Announcement

Collapse
No announcement yet.

Poem in Tamil - in fractions

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Poem in Tamil - in fractions

    Chamarthi Srinivas Sharma:
    கச்சி ஏகம்பன்
    "ரொம்ப விசித்ரமாய் கவி பாடறதுல, காளமேகப்புலவர் ஸமர்த்தர். ஒருதரம் அவர்கிட்ட பெரிய கவிஞர்கள்ளாம் வந்து, "ஒங்களால ஒண்ணாம் நம்பரை விட, எண்ணிக்கைல கொறஞ்ச நம்பர்களை வெச்சு கவி பாட முடியுமா?"-ன்னு சாலஞ்ச் பண்ணினா.
    இவரோ ஆஶுகவி! அகிலாண்டேஶ்வரியோட அனுக்ரஹம் பெற்றவர். ஒடனேயே அழகா ஒரு கவிதை பாடினார்.
    "முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
    அக்கால ரைக்கால்கண்டு அஞ்சாமுன் - விக்கி
    இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
    ஒருமாவின் கீழரைஇன் றோது"
    இதுல.... முக்கால் எண்ணிக்கைலேர்ந்து, கீழ் அரை வரைக்கும் இருக்கற எல்லா நம்பர்களும் வந்துடும்.
    இந்தக் கவிதையோட தாத்பர்யம் என்னன்னா.....
    முதுமையும், யமபயமும், வ்யாதியும், ஸாவும் வர்றதுக்கு முன்னாடியே, கச்சி (காஞ்சி) ஏகம்பனை ( ஏகாம்பரேஶ்வரனை) இப்போலேர்ந்தே ஸ்தோத்ரம் பண்ணு; .......
    இன்று ஒது!......
    "வயஸானாவிட்டு இந்த ஸ்தோத்ரம் பண்றதையெல்லாம் வெச்சுக்கலாம், இப்போவே என்னத்துக்கு?" ன்னு இருந்தா, இப்போ எப்டி இருக்கோமோ, அப்டித்தான் ஸாகறப்போவும் இருப்போம்.
    அதைத்தான் சொல்றார்.
    முக்காலுக்கு ஏகா முன் - முக்கால்-ங்கறது..... நம்பர்.
    நம்மளோட ரெண்டு காலோட, மூணாவதா ஒரு கால்!
    அதான்! ஒரு குச்சியை பிடிச்சிண்டு நடக்கற காலம் வர்றதுக்கு முன்னாடி.....
    முன்னரையில் வீழாமுன் - அரைங்கறது நம்பர்.
    முன் தலைமுடி நரைச்சு போறதுக்குள்ள......
    இல்லாட்டா,
    யாருக்காவுது.... 'மூச்சு இழுத்துண்டு இருக்கு, இனி பொழைக்கமாட்டான்னு' வந்துட்டா, அந்தக் காலத்ல,வீட்டோட முன் பக்கம் ரேழி [நடைவாசல்] இருக்கும். செத்ததும் எடுத்துண்டு போறதுக்கு ஈஸியா இருக்கும்னுட்டு, அந்த ரேழில கொண்டு வந்து போட்டுடுவா!
    அப்டி, ரேழில இழுத்துப் போடற..... அந்தக் காலம் வர்றதுக்கு முன்னாடி.....
    அக்காலரைக்கால் கண்டு - கால், அரைக்கால் நம்பர்கள் வருது.
    அந்த காலனோட, யமனோட அடிச்சுவடு [வரும் தடயம்] கண்டு, பயப்படறதுக்கு முன்னாடி.....
    அதாவுது யமன் வர்றதுக்கு முன்னாடி.....
    ஏன்னா.... இப்போ என்ன வேணாலும் பேசுவோம். ஆனா, கண்ணு முன்னால நமக்கு யமன் வரச்சே, வெளில சொல்லவும் முடியாது, வரமாட்டேன்னு அடம் பண்ணவும் முடியாது.....!
    அப்போதான்.... "நா.... இருக்கேண்டா!"னு வந்து நம்மளோட பயத்தை போக்கறவன்.... பரமேஶ்வரன்.
    விக்கி இருமாமுன் - இருமா..ங்கறது நம்பர்.
    வயோதிகத்ல வர.... கபம், இருமல், விக்கல்.... இதெல்லாம் வர்றதுக்கு முன்னாடி......
    அதாவுது..... ஒடம்பு தெம்பாக இருக்கும் போதே!.....
    மாகாணிக்கேகா முன் - மாகாணிங்கறதும் ஒரு நம்பர்.
    ஊருக்கு வெளில.... பெரிய காணி பரப்பு நெலம் இருக்கும், மயானத்துக்காக!
    அந்த மயானத்துக்கு கொண்டு போறதுக்கு முன்னாடி.....
    கச்சி ஒரு மாவின் கீழரை இன்றோது - ஒரு, கீழரை ங்கறது நம்பர்.
    காஞ்சிபுரத்ல, ஒரு மாமரத்துங்கீழ வஸிக்கும், அந்த ஏகாம்ரேஶ்வரரை.....
    ப்போலேர்ந்தே.... ஸ்தோத்ரம் செய்யி!"........"
    நம பார்வதி பதயே
    ஹர ஹர மஹாதேவா
    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்
Working...
X