்கத்தின் உருவமாய் வந்து, மோதி வீழ இரணியனை மார்பீறி- இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து விரல் உகிர் புதைய - நகங்கள் பதிய மார்பைக் கிழித்துப் பிளந்து வாகை புனை -வெற்றிக் கொடி ஏற்றினவரும் உவண பதி நெடியவனும் - கருடனுக்குத் தலைவருமானநெடிய திருமாலும் (மகாபலிக்காக வளர்ந்தவனும்) வேதாவும் - பிரமனும் நான் மறையும் உயர்வாக - நான்கு வேதங்களும்மேன்மை பெறும்படியாக,

    படம்: சக்தி விகடன்


    வாரி அளிகள் இசை முரல வாகு ஆன தோகை இள
    மயில் இடையில் நடனம் இட ஆகாசம் ஊடுருவ
    வளர் கமுகின் விரி குலைகள் பூண் ஆரமாகியிட மதில் சூழும்


    வாரி அளிகள் இசை முரல - ரேகைகள் உள்ள வண்டுகள் இசை எழுப்ப வாகு ஆன தோகை இள மயில்- அழகுள்ள தோகையை உடைய இள மயில் இடையில் நடனம் இட - நடுவில்நடனம் செய்ய,ஆகாசம் ஊடுருவ - ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர் -வளர்ந்துள்ள கமுகின் விரி குலைகள் – கமுக மரங்களின் விரிந்த குலைகள் பூண் ஆரமாகியிட - பூணுதற்குரிய ஹாரம் போலஆபரணமாக விளங்க, மதில் சூழும் -மதில்கள் சூழ்ந்ததும்


    மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக
    மழம் விடையின் மிசையி(ல்) வரு (ம்) சோமீசர் கோயில் தனில்
    மகிழ்வு பெற உறை முருகனே பேணு வானவர்கள் பெருமாளே


    மருத அரசர் படை விடுதி வீடாக - மருத நிலத்து மன்னர்கள்
    பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் அமைந்த நாடி மிக மழம் விடையின் மிசையி(ல்) வரு(ம்) - மிகவும் விரும்பி
    இளமை வாய்ந்த ரிஷப வாகனத்தின் மேல் வருகின்ற சோமீசர் கோயில் தனில் -சோமீசர்என்ற நாமம் படைத்த சிவபிரான் சோமீச்சுரம்
    என்னும் பதியில் மகிழ்வு பெற உறை
    முருகனே - மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும்
    முருகனே, பேணு வானவர்கள் பெருமாளே -விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே


    படைவிடுதி இந்த பாடலில் குறிப்பிட்டிருப்பது சேயாற்றங்கறையில் நவிரம் என்னும் மலையில் காரியாண்டிக் கடவுள் கோயில் சேனைகளால் சூழப்பட்டிருந்ததைக் குறிக்கும் – வலையப்பட்டி கிருஷ்ணன்


    சுருக்கவுரை

    இரவின் இடை துயில் உகினும் யாரோடு பேசுகினும்
    இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும்
    இரு பதமும் அறு முகமும் யான் ஓத ஞானம் அதை அருள்வாயே – மிக அருமையான துதி
Working...
X