Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 17 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 கருணைய&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 17 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 கருணைய&

    ��


    अभीति स्तवम् 17 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��

    கருணையுடன் , என்னைக் , காப்பாய் !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    विषाद , बहुलात् - अहम् , विषय , वर्गतो , दुर्जयात् ,

    बिभेमि , वृजिन - उत्तर: , त्वत् - अनुभूति , विच्छेदत: ।

    मया , नियत , नाथवान् , अयम् , इति , त्वम् , अर्थापयन् ,

    दया - धन ! जगत् - पते ! दयित - रंग ! सम् - रक्ष ! माम् ।।

    ��

    விஷாத , பஹுளாத் - அஹம் , விஷய , வர்கதோ , துர்ஜயாத் ,

    பிபேமி , வ்ருஜிந - உத்தர: , த்வத் - அநுபூதி , விச்சேதத: |

    மயா , நியத , நாதவாந் , அயம் , இதி , த்வம் - அர்த்தாபயன் ,

    தயா - தந ! ஜகத் -பதே ! தயித - ரங்க ! , ஸம் - ரக்ஷ ! மாம் ||

    ��

    दया धन .... கருணைச் செல்வம், உடையவனே !

    जगत् पते ... எல்லா , உலகிற்கும் , தலைவனே !

    दयित रंग ... திரு வரங்கத்தை , விரும்புபவனே !

    वृजिन ....... பாபங்கள் ,

    उत्तर: ........ நிறைந்த ,

    अहम् ........ நான் ,

    विषाद ...... துன்பம் ,

    बहुलात् ..... நிறைந்ததும் ,

    दुर्जयात् ..... வெல்ல முடியாததுமான ,

    विषय ....... உலக சுகத் ,

    वर्गतो ....... தொகுதியினால் ,

    त्वत् ......... உன் ,

    अनुभूति ..... அனுபவத்திற்குத் ,

    विच्छेदत: ... தடை வரும் என்று ,

    बिभेमि ...... அஞ்சுகிறேன் !

    अयम् ........ "இவன் ,

    मया .......... என்னை ,

    नियत ........ எப்போதும் ,

    नाथवान् ..... தலைவனாய் , உடையவன் , "

    इति .......... என்று ,

    त्वम् .......... நீ

    अर्थापयन्.... பொருள் , கொண்டு ,

    माम् .......... என்னை ,

    सम् रक्ष ...... நன்கு , காத்து , அருள் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    ��

    * திருவரங்க நகரில் , விரும்பி , வாழும் , அரங்கனே !

    * அடியேன் , அளவற்ற , பாபங்களைச் , செய்து கொண்டே இருப்பவன் . இவ்வுலக சுகங்களோ , துன்பம் நிறைந்தவை. அவற்றை , விட்டொழிப்பதும் , எளிதன்று . அவற்றுள் , அடியேனும் , அகப்பட்டு , நிற்கிறேன் . இதனால் , உன்னை , அனுபவிப்பதற்குத் தடை வருவதைக் கண்டு , அஞ்சுகிறேன்.

    * நீ ஸர்வேச்வரன் . கருணையையே , பெரும் செல்வமாகக் கொண்டு , இருப்பவன். நீ தான் என் விஷயத்தில் , கருணை கொண்டு , என்னைக் காத்து , அருள வேண்டும் . நீ செய்வதை , யாரும், ஆக்*ஷேபிக்க முடியாது.

    * " இவன் , எப்போதும் , என்னையே , நாதனாகக் கொண்டவன் . ஆதலால் , இவனைக் காக்கும் கடமை , என்னுடையது ஆகிவிட்டது. " என்ற உன்கருத்தை , வெளிப்படையாகக் கொள்ளலாம் !


    ��


    Last edited by sridharv1946; 02-05-18, 10:41.
Working...
X