அவள் சுமங்கலி தான்...
திருமங்கலக்குடி மங்களாம்பிகை உடனுறை
பிராணநாதேஸ்வரர் திருக்கோயில் ...
சம்பந்தர், அப்பர் பாடல்
பெற்றது.கும்பகோணம்மயிலாடுதுறை சாலையில், ஆடுதுறைக்கு வடக்கே 2
கி.மீ..எமனுடன் போராடி தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டாள் சாவித்ரி.
ஆனால்,இன்னொரு பெண்ணோ இறைவனுடனேயே போராடி தன் கணவனை மீட்டிருக்கிறாள்.
குலோத்துங்க சோழனின் மந்திரி அரசுவரிப்பணத்தை இக்கோவில் திருப்பணிக்கு
செலவழிக்க மன்னன கோபமுற்று மரண தண்டனை விதித்து மந்திரியை கொன்று
விட,மந்திரியின் மனைவி உடனே மந்திரியின் பிணத்துடன் வந்து இத்தல
ஆலயம் வந்து ஈசனிடமும்,அம்பாளிடமும் முறையிடஈசன் உடனே மந்திரியின்
பிணத்துக்கு உயிர் கொடுத்தார்.அதனால் இங்கு ஈசன் பிராணநாதர் என்று
அழைக்கப்படுகிறார் .அம்பாள் மங்களாம்பிகை ஆனாள்..அப்போது அமைச்சரின்
மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம்,
"எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற
மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட
அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி
பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.இன்றும்
ஞாயிறு அன்று மதிய வேளையில் இத்தலம் வந்து கருவறை தீபம் ஏற்றி வழிபட
,இங்கு அம்பாள் சன்னதியில் மஞ்சள் தாலிக்கயிறு பிரசாதமாக
தருவார்கள்..இதனை வாங்கி பெண்கள் அணிந்து கொண்டால் சுமங்கலிகளாக பெண்கள்
வாழ்வாங்கு வளத்துடனும்,நலத்துடனும் வாழ்வர்..காரடையான் நோன்பின் நோக்கமே
பெண்கள் தாங்கள் சுமங்கலிகளாக இருக்க வேண்டி பிரார்த்திப்பது
தான்...ஞாயிறு மதியம் வெள்ளெருக்கு இலையில் சுவாமிக்கு நைவேத்தியம்
செய்யப்பட தயிர் சாதம் அடியவர்களுக்கு வழங்கபடுகிறது. இதை வாங்கி உண்டால்
தீராத நோய்கள் தீர்ந்துவிடுவதாக கூறுகிறார்கள்.இத்திருக்கோவிலில் உள்ள
அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ
ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தி ஆகும்.இங்கு வழிபட மாங்கல்ய
தோஷம், களத்திர தோஷம் அகலும்.ஒருசமயம் காலமாமுனிவருக்கு உண்டாக விருந்த
தொழுநோயை நவக்கிரகங்கள் தடுத்ததால், அந்நோய் கிரகங்களுக்கு பிடிக்கும் என
பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே, அவர்கள் இத்தலம் வந்து சுயம்புலிங்கமாக
எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி, தவமிருந்து சாபவிமோசனம்
பெற்றனர்.பிராணநாதர் கோயிலிலுள்ள சுவாமி விமானம் மங்கள விமானம், அம்பிகை
மங்களாம்பிகை, தல விநாயகர் மங்கள விநாயகர், தீர்த்தம் மங்கள தீர்த்தம்,
தலம் திருமங்களக்குடி என அனைத்தும் மங்களம் என்ற பெயரிலேயே
அழைக்கப்படுகிறது. திருவாவடுதுறை ஆதீன அருளாட்சி திருக்கோயில்
ஆகும் திருமங்கலக்குடி..."நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம' எனப்
பெற்றேன்?".

Dear you, Thanks for Visiting Brahmins Net!
JaiHind! Feel free to post whatever you think useful, legal or humer! Click here to Invite Friends