Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 22 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 22 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

    ��


    अभीति स्तवम् 22 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��


    அரங்கா ! அச்சத்தைப் போக்கி , அருள் !




    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    कलि , प्रणिधि , लक्षणै: , कलित , शाक्य , लोकायतै: ,

    तुरुष्क , यवन - आदिभि: , जगति , जृंभमाणम् , भयम् |

    प्रकृष्ट , निज , शक्तिभि: , प्रसभम् - आयुधै: , पंचभि: ,

    क्षिति , त्रिदश , रक्षकै: , क्षपय ! रंग - नाथ ! क्षणात् ।।

    ��

    கலி , ப்ரணிதி , லக்ஷணை: , கலித , சாக்ய , லோகாயதை: ,

    துருஷ்க , யவந - ஆதிபி: , ஜகதி , ஜ்ரும்பமாணம் , பயம் |

    ப்ரக்ருஷ்ட , நிஜ , சக்திபி: , ப்ரஸபம் - ஆயுதை: , பஞ்சபி: ,

    க்*ஷிதி , த்ரிதச , ரக்ஷகை: , க்ஷபய ! ரங்க - நாத ! க்ஷணாத் ||

    ��

    रंग नाथ ..... திருவரங்கப் பெருமானே !

    कलि ........ கலி புருஷனுக்கு ,

    प्रणिधि ...... பரிவாரம் ,

    लक्षणै: ...... போன்ற ;

    कलित ....... பௌத்தர் ,

    शाक्य ....... சார்வாகர் ,

    लोकायतै:... இவர்களோடு ,

    तुरुष्क ....... துருக்கர் ,

    यवन ......... யவநர் ,

    आदिभि: .... முதலியோரால் ;

    जगति ....... உலகில் ,

    जृंभमाणम् ...வளர்ந்து வருகின்ற ,

    भयम् .........அச்சத்தை ;

    प्रकृष्ट ....... அதிகமான ,

    निज ..........உனது

    शक्तिभि: ....சக்தியாக இருப்பதும் ;

    क्षिति त्रिदश .அந்தணர்களைக் ,

    रक्षकै: ........காப்பவையுமான ;

    पंचभि: ........ஐந்து ,

    आयुधै: .......திரு ஆயுதங்களால் ,

    क्षणात् ........கணப் பொழுதில் ,

    प्रसभम् ........பலத்தைப் பிரயோகித்து ,

    क्षपय ..........ஒழித்து , அருள் !


    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    ��

    * திருவரங்கப் பெருமானே !

    * இப்பொழுது (700 ஆண்டுகளுக்கு முன்) , உலகில் , பௌத்தர்களும் , சார்வாகர்களும் , தங்கள் மதங்களைப் , பிரசாரம் செய்து , வைதிக மதத்தை அழிக்கப் பார்க்கின்றனர்.

    * கலிபுருஷன் , விடுத்த பணியாளர்களோ எனக் கருதும்படி , துருக்கர் , யவநர் முதலியோரும் , வைதிக மதத்தினருக்குப் , பல வகையிலும் , தீங்கு விளைவிக்க முற்பட்டுள்ளனர். இவர்களால் , நாட்டில் , அச்சம் , வளர்ந்து கொண்டே போகிறது.

    * உன் , திரு ஆயுதங்கள் , ஐந்தும் , (திருவாழி , திருச் சங்கு , கதை , கத்தி , வில் ) மிகுந்த சக்தி உடையன. அவை , அந்தணர்களுக்குத் , தீங்கு விளையாமல் , காப்பவை.

    * அந்த ஆயுதங்களைக் கொண்டு , நாட்டுக்கு நேர்ந்துள்ள அச்சத்தைப் , பலத்தைக் , கொண்டாவது , உடனே , போக்கி , அருள வேண்டும் !








    ��

    Last edited by sridharv1946; 07-05-18, 10:01.
Working...
X