Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    243.அலங்கார முடிக்கிரண
    243
    திருக்குரங்காடுதுறை


    கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இந்த தலம் 20வது கிமீ தூரத்தில் உள்ளது தஞ்சாவூரில் இருந்து 57 கிமீ கணபதி அக்கிரகாரத்திற்கு அருகில் அருகில் பட்டுக்குடி தலத்தில் இருக்கும அற்புதமான பன்னிருகரங்களுடனுமானத் திருக்கோலம் இந்த பாடலுக்கு உந்துதலாக இருந்திருக்கலாம் என்பது கருத்து
    தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
    தனந்தான தனத்தனனத் தனதான
    அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
    கசைந்தாடு குழைக்கவசத் திரடோளும்
    அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத்
    தணிந்தாழி வனைக்கடகச் சுடர்வேலுஞ்
    சிலம்போடு மணிச்சுருதி சலங்கோசை மிகுத்ததிரச்
    சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதந்
    திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
    தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ
    இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யுழற்புகையிட்
    டிளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்
    இளங்காள முகிற்கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
    திருங்கான நடக்குமவற் கினியோனே
    குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
    கொடுந்தாரை வெயிற் கயிலைத் தொடும்வீரா
    கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
    குரங்காடு துறைக்குமரப் பெருமாளே

    பதம் பிரித்தல்

    அலங்கார முடி கிரண திரண்டு ஆறுமுகத்து அழகிற்கு
    அசைந்து ஆடு குழை கவச திரள் தோளும்
    அலங்கார = அலங்காரமான முடி = கிரீடம் கிரணத் திரண்டு = ஒளி திரண்டுள்ள ஆறுமுகத்து அழகில் =ஆறு முகங்களும் அழகுடன் அசைந்தாடும் =அசைந்தாடுகின்ற குழை = குண்டலம் கவசம் =கவசம் திரள் தோளும் = திரண்ட தோள்களின் மேல்


    அலம் தாமம் மணி திரளை புரண்டு ஆட நிரைத்த கரத்து
    அணிந்த ஆழி வனை கடக சுடர் வேலும்f


    அலம் தாமம் = திருப்தி தரும்படியான பூமாலைகள் மணித் திரளை = இரத்தின மணிக் கூட்ட மாலைகள் புரண்டு ஆட = புரண்டாடும்(காட்சி) நிரைத்த = வரிசையாக அமைந்த கரத்து =திருக்கரங்களில் அணிந்த ஆழி = அணியப்பட்டமோதிரம் வனைக்கடகம் = புனைந்துள்ள வீரகங்கணம் சுடர் வேலும் = ஒளி வீசும் வேலும்


    சிலம்போடு மணி சுருதி சலங்கு ஓசை மிகுத்து அதிர
    சிவந்து ஏறி மணத்த மலர் புனை பாதம்


    சிலம்போடு = சிலம்பு மணி = அழகிய சுருதி = வேதஒலி காட்டும் சலங்கு = சதங்கை இவைகள் ஓசை மிகுந்து அதிர = ஒலி மிகுந்து ஒலி செய்ய சிவந்து ஏறி மணத்த = செந்நிறம் மிக்கு நறுமணம் வீசும்மலர்ப் புனை = மலர்கள் புனைந்துள்ள பாதம் =திருவடிகள்


    திமிந்தோதிதனனத்
    தினந்தோறு நடிப்பது மன் புகல்வேனோ


    திமிந்தோதி= திமித்தோதி என்னும் வகையில்தினந்தோறும் நடிப்பது = நாள் தோறும் நடனம் செய்வது மன் = நிரம்ப புகல்வேனோ = நான் சொல்லித் துதிக்க மாட்டேனோ?


    இலங்கேசர் வனத்துள் வனக்குரங்கு ஏவி அழல் புகையிட்டு
    இளம் தாது மலர் திருவை சிறை மீளும்


    இலங்கேசர் வனத்துள் = இலங்கைக்குத் தலைவனான இராவணனுடைய (அசோக)வனத்தில் வனம் = அழகுள்ள குரங்கு ஏவி =குரங்காகிய அனுமனைக் அனுப்பி அழல் புகைஇட்டு = (அவரால்) இலங்கையில் நெருப்பின்புகையைக் கிளம்ப வைத்து இளம் தாது மலர் =மென்மை வாய்ந்த மகரந்தப் பொடியைக் கொண்ட செந்தாமரை மலரில் வீற்றிருக்கும்திருவை = இலக்குமியாகிய சீதையை சிறை மீளும் = சிறையை மீட்ட


    இளங் காளமுகில் கடுமை சரம் கோடு கரத்தில் எடுத்து
    இரும் கானம் நடக்கும் அவற்கு இனியோனே


    இளம் காள முகில் = இளமை வாய்ந்த கரிய மேக நிறம் கொண்டவரும் கடுமை = கொடிய சரம் =அம்பையும் கோடு = வளைந்த வில்லையும்கரத்தில் எடுத்த = கையில் கொண்டவரும் இருங் கானம் = இருண்ட காட்டில் நடக்கும் = (தந்தை சொற்படி) நடந்து வனவாசம் செய்தவருமானஅவற்கு = அந்த இராமனுக்கு இனியோனே =உகந்தவனே


    குலம் கோடு படைத்த அசுர பெரும் சேனை அழிக்க முனை
    கொடும் தாரை வெயிற்கு அயிலை தொடும் வீரா


    குலம் = கூட்டமான இனத்தாரையும் கோடுபடைத்த = கொடுமையும் கொண்டிருந்த அசுரர் பெரும் சேனை = அசுரர்களுடைய பெரிய சேனையை அழிக்க = அழிப்பதற்காக முனை =போர்க்களத்தில் கொடும் தாரை = கொடியகூர்மை வாய்ந்த வெயிற்கு = வெயில் போன்றஒளி பொருந்திய அயிலைத் தொடும் வீரா =வேலைச் செலுத்தின வீரனே


    கொழும் காவின் மலர் பொழிலில் கரும்பு ஆலை புணர்க்கும்
    இசை குரங்காடு துறை குமரப் பெருமாளே


    கொழும் காவின் = செழிப்புள்ள சோலையிலும்மலர்ப் பொழிலிலும் = பூஞ்சோலைகளிலும்கரும்பு ஆலை = கரும்பு ஆலைகள் புணர்க்கும்இசை = வேலை செய்யும் ஒலி கேட்கும்
    குரங்காடு துறைக் குமரப் பெருமாளே =குரங்காடு துறை என்னும் ஊரில் வீற்றிருக்கும் குமரப் பெருமாளே

    சுருக்க உரை

    ஒப்புக:
    1 மன் புகல்வேனோ
    கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரை
    கூறாம னீய அசனுகர் தருசேடங் ---------- திருப்புகழ், ஆசாரவீன
    2. குரங்கேவி யழற்புகைவிட்ட
    இடுகனல் குரங்கொடு நெடுங்கடல் நடுங்கிட
    எழுந்தருள் முகுந்தனன் மருகோனே --------- திருப்புகழ்,தலங்களில்
    3. குரங்காடு துறைக் குமரப் பெருமாளே
    குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே ----- சம்பந்தர் தேவாரம்
Working...
X